என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கொடைக்கானலில் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.4.60 லட்சம் அபராதம்
- கொடைக்கானலில் முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்திய வர்களுக்கு ரூ.4.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
- நகர்பகுதி மட்டுமல்லாது மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகர்ப குதியில் மின்துண்டிப்பு செய்யப்பட்ட இணைப்பு களில் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்துவ தாக மின்வாரியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து வத்தலக்குண்டு கோட்ட ெபாறியாளர் கருப்பையா தலைமையில் அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தி னர்.
நகர்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்ப ட்டோர் மின்துண்டிப்பு செய்த பின்னரும் முறைகே டாக மின்சாரத்தை பயன்ப டுத்தியது கண்டுபிடிக்க ப்பட்டது. இதனைதொ டர்ந்து முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்திய வர்களுக்கு ரூ.4.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
நகர்பகுதி மட்டுமல்லாது மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ப்படும் என வத்தலக்குண்டு கோட்ட பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.






