என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • தினமும் 8 கி.மீ. துாரம் அதாவது 10,000 காலடிகள் நடந்தால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் 28 சதவீதம், இதய நோய் தாக்கம் 30 சதவீதம் குறைகிறது என பேசினார்.

    திண்டுக்கல்:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல்லில் இத்திட்டத்தை கலெக்டர் பூங்கொடி கொடி அசைத்து தொடங்கி வைத்து பொதும க்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஆர்.எம்.காலனி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் தொடங்கி இ.வி.ஆர். ரோடு, எம்.வி.எம்., கல்லூரி திருப்பம், ஆர்.எம். காலனி குறுக்கு சாலைகள் வழியாக மீண்டும் கூடைப் பந்தாட்ட மைதானத்தில் முடியும் வகையில் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இச்சாலைகள் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வண்ணம் முழுமையாக செப்பனிடப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் வசதிக்காக ஆங்காங்கே சாய்வு இருக்கைகள் மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்த ப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் நடைபயி ற்சியில் புத்துணர்வுடன் கலந்துகொள்ள ஆரோக்கியம் குறித்த வாசகங்கள் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டு ள்ளன. இந்தியாவில் உடல் சார்ந்த நோய்கள் அதிகமாக உருவாவதை தடுத்திடும் வகையில் அனைத்திற்கும் அடிப்படை பயிற்சியாக நடைபயிற்சி அமையும். அதனை அனைத்து பொதுமக்களும் பின்பற்றி டும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி தினமும் 8 கி.மீ. துாரம் அதாவது 10,000 காலடிகள் நடந்தால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் 28 சதவீதம், இதய நோய் தாக்கம் 30 சதவீதம் குறைகிறது என அறியப்படுகிறது. மேலும் நடைபயிற்சியானது நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. எனவே, தமிழக அரசால் முனைப்புடன் செயல்படுத்தப்படும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அனைவரும் பின்பற்றி நலம் பெற வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன், மேயர் இளமதி, நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன், டாக்டர் வரதராஜன், அனிதா மற்றும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கோவில் பூசாரி நியமனத்தில் இருதரப்பினர் போலீசில் புகார் அளித்தனர்.
    • பூசாரியை நியமிக்கும்வரை திருவிழா நடத்துவதில் சாத்தியம் இல்லை என்று ஒரு தரப்பினர் பிடிவாதமாக இருப்பதால் திருவிழா நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மம்மானியூர் பகுதியில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவிற்காக தற்காலிக பூசாரி ஒருவரை ஒருதரப்பினர் நியமித்தனர். இதற்கு மற்ெறாரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் புதிய பூசாரியை நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.

    ஆனால் தற்போது உள்ள பூசாரியே பூஜைகளை செய்ய வேண்டும் என மற்றொரு தரப்பினர் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இருதரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பூசாரியை நியமிக்கும்வரை திருவிழா நடத்துவதில் சாத்தியம் இல்லை என்று ஒரு தரப்பினர் பிடிவாதமாக இருப்பதால் திருவிழா நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

    எனவே தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு சுமூகதீர்வு காணவேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில் வாய்க்காலில் தொழிலாளி தவறிவிழுந்திருக்கலாம் என்று போலீசார் தெரி வித்தனர்.
    • அடையாள தெரியாத நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சிதம்பரனார் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இன்று காலை ஒருவர் விழுந்து கிடந்தார். இதுகுறித்து தீயணைப்பு த்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையில் அங்கு வந்த தீயணைப்புத்து றையினர் கால்வாயில் விழுந்தவரை மேலே தூக்கியபோது அவர் இறந்துகிடந்தார். பின்னர் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல் நகரில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில் வாய்க்காலில் அவர் தவறிவிழுந்திருக்கலாம் என்று போலீசார் தெரி வித்தனர். இறந்தவர் யார் என்பது குறித்தும் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமலை பகுதிகளில் கனமழை பெய்ததில் 18வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.
    • போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் இருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் நேற்று கனமழை பெய்தது.இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.இந்த நிலையில் நேற்று சிறுமலை பகுதிகளில் கனமழை பெய்ததில் 18வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

    இதனால் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில்,வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில்,சிறுமலை பிரிவு வனவர் சரவணன் மற்றும் வனச்சரக பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    பின்னர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் இருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை பின்னர் விட்டுவிட்டு கனமழையாக கொட்டி தீர்த்தது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 260 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை பின்னர் விட்டுவிட்டு கனமழையாக கொட்டி தீர்த்தது.

