என் மலர்
திண்டுக்கல்
- பெண்மைக்கு எத்த னையோ சிறப்புகள் இருந்தா லும், அதில் அனைத்திலும் உச்சமாய் இருப்பது தாய்மை,
- சிறு குழந்தைகளு க்கான உணவூட்டும் முறைகள் மற்றும் குழந்தை வளர்ச்சி பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைெபற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசியதாவது:-
பெண்மைக்கு எத்த னையோ சிறப்புகள் இருந்தா லும், அதில் அனைத்திலும் உச்சமாய் இருப்பது தாய்மை, ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தாய்மை என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. தாய்மை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வரப்பிரசாதம் மற்றும் மறுபிறப்பாகும்.
நம்முடைய உடலும், மனமும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. மனதில் ஏற்படும் மாற்றங்கள். முக்கியமாக கவலைகள் உடலையும், உடலில் ஏற்படும் மாற்றங்கள் மனதையும் பெரிதும் பாதிக்கின்றது. பாது காப்பான தாய்மைக்கு. கர்ப்ப காலத்தில் தனக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்கள், கர்ப்ப கால கவனிப்புகள், பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளு க்கான உணவூட்டும் முறைகள் மற்றும் குழந்தை வளர்ச்சி பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஏனெனில், பாதுகா ப்பான தாய்மையை பின்பற்றாததால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு சம்மந்தப்பட்ட பிரச்சினை களால் பாதிக்கப்படுகி ன்றனர். இவர்களுடைய அஜாக்கிரதையினால் ஊனமுற்ற குழந்தைகளின் பிறப்பு விகிதமும், குழந்தை களின் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.
பாது காப்பான தாய்மைக்காக கூறப்பட்டுள்ள அறிவுரை களை தாய்மார்கள் பின்பற்றுவதன் மூலம் தாய் சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும். அவ ர்களின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய முடியும். அறிவுள்ள ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெ டுத்து ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தையும் உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் கிளைச் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
வடமதுரை திடீர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் வீரபாபு என்ற குட்டி (வயது 35) என்பவர் பைக் திருட்டு வழக்கில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு இவருக்கும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு கைதிக்கும் எங்கே தூங்குவது என்ற பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இது கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். வீர பாபுவை மற்றொரு தரப்பினர் கடுமையாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து சிறைக்காவலர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருநங்கைகள் சுற்றுலா பயணிகளை தலையில் கை வைத்து பணம் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாக உள்ளது.
- அவர்கள் பணம் தராததால் ஆத்திரமடைந்து கடையில் இருந்த பொருள்களை அள்ளிச் சென்று ரகளையில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். திருநங்கைகள் சுற்றுலா பயணிகளை தலையில் கை வைத்து பணம் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக போலீசாரின் நடவடிக்கைகளால் கொடைக்கானலில் திருநங்கைகள் மிரட்டல் குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது பைக் மற்றும் காரில் கும்பலாக வந்து ஏரிச்சாலை, கே.ஆர்.ஆர். கலையரங்கம், நகரின் முக்கிய பகுதிகள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளை வழிமறித்து பணம் கேட்டு வருகின்றனர்.
மேலும் மிரட்டல் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.ஏரிச்சாலை பகுதியில் உள்ள கடைகளில் பணம் கேட்டனர். அவர்கள் பணம் தராததால் ஆத்திரமடைந்து கடையில் இருந்த பொருள்களை அள்ளிச் சென்று ரகளையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஏரிச்சாலை, நகர் பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் உள்ள வியாபாரிகள் மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
தங்களை மிரட்டுவதால் நிம்மதியாக வியாபாரம் செய்ய முடியவில்லை என வியாபாரிகள் புலம்புகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழ்நாடு அரசு வருகிற ஜனவரி 7 மற்றும் 8, 2024-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- தொழில் அமைப்புகள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் ஆர்வலர்கள், வணிக செயல்பாட்டாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு அரசு வருகிற ஜனவரி 7 மற்றும் 8, 2024-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.1,000 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதலீடுகளை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்து, நடைமுறைப்படுத்த அனைத்து குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைப்புகள், தொழில் வணிக அமைப்புகள், கல்லூரி கூட்டமைப்பு, அனைத்து அரசு நிறுவனங்கள், அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து உறுதி செய்வதற்குரிய வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி ரூ.90 லட்சத்திற்கு மேலான எந்திர தளவாட மதிப்புள்ள தொழிற்சாலைகள், பல்நோக்கு அரங்கங்கள், மேம்படுத்தப்பட்ட ஓட்டல்கள், வணிக கூடங்கள் அமைத்தல், முகமை தொழில், வணிக கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய அனைத்து வகைகளிலும் மாவட்டத்தில் உள்ள தொழில் அமைப்புகள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் ஆர்வலர்கள், வணிக செயல்பாட்டாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
