என் மலர்
நீங்கள் தேடியது "Little Japan is turning into a snore"
- வேட்டி, சட்டை என பண்டிகை காலங்களில் வலம் வந்த பலரும் ஆயத்த ஆடைகளுக்கு மாறிவிட்டனர்.
- அந்த வகையில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இன்று குட்டி ஜப்பானாகவே மாறிவிட்டது
செந்துறை:
ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் குட்டி ஜப்பானாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகர் திகழ்ந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆர்டர்கள் குவிந்து வருவதால், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காலத்துக்கு ஏற்ப பொதுமக்களின் ரசனைகளும், உண்ணும் உணவு மட்டுமின்றி, அணியும் ஆடைகளும் மாறிவிட்டன. வேட்டி, சட்டை என பண்டிகை காலங்களில் வலம் வந்த பலரும் ஆயத்த ஆடைகளுக்கு மாறிவிட்டனர். அந்த வகையில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இன்று குட்டி ஜப்பானாகவே மாறிவிட்டது
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம். இங்குள்ள செந்துறை, சிறுகுடி, கோட்டையூர், புதுப்பட்டி, பரளி, வத்திப்பட்டி, சாணார்பட்டி, கோபால்பட்டி, கம்பிளி யம்பட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும் இந்த தொழில் விளங்குகிறது. 500 ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களையும் கொண்டுள்ளது நத்தம். இங்கு, 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயது ஆண்களுக்கும் ஆயத்த சட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பாலிஸ்டர், மோனோ காட்டன், பிளாஃபில், ரேமண்ட் காட்டன்,என பல்வேறு ரக துணிகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆயத்த ஆடைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் கேரளா, பெங்களூர், ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோயமுத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு வழக்கம்போல் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்காக, வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வர உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துகொண்டு இருக்கின்றனர்.
இதையடுத்து ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நத்தத்தில் ஒரு ஜவுளி பூங்காவை மாநில அரசு அமைத்து இத்தொழிலை உயர்த்த வேண்டும் என ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடா்பாக நத்தத்தைச் சோ்ந்த லோகநாதன் கூறிய தாவது:-
நத்தம் ஆயத்த ஆடைகளின் குறைந்த விலை ரூ.100 முதல் அதிகபட்ச விலையே ரூ.700 ஆக இருப்பதால், நடைபாதை வியாபாரிகள் மட்டுமின்றி, சிறிய கடைகள் மற்றும் இரு சக்கர வாகன ங்களில் விற்பனையில் ஈடுபடுவோரும் இந்த ஆடைகளை வாங்க ஆா்வம் காட்டுகின்றனா். ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல வருடங்களாக கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளோம். இதுவரை எதுவும் செயல்படுத்தவில்லை. மேலும் இந்த வருடம் பொதுமக்கள் வேலைபார்க்கும் நிறுவனங்கள் மில்களில் சம்பளம், போனஸ் எப்போது வரும் என்றும், அவ்வாறு வந்தால்தான் ரெடிமேட் கடைகளுக்கு போக முடியும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் என்றார்.
நத்தத்தில் ரெடிமேடு ஆடை 20 ஆண்டுகளாக உற்பத்தி செய்து கொண்டிருக்கிறேன். இங்கு உற்பத்தி செய்யும் உற்பத்தி ஆடைகளை குறைந்தபட்சம் ரூ.150-ல் இருந்து ரூ.600 வரை தயாரித்து விற்பனை செய்கின்றோம். 300க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களும் 5000 குடும்பங்களும் இந்த வேலையில் ஈடுபட்டு உள்ளார்கள். இங்கு உற்பத்தி செய்யும் சட்டைகள் நல்ல தரமாகவும் உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றோம்.மேலும் கடந்த வருடம் ஆர்டர்கள் குவிந்தன. ஆனால் இந்த வருடம் பாதி அளவே ஆர்டர்கள் வந்துள்ளன என்றார்.
தீபாவ ளிக்கு நாங்கள் தினமும் கூலிக்கு தான் ஆடைகள் தைத்து கொடுக்கி ன்றோம். ஆனால் எங்களுக்கு ரூ.500 -க்கு குறைவாகவே கூலி கிடைக்கிறது. இது எங்களுக்கு போதவில்லை. இது தினமும் வேலை கிடைக்க கஷ்டமாக உள்ளது. ஒருசில இடங்களில் வேலை மந்தமாக இருக்கிறது என்று கூறினார்.