    இதன்காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மட்டுமின்றி கொடைக்கானல், பழனி, நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல் பகுதியில்பெய்து வரும் மழை காரணமாக பல கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. அதனை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்து வருகின்றனர். மேலும் மழை சமயத்தில் மரங்கள் மற்றும் மின்வயர்கள் விழுந்து சேதம் ஏற்பட்டால் அதனை கண்காணித்து சீரமைக்கவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

    இதனிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மழை காரணமாக சாலையோரம் வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் மார்க்கெட், பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளி வியாபாரிகளும் சிரமம் அடைந்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 260 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது. திண்டுக்கல் 65.6, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 5, பழனி 24, சத்திரப்பட்டி 10.2, நத்தம் 75.5, நிலக்கோட்டை 26, வேடசந்தூர் 15.6, புகையிலைஆராய்ச்சி நிலையம் 14, காமாட்சிபுரம் 14.2, பிரையண்ட் பூங்கா 5 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கி நேரு நினைவு மேல்நிலைப் பள்ளியில் மைதானம் மற்றும் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனை கடந்து வகுப்பறைக்குள் செல்லும் நிலை உள்ளது.
    • மேலும் கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி கிடப்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் அவலத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் நேரு நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 12 வரை வகுப்புகள் உள்ளன. இங்கு மேட்டுப்பட்டி, பேகம்பூர், முத்தழகுபட்டி, தோமையார் புரம், பாறைபட்டி உள்ளிட்ட திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கி நின்ற வண்ணம் உள்ளது. நேரு நினைவு மேல்நிலைப் பள்ளியில் மைதானம் மற்றும் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனை கடந்து வகுப்பறைக்குள் செல்லும் நிலை உள்ளது.

    மேலும் கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி கிடப்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் அவலத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 1000 மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் சுகாதார வளாகம் முறைப்படியும், போதுமானதாக வும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    திறந்த வெளியில் தேங்கும் மழைநீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது என்று மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடு வீடாகவும், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீர், திறந்தவெளி சிறுநீர் கழிக்கும் நிலையை பள்ளி நிர்வாகம் சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிய செயலியால் 3 நபர்கள் மூலமாக கடவு சொல்லை பயன்படுத்தி தான் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியும். கடவுச்சொல் வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது.
    • இதனால் கடந்த 2 மாதங்களாக அடிப்படைப் பணிகள் செய்வதற்கு தேவையான பணத்தை எடுக்க முடியவில்லை.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பகுதியில் 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அரசு பொதுமக்களுக்கு பல்வேறு அடிப்படை பணிகளை செய்து வருகின்றது.

    இதை நிர்வாகம் செய்ய தலைவர் ,துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் உள்ளனர். தற்போது தமிழக அரசு ஊராட்சி நிர்வாகத்தை நவீனப்படுத்தும் வகையில் மாநில அரசின் நிதியை வங்கிக் கணக்கு மூலமாக நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    வங்கி கணக்குகளை நிர்வாகம் செய்ய ஊராட்சித் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகிய 3 நபர்கள் மூலமாக கடவு சொல்லை பயன்படுத்தி தான் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியும். கடவுச்சொல் வருவதற்கு தாமதம் ஏற்படுவதால் பணம் எடுக்க முடியவில்லை.

    இதனால் கடந்த 2 மாதங்களாக அடிப்படைப் பணிகள் செய்வதற்கு தேவையான பணத்தை எடுக்க முடியவில்லை. மேலும் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவ தால் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் உரிய தொகை வழங்க முடியவில்லை. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எலப்பார்பட்டியை சேர்ந்தவர் சித்ராதேவி (வயது35). இவரும் அதே ஊரைச் சேர்ந்த நாகசூர்யா (22) என்பவரும் சந்தேகபப்படும்படியாக நின்றுகொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந் தனர். வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையிலான போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தி 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் ஆலோசனையின்படி கைது செய்யப்பட்ட 2 பேரும் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டனர். நாகசூர்யா மீது ஏற்கனவே கஞ்சா விற்றது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக அறநிலையத்துறைக்கு புகார் வந்தது.
    • அறநிலையத்துறையினர் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்டனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமாக பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் குத்தகை முறையில் விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் சண்முகநதி, கோதைமங்கலம் ஆகிய பகுதியில் முருகன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக அறநிலையத்துறைக்கு புகார் வந்தது.

    அதன்பேரில் திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், தாசில்தார் லட்சுமி (கோவில் நிலம்), முருகன் கோவில் உதவி ஆணையர்லட்சுமி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்றனர்.

    பின்னர் நிலஅளவீடு செய்து கோவில் நிலங்களை மீட்டனர். தொடர்ந்து இது கோவிலுக்கு சொந்தமானது, யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை வைத்தனர். இதுகுறித்து அறநிலையத்துறையினர் கூறும்போது, மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும் என்றனர்.

