என் மலர்
திண்டுக்கல்
- தன் மகள் என்றும் பாராமல் தொழிலாளி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
- மயக்கமடைந்த சிறுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பேகம்பூர் ஏ.பி. நகரைச் சேர்ந்தவர் 36 வயது கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் முதலாவது 12 வயது மகள் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு தன் மகள் என்றும் பாராமல் தொழிலாளி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து தனது தாயிடம் கூறியபோது அவர் தனது கணவரை கண்டித்தார். இருந்த போதும் அவரது தொல்லை அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது.
நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த போது தனது மகளை வலுக்காட்டாயமாக அவர் பலாத்காரம் செய்தார். இதில் மயக்கமடைந்த சிறுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்து மேரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மகளை பலாத்காரம் செய்த தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
- சிறப்பு தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல், மெட்ராஸ் ஐ மற்றும் மழைக்கால நோய்கள் வேகமாக பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
சீனாவில் பரவும் வைரஸ் ஹெச் 9 என் 1 இன்ப்ளூயன்ஸா, தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் தன்மையுடன் ஒத்துபோவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார். இவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல் சோர்வு ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிகிச்சைக்கு வரும் நிமோனியா பாதிப்பு சார்ந்த நோயாளிகளின் விபரங்களை ஒருங்கிணைந்த நோய்த்தொற்று கண்காணிப்பு தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொது இடங்களில் நிலவேம்பு கசாயம், ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு அதிகளவு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வருமாறு ஒரு சில தனியார் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று முதல் மீண்டும் முக கவசம் அணிந்து பள்ளிக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். இந்த நடைமுறை தனியார் பள்ளிகளில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. எனவே இதனை அரசு பள்ளிகளிலும் நடைமுறைபடுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொறியியல் துறையில் சுமார் 30 ஆண்டுகளாக காமக்கோடி பணியாற்றி வருகிறார்.
- காமக்கோடிக்கு பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காலியாகவே உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித்சிங் காந்தி கிராம பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தராக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனரும், பேராசிரியருமான காமக்கோடி காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
சென்னை ஐ.ஐ.டி.யில் கணினி அறிவியல், பொறியியல் துறையில் சுமார் 30 ஆண்டுகளாக காமக்கோடி பணியாற்றி வருகிறார். அப்துல்கலாம் டெக்னாலஜி இன்னோவேஷன் நேஷனல் பெலோஷிப், ஐ.இ.எஸ்.ஏ. டெக்னாலஜி தொலைநோக்கு விருது, ஐ.பி.எம். நல்லாசிரியர் விருது, டி.ஆர்.டி.ஓ. அகாடமி சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு மதிப்புமிக்க விருதுகளை பெற்றவர்.
மேலும் அசோஷியேசன் ஆப் கம்ப்யூட்டிங் அண்டு கம்யூனிகேசன் சொசைட்டி வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். துணைவேந்தராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ள காமக்கோடிக்கு பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. இளைஞரணி சார்பில் 2 வது மாநில மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் நடக்கிறது.
- இதனையொட்டி மோட்டார் சைக்கிள் பேரணி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தது.
ஒட்டன்சத்திரம்:
தி.மு.க. இளைஞரணி சார்பில் 2 வது மாநில மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் நடக்கிறது. இதனையொட்டி மோட்டார் சைக்கிள் பேரணி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தது. ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் முன்பு நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் வாகன பேரணிக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச்செய லாளர் ராஜாமணி, ஒட்ட ன்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், நகராட்சி தலைவர் திருமலைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் பொன்ராஜ், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் ஹரி ஹரசுதன், துணை அமை ப்பாளர் ரவிசங்கர் உள்ளி ட்ட ஏராளமான நிர்வாகிகள் இரு சக்கர வாகன பேரணி க்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
- நத்தம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அனைத்து விதமான போட்டிகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.
- இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தர்மபுரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
நத்தம்:
திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் சின்னாளபட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த போட்டியில் மாவட்ட அளவில் 108 மாணவர்களும், 93 மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் நத்தம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அனைத்து விதமான போட்டிகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.
இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தர்மபுரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். தொடர்ந்து வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரகுமத்கனி, உடற்கல்வி இயக்குநர் சம்சுதீன், விளையாட்டு ஆசிரியர்கள் சோலைமலை, மணிகண்டன், ஞானசபரிவேல், கிளாராராணி, அந்தோணி மேரி, மேரி கிறிஸ்டி ஆகியோர் அவர்களை பாராட்டி பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினர்.
- கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.
- கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. கும்பலாக செயல்படும் இவர்கள் நூதன முறையில் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான், கஞ்சா சப்ளை செய்து வந்தனர்.
போலீசாரின் தீவிர நடவடிக்கையால் இது கட்டுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் போதை காளான் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் ஜெகநாதன் என்பதும், சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஜெகநாதனை கைது செய்து அவரிடம் இருந்து போதை காளானை பறிமுதல் செய்தனர்.
போதை காளானை எங்கிருந்து வாங்கினார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயி விளைவிக்கப்பட்ட ரப்போஸ்டா செர்ரீ என்ற காபி வகை அகில இந்திய அளவில் சிறந்த சுவையுள்ள காபியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு 2-ம் இடமும், இதேபோல் அரபிக்கா தேன்காபி வகை 3-ம் இடத்தையும் பெற்றுள்ளது.
- இயற்கைவிவசாயி மகேஸ் நாராயணனுக்கு இந்திய அளவில் சிறந்த சுவையுடைய காபி உற்பத்தி செய்துள்ளதை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, தடியன்கு டிசை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணை க்காடு, கும்பம்மாள்பட்டி, கொங்கப்பட்டி, பூலத்தூர், கும்பரையூர், மங்களம்கொம்பு, ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பாச்சலூர் போன்ற கீழ்பழனிமலைப் பகுதிகளில் காபி பிரதான விவசாயமாக விளங்கி வருகின்றது.
இம்மலைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காபி விவசாயம் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு பருவ மழை மற்றும் காபி செடிகளுக்கு ஏற்ற சீதோஷண நிலை, விவசாய பரப்பளவை அதிகரிக்க காபி வாரியம் எடுத்த நடவடிக்கை மற்றும் விலை ஏற்றம் காரணமாக விவசாயிகள் காபி விவசாயத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டிவீரன்பட்டியை சேர்ந்த இயற்கைவிவசாயி மகேஸ் நாராயணன் என்பவர் காபி தோட்டம் வைத்துள்ளார். அங்கு இவரது காபி தோட்டத்தில் விளை விக்கப்பட்ட ரப்போஸ்டா செர்ரீ என்ற காபி வகை அகில இந்திய அளவில் சிறந்த சுவையுள்ள காபியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு 2-ம் இடமும், இதேபோல் அரபிக்கா தேன்காபி வகை 3-ம் இடத்தையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து இந்திய காபி வாரியம் சார்பில் இதற்கான விருது வழங்கும் விழா தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய காபி வாரிய ஆராய்ச்சி இயக்குனர் செந்தில்குமார் கலந்து கொண்டு இயற்கைவிவசாயி மகேஸ் நாராயணனுக்கு இந்திய அளவில் சிறந்த சுவையுடைய காபி உற்பத்தி செய்துள்ளதை பாராட்டி விருதுகளை வழங்கினார்.
இவ்விழாவில் மண்டல இணை இயக்குனர் (விரிவாக்கம்) கருத்தமணி, துணை ஆராய்ச்சி இயக்குனர் ஜெயக்குமார், முதுநிலை விரிவாக்க தொடர்பு அலுவலர் தங்கராஜன், மலைத் தோட்ட மூத்த விவசாயி விஜயசாரதி, காபி வாரிய உறுப்பினர் சேகர்நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து விருது பெற்ற இயற்கைவிவசாயி மகேஸ்நாராயணன் கூறிய தாவது, நமது தாண்டிக்குடி மலைப்பகுதியில் விளைந்த காபிக்கு விருது கிடைத்துள்ளது. இப்பகுதி அனைத்து விவசாயி களுக்கும் பெருமையான விஷயமாகும். இங்கு உலக தரம் வாய்ந்த சுவையான காபிகளை விளைவிக்க முடியும், அதற்கு இந்த விருது உத்வேகம் அளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.
