என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாண்மை சுற்றுலா சென்ற கொடுமுடி விவசாயிகள்
- கொடுமுடி வட்டாரத்தை சேர்ந்த 20 விவசாயிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
- மஞ்சள் சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகள் ஆர்வமுடன் தொிந்து கொண்டனர்.
கொடுமுடி:
வேளாண்மை - உழவர் நலத்துறையின் வேளா ண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கொடுமுடி வட்டாரத்தை சேர்ந்த 20 விவசாயிகள் தெலுங்கானா மாநிம் நிஜம தாபாத் கண்டுனர் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் இந்தியாவின் மிகப் பெரிய வேளாண் விற்பனை கூடத்திற்கு சென்றனர். அங்கு ஸ்பைசஸ்போர்ட் துணை இயக்குநர் சுந்த ரேசன் மஞ்சள், மக்காச்சோளம், கம்பு, நெல் என அனைத்து பயிர்களும் இ-நாம் மூலம் விற்பனை செய்யப்படுவது, அதில் விவசாயிகள் பதிவு செய்யும் முறை, வியாபாரிகள் விலை நிர்ணயம், விற்பனை நடை முறைகள் குறித்து எடுத்து கூறினார்.
பின்னர் மஞ்சள் குர்க்குமின் பிரித்தெடுத்தல் ஆய்வகத்திற்கு சென்றனர். அங்கு மஞ்சள் ரகங்கள், மஞ்சள் தரக்கட்டுப்பாட்டு முறைகள், மஞ்சள் ஈரப்பதம், குர்க்குமின் அளவு ஆகியவை குறித்து எடுத்து கூறப்பட்டது.
கமரப்பள்ளி சுமார்ட் அக்ரோ புட் பார்க் மற்றும் மஞ்சள் ஆராச்சி நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட ரகங்களை பார்வையிட்டனர். மஞ்சள் ஆராச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் மகேந்தர் மஞ்சள் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் குளிர்பதன கிடங்கிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு மஞ்சள், சோளம் போன்ற பல வகையான விவசாய பொருள்கள் பதப்படுத்தும் முறைகளை பார்வையிட்டனர்.
இந்த கண்டுநர் சுற்றுலா மூலம் மஞ்சள் சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகள் ஆர்வமுடன் தொிந்து கொண்டனர். இது மிகவும் பயனள்ளதாக இருந்தது என கூறினர்.
இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.