மாவட்ட தொழில் மையத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும் நிறுவனங்களுக்கு அரசின் ஒப்புதல்கள், உதவிகள், மானியங்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 குறித்து அனைத்து விவரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, எஸ்.ஆர். மில்ஸ் ரோடு, திண்டுக்கல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு பால் விற்பனைத்துறை ஊழியர் நலச்சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- மாற்றுத்திறனாளிகள் 283 பேருக்கு நலத்திட்ட உதவிகளாக தையல் இயந்திரம், வீல் சேர், புதிய ஆடைகள், இனிப்புகள் வழங்கினார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டையில் தமிழ்நாடு பால் விற்பனைத்துறை ஊழியர் நலச்சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சங்க மாநில பொதுச் செயலாளர் முத்து தலைமையில் நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு பால் முகவர் நலச்சங்க மாநில தலைவர் ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிலக்கோட்டை, சிலுக்குவார்பட்டி, விளாம்பட்டி, அணைப்பட்டி, ஆவாரம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 283 பேருக்கு நலத்திட்ட உதவிகளாக தையல் இயந்திரம், வீல் சேர், புதிய ஆடைகள், இனிப்புகள் வழங்கினார். விழாவில் சங்க மாநில பொருளாளர் நாசர், மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஐப்பசி மாதம் முகூர்த்த தினங்கள், திருவிழாக்கள் குறைவாக இருப்பதால் பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது.
- இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழையால் பூக்கள் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை:
தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மாாக்கெட்டாக நிலக்கோட்டை பூ மார்க்கெட் விளங்கி வருகிறது. உலக அளவில் பிரபலமாக உள்ள மதுரை மல்லி இப்பகுதியில் தான் விளைவிக்கப்படுகிறது.
மேலும் நிலக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளான என்.ஆண்டிபட்டி, மிளகாய்பட்டி, சீத்தாபுரம், குளத்துப்பட்டி, ஊத்துப்பட்டி, புதூர், பிள்ளையார்நத்தம், சிலுக்குவார்பட்டி, மைக்கேல்பாளையம், கோட்டூர், தொட்டாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாடாமல்லி, கனகாம்பரம், காக்கரட்டான், கலர்பிச்சி, வெள்ளை பிச்சி, மரிக்கொழுந்து உள்பட பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது இப்பகுதியில் அதிக அளவு செவ்வந்தி பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். பூக்கள் பூத்துக்குலுங்கி அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இந்த பூக்கள் மதுரை, சென்னை, மும்பை உள்பட பல்வேறு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஐப்பசி மாதம் முகூர்த்த தினங்கள், திருவிழாக்கள் குறைவாக இருப்பதால் பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழையால் பூக்கள் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மிகவும் எதிர்பார்த்த பூக்களுக்கு விலை கிடைக்காத நிலையில் சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
- திண்டுக்கல் காந்தி மார்க்கெட் சாலையில் கழிவுகளோடு மழை நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
- ஏரிச்சாலை கீழ்பூமி பகுதியில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. பொதுமக்கள் அவ்வழியாக செல்லாததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
கொடைக்கானல்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்ட ன்சத்திரம், வேட சந்தூர், வடமதுரை, அய்யலூர், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
திண்டுக்கல் காந்தி மார்க்கெட் சாலையில் கழிவுகளோடு மழை நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். கொ டைக்கானலில் விடுமுறை யை கொண்டாட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ப ட்டுள்ளது. சுற்றுலா பயணிகளும் அறைகளி லேயே முடங்கி யதால் சாலைகள் வெறி ச்சோடி காண ப்பட்டது.
கன மழை காரணமாக ஏரிச்சாலை கீழ்பூமி பகுதியில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது பொதுமக்கள் அவ்வழியாக செல்லாததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து அறிந்தும் ஊழியர்கள் விரைந்து வந்து மரத்தை அகற்றினர். அதன்பின்னர் போக்குவ ரத்து சீரானது.
திண்டுக்கல் 5.2, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 41, பழனி 4, சத்திரப்பட்டி 17.6, நத்தம் 9, நிலக்கோட்டை 30, வேடசந்தூர் 10, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 10, காமாட்சிபுரம் 12.2, கொடைக்கானல் பூங்கா 31.2 என மொத்தம் மாவட்ட த்தில் 170.20 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- அய்யலூர் அருகே கோம்பை வனப்பகுதியில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- பணத்தகராறில் விவசாயியை கொன்ற 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே கோம்பை வனப்பகுதியில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெ க்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் இறந்த நபர் அய்யலூர் அருகே மாமரத்து ப்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது41) என தெரிய வந்தது.
