வடமதுரை அருகே கோவில் பூசாரி நியமனத்தில் இருதரப்பினர் புகார்

கோவில் பூசாரி நியமனத்தில் இருதரப்பினர் போலீசில் புகார் அளித்தனர்.பூசாரியை நியமிக்கும்வரை திருவிழா நடத்துவதில் சாத்தியம் இல்லை என்று ஒரு தரப்பினர் பிடிவாதமாக இருப்பதால் திருவிழா நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மம்மானியூர் பகுதியில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவிற்காக தற்காலிக பூசாரி ஒருவரை ஒருதரப்பினர் நியமித்தனர். இதற்கு மற்ெறாரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் புதிய பூசாரியை நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.

ஆனால் தற்போது உள்ள பூசாரியே பூஜைகளை செய்ய வேண்டும் என மற்றொரு தரப்பினர் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இருதரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பூசாரியை நியமிக்கும்வரை திருவிழா நடத்துவதில் சாத்தியம் இல்லை என்று ஒரு தரப்பினர் பிடிவாதமாக இருப்பதால் திருவிழா நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

எனவே தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு சுமூகதீர்வு காணவேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com