என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • நவம்பர் 2-ந்தேதி இறந்த தங்கள் முன்னோர்களின் ஆன்மா இளைப்பாறுதல் பெறவேண்டி கல்லறையில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.
    • திண்டுக்கல்- திருச்சி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் சிறப்பு திருப்பலி நடத்தி வழிபட்டனர்.

    திண்டுக்கல்:

    உலகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்த வர்களால் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் இறந்த தங்கள் முன்னோர்களின் ஆன்மா இளைப்பாறுதல் பெறவேண்டி கல்லறையில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    அதன்படி திண்டுக்கல்- திருச்சி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் நேற்றே கல்லறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட னர். அங்கிருந்த முட்செடி கள் மற்றும் புதர்களை அகற்றி கல்லறை களில் புதிய வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை கல்லறைகளுக்கு பலூன்கள் கட்டி பறக்கவிட்டும், விதவிதமான அலங்காரம் செய்தும் பூக்களால் மாலை கள் சாற்றியும் அலங்கரித்த னர். அதன்பிறகு தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    பங்குத்தந்தையர்கள் சார்பில் சிறப்பு திருப்பலியும் நடத்தப்பட்டது. இதேபோல் ஏ.வெள்ளோடு, சிறுநாய க்கன்பட்டி, ராமையன்பட்டி, மேற்குமரியநாதபுரம், சவேரியார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்த கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    • தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அய்யலூர் ஆட்டுச் சந்தையில் அதிக அளவு வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர். வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனையானது.
    • ரூ.2 கோடிக்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வியாழக்கிமை தோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகள், கோழி உள்ளிட்ட கால்நடை களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    திருச்சி, கரூர், சேலம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கால்நடைகளை வாங்க வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. புதுமண தம்பதிகள் தலைதீபாவளிக்கு விருந்துக்கு வருவார்கள். அவர்களுக்கு அசைவ உணவு தயாரித்து பரிமாறுவதற்காக அதிக அளவில் ஆடுகள் வாங்க வந்தனர்.

    மேலும் திருவிழாக்கள், விஷேசங்கள் தொடர்ந்து வருவதால் விற்பனை அதிகரித்துள்ளது. வெளியூர்களில் வேலை பார்க்கும் பொதுமக்கள் தீபாவளியையொட்டி அடுத்த வாரம் ஊர் திரும்புவார்கள். அய்யலூர் ஆட்டுச் சந்தையில் அதிக அளவு வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர். வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனையானது.

    10 கிலோ கொண்ட ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நாட்டுக்கோழி 1 கிலோ ரூ.350 முதல் ரூ.380 வரை விற்பனையானது. இதனை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் சுமார் ரூ.2 கோடிக்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதிகாலையிலேயே சந்தை கூடி 9 மணிக்கு முன்பே அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது. வருவாய் அதிகரித்த போதும் வாரச்சந்தையில் குடிநீர், மின்விளக்கு, சுகாதார வசதிகள் இல்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வசூலில் அதிக கவனம் செலுத்தும் தனியார் நிர்வாகம் இதனை கண்டு கொள்வதில்லை. தற்போது மழைகாலம் என்பதால் சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்குகிறது. இதன் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    எனவே வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே புத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட பூசாரிப்பட்டி, குருந்த ம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவி கள் குருந்தம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பூசாரி ப்பட்டி பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து மாண வர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கையில்,

    தங்கள் குழந்தைகள் குளிக்காமலும், சரியான உடைகளை உடுத்தி வராமலும் பள்ளிக்கு வருவதால் அவர்கள் மீது துர்நாற்றம் வீசுவதாக ஆசிரியர்கள் கேலி, கிண்டல் பேசி உள்ளனர். இதனால் மற்ற மாணவர்களிடமும் அவர்கள் சேர்ந்து விளையா டவோ, சாப்பிடவோ முடியாமல் தனித்து விடப்பட்டுள்ளனர்.

    கிராமப்புரங்களில் இருந்து வரும் மாணவர்கள் நாகரீகமான உடை அணிந்து எப்படி வருவார்கள். சாதாரண உடையில் தான் பள்ளிக்கு வரமுடியும். ஆனால் அவர்களை ஆசிரியர்களே கேலி செய்தால் மாணவர்கள் எவ்வாறு நடத்துவார்கள்.

