என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் வெறிநாய் கடித்து தூய்மை பணியாளர்கள் படுகாயம்
    X

    காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்ைச அளிக்கப்பட்டது.

    கொடைக்கானலில் வெறிநாய் கடித்து தூய்மை பணியாளர்கள் படுகாயம்

    • சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களான நட்சத்திர ஏரி, கலையரங்கம் பகுதிகளில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • சுமார் 4 க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் சிலரை கடித்து காயப்படுத்தியது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களான நட்சத்திர ஏரி, கலையரங்கம் பகுதிகளில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கலையரங்கம் பகுதியில் சுமார் 4 க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் சிலரை கடித்து காயப்படுத்தியது. உடனே காயம் பட்டவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் இது போன்ற செயல்கள் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே வெறி நாய்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    Next Story
    ×