- மூதாட்டி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆண்கள் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- இந்நிலையில் கழிவறையில் வழுக்கி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி, மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி லெட்சுமி (58). கடந்த சில நாட்களாக துரைராஜ் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆண்கள் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு உதவியாக மனைவி லெட்சுமி இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த வார்டில் உள்ள கழிவறைக்கு சென்ற லெட்சுமி நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது வழுக்கி விழுந்து சுயநினைவு இன்றி விழுந்து கிடந்தார். இவரை மீட்டு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக லெட்சுமி உயிரிழந்தார். அரசு ஆஸ்பத்திரி வார்டு கழிவறையில் வழுக்கி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் இருந்து வந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நிலக்கோட்டை வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பேரணியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசினார்.
நிலக்கோட்டை:
சென்னையில் இருந்து வந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நிலக்கோட்டை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
7 ½ அடி மாலையை நிலக்கோட்டை தி.மு.க. பேரூர் சார்பாக நகரச் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை தலைமையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. அணிவித்தும், பட்டாசு வெடித்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-
இந்தியாவில் நீட் தேர்வால் ஏராளமான மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனே அகற்ற வலியுறுத்தி பேரணி நடத்தப்படுகிறது. இதற்கு மக்கள் அமோக ஆதரவளித்து வருகின்றனர் என பேசினார்.
கூட்டத்தில் ஒழிப்போம் ஒழிப்போம் நீட் தேர்வை ஒழிப்போம் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன், நிலக்கோட்டை பேரூராட்சி துணைத் தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று மைக்கேல் பாளையத்தில் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தாகரிகால பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்தும், மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
- பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருணா (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். பாளையம் செட்டியூர் பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரிசியன் சக்திவேல் (27). உறவினரான 2 பேரும் 2 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சக்திவேல் குடும்பத்தினர் பெண் கேட்டு வந்தனர். ஆனால் பெண் வீட்டார் மறுத்ததால் அருணாவின் சம்மதத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய சக்திவேல் கூடலூரில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மேஜர் என்பதால் விருப்பப்படி வாழ அறிவுரை கூறிய போலீசார் அனுப்பி வைத்தனர்.
- வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
- இன்று பழனி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா 20-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று மாலை சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சண்முகா ர்ச்சனை, வள்ளி-தெய்வானை சின்னகு மாரருக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தங்க மயில் வாகனத்தில் சின்னகுமாரர் உலா வரும் நிகழ்ச்சி மற்றும் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.
இன்று பழனி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை அதனைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை மற்றும் சின்னகுமாரர் தங்க மயில் வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் சொக்கபனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவிலிலும் கார்த்திகை தீபம், சொக்கபனை கொளுத்தப்படுகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி இன்று தங்கரத புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலில் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரி வீதி, ரோப்கார், மின் இழுவை ரெயில் நிலையம், யானைப்பாைத, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த சில நாட்களாக சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. எனவே அவர்கள் வசதிக்காக பழனி மலைக்கோவிலில் 2 தற்காலிக பஞ்சாமிர்த கடைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வடக்கு கிரி வீதி, பாதவிநாயகர் கோவில் செல்போன் பாதுகாப்பு நிலயைம் அருகே கோவில் நிர்வாகம் சார்பில் விற்பனை மையத்தை இணை ஆணையர் மாரி முத்து தொடங்கி வைத்தார்.
இதில் பஞ்சாமிர்தம் கோவில், முருகன் படங்கள், புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களிலும் கார்த்திகை தீபம் இன்று ஏற்றப்படுகிறது. தேனி மாவட்டம் தேவ தானப்பட்டி முருகமலை பரமசிவன் கோவிலில் மாலை 6 மணிக்கு 2500 அடி உயர முருகமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி கழுதை மற்றும் குதிரைகள் மூலம் பூஜை மற்றும் அன்னதான பொருட்கள் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களான நட்சத்திர ஏரி, கலையரங்கம் பகுதிகளில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.
- சுமார் 4 க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் சிலரை கடித்து காயப்படுத்தியது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களான நட்சத்திர ஏரி, கலையரங்கம் பகுதிகளில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.
பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கலையரங்கம் பகுதியில் சுமார் 4 க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் சிலரை கடித்து காயப்படுத்தியது. உடனே காயம் பட்டவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் இது போன்ற செயல்கள் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே வெறி நாய்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.