    எனவே சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர். இதனையடுத்து புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர்களிடம் விசா ரணை நடத்த அதிகாரி களுக்கு பரிந்துரைக்கப்டும் என்றும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களை பள்ளிக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார்.

    இதனையடுத்து கிராம மக்கள் குழந்தைகளை பள்ளி அனுப்ப ஒத்து க்கொண்டனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி ஆசிரியர்கள் மீது நட வடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் பயன்படுத்த ப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
    • அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்ட துடன் மேலும் சம்மந்தப்பட்ட டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள நிலக்கோட்டை, விளாம்பட்டி, அணை ப்பட்டி, வத்தலக்குண்டு, விருவீடு, பட்டிவீரன்பட்டி பகுதியில் அரசு, தனியார் பஸ்கள், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் பயன்படுத்த ப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதனையடுத்து ஆர்.டி.ஓ. சுரேஷ் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜோஸ்வின், போக்குவரத்து ஆய்வாளர் ஜெய்சிங் மற்றும் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் பஸ், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்ப ட்டது. மேலும் சம்மந்தப்பட்ட டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மீண்டும் இது போன்று ஹாரன்கள் பயன்படுத்தி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • கொடைக்கானலில் முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்திய வர்களுக்கு ரூ.4.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • நகர்பகுதி மட்டுமல்லாது மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகர்ப குதியில் மின்துண்டிப்பு செய்யப்பட்ட இணைப்பு களில் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்துவ தாக மின்வாரியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து வத்தலக்குண்டு கோட்ட ெபாறியாளர் கருப்பையா தலைமையில் அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தி னர்.

    நகர்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்ப ட்டோர் மின்துண்டிப்பு செய்த பின்னரும் முறைகே டாக மின்சாரத்தை பயன்ப டுத்தியது கண்டுபிடிக்க ப்பட்டது. இதனைதொ டர்ந்து முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்திய வர்களுக்கு ரூ.4.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    நகர்பகுதி மட்டுமல்லாது மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ப்படும் என வத்தலக்குண்டு கோட்ட பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.

    • நிலக்கோட்டை ஒன்றியத்தில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக 100 நாள் வேலை திட்ட பணியாளர் களுக்கு சம்பளம் வழங்கவில்லை.
    • மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஒன்றி யத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. இதில் சுமார் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பெரும்பாலான பொது மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.

    கடந்த 3 மாதத்திற்கு மேலாக 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்களுக்கு சம்பளத்தை விரைவில் பணம் வழங்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரி களிடம் கேட்டபோது கடந்த 3 மாதங்களாக பல்வேறு ெதாழில்நுட்ப குறைபாடு களால் 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. விரைவில் சம்பளம் வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றனர். மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேட்டி, சட்டை என பண்டிகை காலங்களில் வலம் வந்த பலரும் ஆயத்த ஆடைகளுக்கு மாறிவிட்டனர்.
    • அந்த வகையில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இன்று குட்டி ஜப்பானாகவே மாறிவிட்டது

    செந்துறை:

    ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் குட்டி ஜப்பானாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகர் திகழ்ந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆர்டர்கள் குவிந்து வருவதால், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    காலத்துக்கு ஏற்ப பொதுமக்களின் ரசனைகளும், உண்ணும் உணவு மட்டுமின்றி, அணியும் ஆடைகளும் மாறிவிட்டன. வேட்டி, சட்டை என பண்டிகை காலங்களில் வலம் வந்த பலரும் ஆயத்த ஆடைகளுக்கு மாறிவிட்டனர். அந்த வகையில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இன்று குட்டி ஜப்பானாகவே மாறிவிட்டது

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம். இங்குள்ள செந்துறை, சிறுகுடி, கோட்டையூர், புதுப்பட்டி, பரளி, வத்திப்பட்டி, சாணார்பட்டி, கோபால்பட்டி, கம்பிளி யம்பட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும் இந்த தொழில் விளங்குகிறது. 500 ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களையும் கொண்டுள்ளது நத்தம். இங்கு, 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயது ஆண்களுக்கும் ஆயத்த சட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    பாலிஸ்டர், மோனோ காட்டன், பிளாஃபில், ரேமண்ட் காட்டன்,என பல்வேறு ரக துணிகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆயத்த ஆடைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் கேரளா, பெங்களூர், ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோயமுத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

    இந்த ஆண்டு வழக்கம்போல் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்காக, வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வர உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துகொண்டு இருக்கின்றனர்.

