என் மலர்
ஈரோடு
- உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
- ரூ.42 லட்சத்து 35 ஆயிரம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோ வில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 21 உண்டியல்கள் வைக்கப் பட்டு உள்ளன.
கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டிய ல்கள் ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட்டு எண்ண ப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
கோவில் செயல் அலுவ லர் மேகனா, பவானி சங்க மேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சுவாமி நாதன், சத்தியமங்கலம் அறநிலையத்துறை ஆய்வாளர் சிவ மணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இந்த பணியில் வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவ-மாணவர்கள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதில் ரொக்க பணமாக ரூ.42 லட்சத்து 35 ஆயிரத்து 150-ஐ காணிக்கையாக உண்டியலில் பக்தர்கள் செலுத்தி இருந்தனர். மேலும் 103 கிராம் தங்கம், 290 கிராம் வெள்ளி ஆகிய வற்றையும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.37 அடியாக சரிந்து உள்ளது.
- அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.37 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 762 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 2,300 கன அடியாக உயர்த்தி திறந்து விடப்பட்டு வருகிறது.
காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.50 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 8.39 அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.83 அடியாகவும் உள்ளது.
- விபத்தில் 4 மாத பெண் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை:
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள சக்தி பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 17-ந்தேதி இவரது மனைவி பாரதி (25), மகன் ஸ்ரஏயன் (4) மற்றும் 4 மாத குழந்தை மேக்னா ஆகியோருடன் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை ராஜேஷ் ஓட்டி சென்றார்.
ஈரோடு மேட்டூர் ரோட்டில் அம்மாபேட்டை அடுத்து கோனேரிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் அதிகாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை உள்ள தனியார் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் 4 மாத குழந்தை மேக்னா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் 4 மாத பெண் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இரவு நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என ஒலிபெருக்கி வைத்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
- சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் கரையில் சிறுத்தையின் உருமல் சத்தத்தை தச்சங்காட்டு வலசை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கேட்டுள்ளார்.
அறச்சலூர்:
ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சியில் ஓம்சக்தி நகர் உள்ளது. அறச்சலூர் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள இந்த நகரில் சண்முகசுந்தரம் என்ற விவசாயிக்கு சொந்தமான 7 மாத கன்றுக்குட்டியை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரவில் மர்மவிலங்கு ஒன்று இழுத்து சென்றுவிட்டது.
அந்த பகுதியில் மழைபெய்த மறுநாள் நடந்த இந்த சம்பவத்தின் போது பதிந்த விலங்கின் கால்தடத்தை வைத்து வனத்துறையினர் கன்றுக்குட்டியை இழுத்து சென்ற விலங்கு எந்த வகையை சேர்ந்தது என்பதை தெரிவிக்காமல் உள்ளனர். மேலும் அந்த மர்மவிலங்கை அறிந்து கொள்ள அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்களையும் பொருத்திவிட்டு விலங்கை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.
விலங்கின் நடமாட்டம் அந்த பகுதியில் உள்ளது என்பதை உறுதி செய்த பின்னர் அறச்சலூர் பகுதியில் அமைந்துள்ள ஊர்களான கிழக்கு தலவுமலை, ஓம்சக்திநகர், சங்கரன்காடு, வேமாண்டம்பாளையம், வெள்ளிவலசு, ஊஞ்சப்பாளையம், பழைய பாளையம், முருங்க தொழுவு, மேற்கு தலவு மலை, கத்தக்கொடிக்காடு, மூலக்கடை, மீனாட்சி புரம், வீரப்பம்பாளையம், ஊசிப்பாளையம், நடுப்பாளையம் மற்றும் மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறும், இரவு நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என ஒலிபெருக்கி வைத்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
கன்றுக்குட்டியை இழுத்துச்சென்ற விலங்கு எது? என்பது குறித்து வனத்துறையினர் இன்னும் அறிவிக்காத நிலையில் நேற்று அந்த விலங்கை பிடிக்க கூடுதலாக ஒரு கூண்டும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களால் மக்கள் மிகுந்த பீதிக்குள்ளாகியுள்ளனர்.
