பவானிசாகர் அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு நீர் திறப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாக சரிந்து உள்ளது.அணையில் இருந்து 2,600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு நீர் திறப்பு
Published on

ஈரோடு, அக். 19-

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,489 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 2,000 கன அடியாக உயர்த்தி திறந்து விடப்பட்டு வருகிறது.

காலிங்கராயன் பாசனத்திற்கும், பவானி ஆற்றுக்கும் நீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை என் பாசனத்திற்கு 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.50 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 8.56 அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.83 அடியும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com