    • அந்நிய மரங்கள் விதைப்பு திட்டத்தின் கீழ், அரசு எடுத்த, தவறான கொள்கை முடிவால், அந்நிய மரங்களின் வளர்ச்சி தமிழக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியது.
    • கொடைக்கானல் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் 200 ஏக்கருக்கு மேல் உள்ள மனோரத்தினம் சோலை அணைப்பகுதியில் அதிகமாக விளைந்துள்ள சவுக்கு மரங்களையும் அகற்ற வேண்டும்.

    கொடைக்கானல்:

    சோலை மரங்கள் நிறைந்த வனப்பகுதி விவசாயிகளை காக்கும் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. மனிதன், பறவைகள், விலங்குகள் மட்டுமல்லாது, அனைத்து உயிர்களுக்கும், தேவையா னதாக வனப்பகுதி விளங்கி வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில், சோலைக்காடுகளின் ஊடுருவலில் அந்நிய மரங்களான பைன், யூகலிப்ட்ஸ் மரங்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.

    கடந்த காலங்களைவிட தற்போது அந்நிய மரங்களின் வளர்ச்சி அதிகரித்து காணப்படுகிறது. 1980 ஆம் ஆண்டு காலகட்டத்தில், அந்நிய மரங்கள் விதைப்பு திட்டத்தின் கீழ், அரசு எடுத்த, தவறான கொள்கை முடிவால், அந்நிய மரங்களின் வளர்ச்சி தமிழக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியது.

    குங்கிலியம் எனப்படும் யூகலிப்ட்ஸ், சவுக்கு மற்றும் பைன் மரங்கள், கொடைக்கானல் வனப்பகுதியில், சுமார் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பெருகி, நீர் நிலைகளையும், கொஞ்சம் கொஞ்சமாக, வறட்சி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மேல்மலை கிராமமான மன்னவனூர் பகுதியில் உள்ள எழும்பள்ளம் ஏரி புல்வெளி உற்பத்தியில் பெருகிவரும் சவுக்கு மரங்களால் பசும்பொன்வழிகளும் அழியும் நிலை ஏற்பட்டு ள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மலை கிராமங்களில் தங்கள் வாழ்வாதாரத்தை நோக்கி குடி வந்த மன்னவனூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இயற்கையாக அமைந்த புல் வெளிகளின் ஊடே, 7 சதுப்பு நிலங்களின் பள்ளங்களை தடுத்து விவசாய பாசனத்திற்காக அமைத்ததுதான் எழும்பள்ளம் ஏரி.

    பழங்காலத்தில் ஏரியை சுற்றி புல்வெளிகள் மட்டுமே இருந்துள்ளது. அதன் பிறகு சமவெளிகளில் சீமைக்கருவேலம் பேராபத்தாக இருந்து வருவது போல் மலைப்பகுதிகளுக்கு நீர் ஆதாரத்தை உறிஞ்சும் அந்நிய வகை மரங்கள் விவசாயத்தை அழிக்கும் பேரழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சவுக்கு மரங்களின் பரவல் எழும்பள்ளம் ஏரி பகுதியில் கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்துள்ளது.

    மன்னவனூர் எழும்பள்ளம் புல்வெளி மற்றும் ஏரி நீர் ஆதாரம் என இரண்டும் சுற்றுச்சூழலுக்கும் வன உயிரினங்கள் மற்றும் ஆடு மாடு மேய்ச்சலுக்கு அப்பகுதி அத்தியாவசியமாக உள்ளது. பரந்து விரிந்து பச்சை உடை அணிந்தது போல் பசுமை போர்வை போர்த்திய புல்வெளிகளு க்கு இடையே அமைந்துள்ள ஏரி பசுமையை நாடிவரும் சுற்றுலா பயணிகளின் பார்வையில் காண்பதற்கு கண்கவர் வண்ணமாக காட்சி அளிக்கிறது.

    வனப்பகுதியில் அந்நிய மரங்களை அகற்றும் வனத்துறையினர் வருவாய் நீலங்களை ஒட்டி அமைந்துள்ள நீர் ஆதாரத்தை உறிஞ்சும் அந்நிய மரங்களை அகற்றுவது எப்போது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. நீதிமன்றத்தின், கண்டிப்பான தொடர் அறிவுறுத்தலுக்கு பின்னர் வனத்துறை மன்னவனூர் பகுதியில் பாரிக்கோம்பை என்ற வன எல்லைப்பகுதிகளில், 50 ஹெக்டேர் அளவுக்கு சவுக்கு மரங்களை அகற்றி சோலை மரக் கன்றுகளை நடவு செய்துள்ளனர். தற்போது அந்நிய மரங்களை வனத்துறை அகற்ற தொடங்கி உள்ளது. இது விவசாயிகளுக்கு சற்று மகிழ்ச்சி தரும் விஷயம் என்றாலும் வருவாய் பகுதியான மன்னவனூர் எழும்பள்ளம் ஏரியை சுற்றியுள்ள புல்வெளிகளில் அன்னிய மரங்களை அகற்றி புல்வெளிகள் அழியாமல் சுற்றுச்சூழல் மாசு படாமல் பாதுகாக்க, வருவாய்த்துறை முன்வர வேண்டும் என்று, விவசாயிகள் எதிர்பார்க்கி ன்றனர்.