இது தொடர்பாக வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இதில் தபால்புள்ளி, கோம்பையை சேர்ந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் அவரை கொன்றது தெரிய வந்தது.
2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது:-
முருகேசன் விவசாயம் மட்டுமின்றி இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்து வந்தார். இதனால் அவரிடம் நிறைய பணம் இருக்கும் என எண்ணினோம். இதனால் மது குடிக்க வனப்பகுதிக்கு அழைத்து சென்றோம். அங்கு போதை தலைக்கேறிய நிலையில் அவரிடம் பணம் கேட்டோம். ஆனால் பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்து தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து அவர் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். அவர்களிடம் இருந்து தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது. முருகேசனுக்கு கண்மணி என்ற மனைவியும், ரங்கநாதன், சிவா என 2 மகன்களும் உள்ளனர். கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீ சார் 8 மணி நேர த்தில் அவர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
- தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம் பானாமூப்பன்பட்டிக்கு பைக்கில் சென்றார்.
- மூளைச்சாவு அடைந்த வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.
நிலக்கோட்டை:
தமிழகத்தில் முதல்முறையாக உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குன்னூத்துபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது56). விவசாயி. இவர் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம் பானாமூப்பன்பட்டிக்கு பைக்கில் சென்றார்.
மீண்டும் ஊர் திரும்பியபோது எஸ்.மேட்டுப்பட்டி பகுதியில் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மூளைச்சாவு அடைந்த வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதற்காக அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் பூங்கொடி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது.
- தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மற்றும் அய்யலூர், வடமதுரை, வேடசந்தூர், அகரம், ரெட்டி யார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த தக்காளி திண்டுக்கல் உழவர் சந்தை மற்றும் காந்தி காய்கறி மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. திண்டுக்கல் உழவர் சந்தையில் 10 கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று 2 டன் மட்டுமே தக்காளி வரத்து வந்தது.
இதனால் கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் உழவர் சந்தையில் தக்காளி கடைகள் குறைவாகவே இருந்தது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.24க்கு விற்கப்பட்டது. இன்று வரத்து குறைந்ததை அடுத்து விலை உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் செடியில் இருந்து காய்கள் உதிர்ந்து விட்டது. மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நீடித்தால் மேலும் விலை உயரும் என்று தெரிவித்தனர்.
இந்த தக்காளி விலை உயர்வு இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அக்னிசட்டி, பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர்.
- வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் இதனை பக்தி பரவசத்துடன் பார்த்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இடையபட்டியில் பாண்டி முனீஸ்வரர் சக்தி பீடத்தின் திருவிழா கடந்த அக்ேடாபர் 24-ந்தேதி தொடங்கியது. முதல்நாள் முளைப்பாரி முத்துபரப்பல் நிகழ்ச்சியும், அதனைதொடர்ந்து 28-ந்தேதி பவுர்ணமி தினத்தில் சூலம் வேண்டும் நிகழ்வு, நவம்பர் 1-ந்தேதி அக்னிசட்டி, பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர்.
நேற்று கிடாவெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாண்டி முனி உபாசகர் மாதேவி கவிதாம்மாள் கருப்பசாமிக்கு கிடாஆடுகளை பலியிட்டு ஆடுகளின் ரத்தத்தை குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் இதனை பக்தி பரவசத்துடன் பார்த்தனர்.
இதனைதொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், பெண் சாமியார் ஆட்டு ரத்தத்தை குடித்து அருள்வாக்கு கூறுவார். இதன்மூலம் பலர் பலன் பெற்றுள்ளனர். எனவே அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர் என்றனர்.
- திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுக்கு திண்டுக்கல் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப ங்களை மாணவ, மாணவி கள் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,000 பரிசும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகிறது.
'திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு' என்ற பெயரில் நடைமுறை ப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் 2023-24-ஆம் ஆண்டிற்கு திண்டுக்கல் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். திருக்குறளில் இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப் பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் எடுத்து க்கொள்ளப்படும்.
முற்றோதலில் பங்கே ற்கும் மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் அமைக்க ப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்த ப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படை யில் குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று குறள் பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்துகொள்ள இயலாது.
திருக்குறள் முற்றோத லுக்கான விண்ணப்ப ங்களை திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக த்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப ங்களை மாணவ, மாணவி கள் 30-ம் தேதிக்குள் "மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்" என்ற முகவரியில் நேரிலோ அஞ்சல் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.