    இதையடுத்து ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நத்தத்தில் ஒரு ஜவுளி பூங்காவை மாநில அரசு அமைத்து இத்தொழிலை உயர்த்த வேண்டும் என ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இது தொடா்பாக நத்தத்தைச் சோ்ந்த லோகநாதன் கூறிய தாவது:-

    நத்தம் ஆயத்த ஆடைகளின் குறைந்த விலை ரூ.100 முதல் அதிகபட்ச விலையே ரூ.700 ஆக இருப்பதால், நடைபாதை வியாபாரிகள் மட்டுமின்றி, சிறிய கடைகள் மற்றும் இரு சக்கர வாகன ங்களில் விற்பனையில் ஈடுபடுவோரும் இந்த ஆடைகளை வாங்க ஆா்வம் காட்டுகின்றனா். ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல வருடங்களாக கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளோம். இதுவரை எதுவும் செயல்படுத்தவில்லை. மேலும் இந்த வருடம் பொதுமக்கள் வேலைபார்க்கும் நிறுவனங்கள் மில்களில் சம்பளம், போனஸ் எப்போது வரும் என்றும், அவ்வாறு வந்தால்தான் ரெடிமேட் கடைகளுக்கு போக முடியும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் என்றார்.

    நத்தத்தில் ரெடிமேடு ஆடை 20 ஆண்டுகளாக உற்பத்தி செய்து கொண்டிருக்கிறேன். இங்கு உற்பத்தி செய்யும் உற்பத்தி ஆடைகளை குறைந்தபட்சம் ரூ.150-ல் இருந்து ரூ.600 வரை தயாரித்து விற்பனை செய்கின்றோம். 300க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களும் 5000 குடும்பங்களும் இந்த வேலையில் ஈடுபட்டு உள்ளார்கள். இங்கு உற்பத்தி செய்யும் சட்டைகள் நல்ல தரமாகவும் உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றோம்.மேலும் கடந்த வருடம் ஆர்டர்கள் குவிந்தன. ஆனால் இந்த வருடம் பாதி அளவே ஆர்டர்கள் வந்துள்ளன என்றார்.

    தீபாவ ளிக்கு நாங்கள் தினமும் கூலிக்கு தான் ஆடைகள் தைத்து கொடுக்கி ன்றோம். ஆனால் எங்களுக்கு ரூ.500 -க்கு குறைவாகவே கூலி கிடைக்கிறது. இது எங்களுக்கு போதவில்லை. இது தினமும் வேலை கிடைக்க கஷ்டமாக உள்ளது. ஒருசில இடங்களில் வேலை மந்தமாக இருக்கிறது என்று கூறினார்.

    • கோடை சீசன் காலத்தில் ஒரு கோடி மலர்கள் பூத்துக்குலுங்கும்.
    • சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தை தடுக்க குளிர் சீசனில் பூக்கும் பூச்செடிகளை நடும் பணி தொடங்கியுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி அருகே அமைந்துள்ள பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளின் மிகச்சிறந்த தேர்வாக உள்ளது.

    இங்கு கோடை சீசன் காலத்தில் ஒரு கோடி மலர்கள் பூத்துக்குலுங்கும். தற்போது குளிர் சீசன் தொடங்கியுள்ள நிலையில் பூங்காவில் குறைந்த அளவு பூக்களே உள்ளன. எனினும் சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தை தடுக்க குளிர் சீசனில் பூக்கும் பூச்செடிகளை நடும் பணி தொடங்கியுள்ளது.

    பொதுவாக குளிர் சீசனில் சில வகை பூக்கள் மட்டுமே பூக்கும் என்பதால் அதற்கு ஏற்றாற்போல மலர்பாத்திகளை தயார் செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பாத்தி அமைக்கும் பணி முடிவடைந்தபிறகு மலர் நாற்றுகள் நடப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீசனுக்கு தகுந்தவாறு விதவிதமான மலர்கள் பூத்துக்குலுங்கும். தற்போது காஸ்மோஸ் மலர்கள் என்படும் பிங்க் நிற பூக்கள் பூத்து குலுங்குகின்றன. 8 இதழ்கள் கொண்ட இந்த மலர்கள் 143 பூக்கள் என்றும், ஐ லவ் யூ பூக்கள் என்றும் அழைக்கப்படும். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவதால் அதன்முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    குறிப்பாக கொடைக்கானல் வரும் காதலர்கள் இந்த பூக்களை அதிகம் விரும்பி புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.

    • காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் காணப்படுகிறது.
    • சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் குறைந்த அளவு வெயில் மற்றும் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் காணப்படுகிறது.

    மாறுபட்ட இந்த சூழ்நிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று பகல் முழுவதும் மேகமூட்டம் நிலவிய நிலையில் அவ்வப்போது மழை பெய்து பின்னர் இரவில் கனமழையாக கொட்டி தீர்த்தது.

    இன்று காலை முதல் கடுமையான பனிமூட்டமும், சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லாத நிலையில் மாணவ-மாணவிகளும் சிரமத்துடனேயே பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. காலை நேரத்தில் நீண்டநேரம் இதேபோல் பனிமூட்டம் நிலவியதால் ஏரிச்சாலையில் ஒரு சில இடங்களில் தீமூட்டி குளிர்காய்ந்தும் வந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு இந்த சீதோஷ்ண நிலை ரம்மியமாக இருந்தாலும் வாகன ஓட்டிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

    • திண்டுக்கல் பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே பா.ஜ.க. கொடிக்கம்பம் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
    • பா.ஜ.க.வினர் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    திண்டுக்கல்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வீட்டு முன்பு இருந்த அக்கட்சியின் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இந்த கம்பத்தை மீண்டும் நடுவதற்கு முயன்றபோது போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து தமிழகம் முழுவதும் 1400 இடங்களில் பா.ஜ.க. கொடிக்கம்பம் ஊன்றப்படும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    அதன்படி திண்டுக்கல் பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே பா.ஜ.க. கொடிக்கம்பம் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கொடிக்கம்பம் நடக்கூடாது என தெரிவித்தனர்.

    ஏற்கனவே இருந்த கம்பத்தில் கொடியேற்ற வந்துள்ளதாக பா.ஜ.க.வினர் தெரிவித்த போதும் போலீசார் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இருந்தபோதும் பா.ஜ.க.வினர் அங்கிருந்து செல்லாமல் கொடியேற்றும் முயற்சியில் ஈடுபட்டதால் போலீசாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து பா.ஜ.க.வினர் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து கொடியேற்றும் முயற்சியில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் தனபாலன், போஸ், இளைஞரணி அன்புஹரிகரன், நிர்வாகிகள் மல்லிகா, இளையராஜா, மகேஷ், சதீஸ்குமார், முத்துக்குமார், ஆனந்தி, மணிகண்டன் உள்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    • எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல் அனுப்பும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் செங்கலை கையில் ஏந்தி பஸ் நிலையத்தில் ஊர்வலமாக சென்றனர்.

    திண்டுக்கல்:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பல வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இதனை அடுத்து மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல் அனுப்பும் போராட்டம் நடந்தது.

    மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடந்த இந்த நூதன போராட்டத்தில் கட்சியினர் செங்கலை கையில் ஏந்தி பஸ் நிலையத்தில் இருந்து மத்திய அரசை கண்டித்து ஊர்வலமாக சென்றனர்.

    காமராஜர் சிலை அருகே சென்றபோது ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தி னர். ஊர்வலம் செல்ல அனுமதியில்லை, கலைந்து செல்ல வலியுறுத்தியதை அடுத்து செங்கல் அனுப்பும் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நள்ளிரவு வீட்டின் மாடியில் இருந்து மூர்த்தி தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
    • தவறி விழுந்தாரா? அல்லது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தாரா? என உறுதிப்படுத்தப்படவில்லை.

    திருச்சி:

    திருச்சி கம்பரசம் பேட்டை வெள்ளான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆர். மூர்த்தி (வயது 48) இவர் சமயபுரம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம்போல் டூட்டிக்கு சென்ற அவர் மாலை வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் நள்ளிரவு வீட்டின் மாடியில் இருந்து மூர்த்தி தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

    தவறி விழுந்தாரா? அல்லது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தாரா? என உறுதிப்படுத்தப்படவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மூர்த்திக்கு 2 மனைவிகள். முதல் மனைவி தஞ்சாவூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருச்சி மாநகர குற்றப்பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் மரியா என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

    போலீஸ் ஏட்டு மர்மமாக இறந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியிலும் அந்தப் பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×