    முற்காலத்தில் மன்னவனூர் எழுபள்ளம் புல்வெளி எப்படி இருந்தது என்று புகைப்படங்களிலும் காணொளிகளில் மட்டுமே காண முடியும் என்ற நிலை உருவாகி விடும் என்பது இப்பகுதி மக்களின் அச்சமாக உள்ளது. மன்னவனூர் சூழல் சுற்றுலா தலமாக ஏற்கனவே இயங்கி வருவதையும் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இயற்கை புல்வெளிகளை காண சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு வரவேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு அனைவரும் இணைந்து, புல்வெளிகளை காக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடியிடம் இது குறித்து கவனத்திற்கு கொண்டு சென்ற போது அம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற விரிவான முதல் கட்ட ஆய்வுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார். இதே போல் கொடைக்கானல் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் 200 ஏக்கருக்கு மேல் உள்ள மனோரத்தினம் சோலை அணைப்பகுதியில் அதிகமாக விளைந்துள்ள சவுக்கு மரங்களையும் அகற்ற வேண்டும்.

    மேலும் இவ்வகை மரங்களை அகற்றும் பணிகளை விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து செய்ய இருக்கும் சூழலில் அவர்களுக்கு இழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் அப்பணிகளை அவர்களுக்கு ஒப்படைத்தால் சிறப்பாக செய்து முடிப்பார்கள். சுற்றுச்சூழலையும், குடிநீர் ஆதாரத்தையும் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சி னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • சிறார் குறும்படங்களை பொறுத்தவரை தனி நபர், குழு உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
    • நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்த மாணவி கீர்த்தனா மாநில அளவில் இறுதி போட்டியில் பங்கேற்றார்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், சிறார் குறும்படம், வானவில் மன்றம், வினாவிடை சார்ந்த போட்டிகள், பள்ளி, ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

    சிறார் குறும்படங்களை பொறுத்தவரை தனி நபர், குழு உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல் என்ற தனிநபர் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அ.குரும்பபட்டி நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்த மாணவி கீர்த்தனா மாநில அளவில் இறுதி போட்டியில் பங்கேற்றார்.

    பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேர் கொண்ட இவரது குழுவிற்கு முதல் இடம் கிடைத்தது. முன்னதாக கல்விச் சுற்றுலாவாக மாணவியை அமெரிக்கா அழைத்துச் செல்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்காக பாஸ்போர்ட், விசா தயாரானபோதும், பள்ளி கல்வித்துறை தாமதத்தால் அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை. இதனைத் தொடர்ந்து மாணவி கீர்த்தனா இன்று ஜப்பானுக்கு புறப்படுகிறார்.

    தனது குடும்பத்தினருடன் சென்னை சென்ற கீர்த்தனா தனது வெற்றி குறித்து கூறுகையில், மாவட்ட அளவில் தேர்வான எனக்கு கடந்த ஆண்டு சென்னையில் பயிற்சி முகாம் நடந்தது. அங்கு முன்னணி இயக்குனர்கள் பயிற்சி அளித்தனர். இதனையடுத்து 14 பேர் கொண்ட குழு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட நகருக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. அதன் பிறகு தற்போது ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறேன். பிளஸ்-2 விற்கு பின்பு அரசு திரைப்பட கல்லூரியில் இயக்குனர் பிரிவில் பட்டம் படித்து திரைத்துறை இயக்க நுட்பங்களில் புதுமையை புகுத்துவதை லட்சியமாக கொண்டுள்ளேன். தற்போது ஜப்பானுக்கு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார். 

    • கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • பள்ளிக்கு தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியரும் சரியாக வராததை கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் அருகே கீழ்மலை வடகவுஞ்சி ஊராட்சி கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    வடகவுஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் தோழி ஆனந்தன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவபாலன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் துளசிதாசன் வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 15-ந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஒருவர் பணியாற்ற வேண்டும். ஆனால் தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியரும் சரியாக வராததை கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளிக்கு வந்திருந்த உதவி ஆசிரியர் புனிதன் கூறுகையில் இப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் வீரராம்பிரபு கள்ளக்கிணறு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு மாற்றப்பட்டார். கருவேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியர் இல்லை. நான் ஒருவர் மட்டும் தான் உள்ளேன்.

    நான் அலுவலக வேலையாக செல்வது. கல்வி உயர் அதிகாரிகள் பல பணிகளை செய்ய சொல்வதால் என்னாலூம் இவ்வளவு தூரம் பள்ளிக்கு வந்து செல்ல முடியவில்லை என்றார்.

    பின்னர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×