அறச்சலூர் பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவரின் தோட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளதாகவும், அந்த புகைப்படத்தில் உள்ள பதிவு தேதிகள் 18 மற்றும் 19 என்றும் அத்துடன் புகைப்படம் எடுக்கப்பட்ட நேரமும் பதிவாகியிருந்ததால் மக்கள் வெளியான தகவலால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதனால் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் கரும்பு பயிர்களுக்கான நீர்பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகள் உயிர்பயம் காரணமாக நின்றுபோயுள்ளன.
இந்நிலையில் அறச்சலூரில் இருந்து கொடுமுடி நோக்கி பிரிந்து செல்லும் கீழ்பவானி கிளை சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் கரையில் சிறுத்தையின் உருமல் சத்தத்தை தச்சங்காட்டு வலசை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கேட்டுள்ளார்.
இதனை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையை தேடி கொண்டுள்ளனர் என்ற தகவல் வாட்ஸ் அப்பில் வைரலானதை அடுத்து பீதி அறச்சலூரை கடந்து சுற்றுப்புற பகுதிகளையும் ஆட்கொண்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தோட்டத்தில் ராமகிருஷ்ணன் இறந்து கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குளத்தூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். (வயது 44). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்த ன்று கல்லூரி அருகில் உள்ள ஒரு தனியார் தோட்ட த்தில் ராமகிருஷ்ணன் இறந்து கிடந்தார்.
அவருடைய உடலை பெருந்துறை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்ற னர்.
- சண்முகம் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விட்டார்.
- சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு, அக். 19-
ஈரோடு மாவட்டம் சூர ம்பட்டி பாரதிதாசன் தெரு வை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). இவ ரது மனைவி சிந்தாமணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சண்முகம் கட்டிட வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஒரு மாதமாக முத்தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகம் 2-வது மாடியில் வெளிப்பக்கம் சுவரை பூசுவதற்காக சாரத்தின் சவுக்கு கட்டை மீது நின்று கொண்டிருந்தார்.
அப்போது சண்முகம் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதையடுத்து அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து அவரது மனைவி சிந்தாமணி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டையன் யானையை பிடிக்கும் பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- யானை நடமாட்டத்தை வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதி யில் ஊருக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதம் செய்த கட்டையன் யானையை வனத் துறையினர் பிடித்து பவானி சாகர் வனச்ச ரகத்தில் உள்ள மங்கள ப்பட்டி வனப்பகுதி யில் விட்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வனப்பகுதியில் விட்ட கட்டையன் யானை பவானி சாகர் அணை நீர் தேக்கத்தை ஒட்டியுள்ள சித்தன் குட்டை, அய்ய ம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பகல் நேர த்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது.
ஊருக்குள் நுழைந்த யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கிராம மக்கள் விடுத்த கோரிக்கை யை ஏற்று வனத்துறையினர் கட்டையன் யானையை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் இருந்து கபில்தேவ் மற்றும் முத்து ஆகிய 2 கும்கி யானைகளை அழைத்து வந்தனர்.
வனத்துறை ஊழியர்கள், கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் வனப்பகுதியில் முகாமிட்டு யானையை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் யானை அடர்ந்த வனப்ப குதிக்குள் சென்று விட்ட தால் கட்டையன் யானையை பிடிக்கும் பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படு வதாகவும், கட்டையன் யானையை பிடிக்க கொண்டுவரப்பட்ட 2 கும்கி யானைகளும் மீண்டும் ஆனைமலை புலி கள் காப்பகம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவி த்தனர்.
இருப்பினும் கட்டை யன் யானை நடமாட்டத்தை வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- சம்பவத்தன்று சந்திரசேகர் விஷ மருந்து குடித்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே சின்ன கொடிவேரி பகுதி குருசாமி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 43). இவரது மனைவி சாந்தி (37).
சந்திரசேகர் சில நாட்க ளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மன வேதனை அடைந்த சந்திரசேகர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று சந்திரசேகர் விஷ மருந்து குடித்துள்ளார். இதையடுத்து உறவி னர்கள் அவரை மீட்டு சத்தி யமங்கலம் தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து அவரது மனைவி சாந்தி பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாக சரிந்து உள்ளது.
- அணையில் இருந்து 2,600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு, அக். 19-
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,489 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 2,000 கன அடியாக உயர்த்தி திறந்து விடப்பட்டு வருகிறது.
காலிங்கராயன் பாசனத்திற்கும், பவானி ஆற்றுக்கும் நீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை என் பாசனத்திற்கு 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.50 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 8.56 அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.83 அடியும் உள்ளது.
- வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகிறார்கள்.
- வாகன ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.
அரச்சலூர்:
அரச்சலூர் அருகே மலையை ஒட்டியுள்ள ஓம் சக்தி நகரில் சண்முகசுந்தரம் என்ற விவசாயின் தொழு வத்தில் கட்டியிருந்த 7 மாத கன்று குட்டியை அடை யாளம் தெரியாத மர்ம விலங்கு ஒன்று இழுத்து சென்றது.
இது குறித்து தனது தொழுவத்திற்கு விவசாயி சண்முக சுந்தரம் வந்தார். அப்போது கன்று குட்டியை மர்ம விலங்கு தூக்கி சென்றது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து அரச்சலூர் வனத்துறை யினருக்கு தகவல் அளித்த தின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் மர்ம விலங்கின் நடமாட்டம் குறித்து அறிந்து கொள்ள அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
மேலும் அந்த மர்ம விலங்கை பிடிக்க அந்த பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து வனத்து றையினர் அரச்சலூர் பகுதியில் வாகன ஒலிபெருக்கி மூலம் இரவில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை செய்தனர்.
இதனால் அறச்சலூர் பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டு ள்ளது. இந்த நிலையில் அறச்சலூரை சேர்ந்த தமிழரசு என்பவரது தொழுவத்தில் சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக வாட்ஸ்-அப் போன்ற சமூக வளை தலங்களில் தகவல் வைரலானது.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
- தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
- ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 850-க்கு விளைபொருட்கள் விற்பனையாகின.
சிவகிரி:
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 222 மூட்டைகளில் 7 ஆயிரத்து 15 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.65.59 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.84.50 காசுகள், சராசரி விலை யாக ரூ.81.40 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்து 227-க்கு விற்பனையானது.
இதேபோல மொடக்குறி்ச்சி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது.
இதில் 11 ஆயிரத்து 258 எண்ணிக்கையிலான 4 ஆயிரத்து 569 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ ரூ.24.49 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.26.60 காசுகள், சராசரி விலையாக ரூ.25.81 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 543-க்கு விற்பனையானது.
இதனையடுத்து நடந்த தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலத்தில் 119 மூட்டைகள் கொண்ட 3 ஆயிரத்து 178 கிலோ எடை யுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.
விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ77 .69 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.82.82 காசுகள், சராசரி விலையாக ரூ.82.29 காசுகள் என்ற விலை களிலும், 2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.61.60 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.73.89 காசுகள்சராசரி விலையாக ரூ.68.87 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 080-க்கு விற்பனையானது.
மொத்தம் சிவகிரி மற்றும் மொடக்குறி்ச்சி ஒழுங்கு முறை விற்பனைக்கூ டங்களில் ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 850-க்கு விளை பொருட்கள் விற்பனையாகின.
- மைக்ரோ நுண்ணூட்ட கலவையை டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது.
- விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி பொம்மன்பட்டி பிரமாண்டியூர் பகுதியை சேர்ந்த விவசாயி செங்கோ ட்டையன். இவர் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார்.
தற்போது கரும்பு பயிர் 60 நாள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பயிர் வளர்ச்சி அடையவும், அதிகமாக மகசூல் பெறவும் மைக்ரோ நுண்ணூட்ட கலவையை டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது.
இதனை சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
மேலும் விவசாயி செங்கோட்டையன் இதுகுறித்து கூறும்போது:- கரும்பினுடைய வளர்ச்சிக்கு இந்த மைக்ரோ நுண்ணூ ட்டக் கலவையை பயிர்கள் மீது தெளித்தால் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடையும் மற்றும் அதிக மகசூல் கிடை க்கும்
மேலும் மண்ணில் உள்ள நுண்ணூட்ட பற்றாக்குறை வினால் இவை பயன்படுத்த வேண்டி உள்ளது. சராசரி யாக ஒரு முறை இந்த டிரோன் மூலம் நுண்ணூ ட்டத்தை தெளிக்க ஒரு ஏக்கருக்கு சராசரி ரூ.900 செலவாகிறது. இருந்தும் பயிர்களின் வளர்ச்சிக்காக இதை செய்ய வேண்டி உள்ளது என்றார்.






