search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய அளவில் சிறந்த காபி உற்பத்தி செய்த பட்டிவீரன்பட்டி விவசாயிக்கு விருது
    X

    இயற்கை விவசாயி மகேஷ் நாராயணனுக்கு விருது வழங்கப்பட்டது.

    இந்திய அளவில் சிறந்த காபி உற்பத்தி செய்த பட்டிவீரன்பட்டி விவசாயிக்கு விருது

    • விவசாயி விளைவிக்கப்பட்ட ரப்போஸ்டா செர்ரீ என்ற காபி வகை அகில இந்திய அளவில் சிறந்த சுவையுள்ள காபியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு 2-ம் இடமும், இதேபோல் அரபிக்கா தேன்காபி வகை 3-ம் இடத்தையும் பெற்றுள்ளது.
    • இயற்கைவிவசாயி மகேஸ் நாராயணனுக்கு இந்திய அளவில் சிறந்த சுவையுடைய காபி உற்பத்தி செய்துள்ளதை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, தடியன்கு டிசை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணை க்காடு, கும்பம்மாள்பட்டி, கொங்கப்பட்டி, பூலத்தூர், கும்பரையூர், மங்களம்கொம்பு, ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பாச்சலூர் போன்ற கீழ்பழனிமலைப் பகுதிகளில் காபி பிரதான விவசாயமாக விளங்கி வருகின்றது.

    இம்மலைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காபி விவசாயம் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு பருவ மழை மற்றும் காபி செடிகளுக்கு ஏற்ற சீதோஷண நிலை, விவசாய பரப்பளவை அதிகரிக்க காபி வாரியம் எடுத்த நடவடிக்கை மற்றும் விலை ஏற்றம் காரணமாக விவசாயிகள் காபி விவசாயத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

    பட்டிவீரன்பட்டியை சேர்ந்த இயற்கைவிவசாயி மகேஸ் நாராயணன் என்பவர் காபி தோட்டம் வைத்துள்ளார். அங்கு இவரது காபி தோட்டத்தில் விளை விக்கப்பட்ட ரப்போஸ்டா செர்ரீ என்ற காபி வகை அகில இந்திய அளவில் சிறந்த சுவையுள்ள காபியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு 2-ம் இடமும், இதேபோல் அரபிக்கா தேன்காபி வகை 3-ம் இடத்தையும் பெற்றுள்ளது.

    இதனையடுத்து இந்திய காபி வாரியம் சார்பில் இதற்கான விருது வழங்கும் விழா தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய காபி வாரிய ஆராய்ச்சி இயக்குனர் செந்தில்குமார் கலந்து கொண்டு இயற்கைவிவசாயி மகேஸ் நாராயணனுக்கு இந்திய அளவில் சிறந்த சுவையுடைய காபி உற்பத்தி செய்துள்ளதை பாராட்டி விருதுகளை வழங்கினார்.

    இவ்விழாவில் மண்டல இணை இயக்குனர் (விரிவாக்கம்) கருத்தமணி, துணை ஆராய்ச்சி இயக்குனர் ஜெயக்குமார், முதுநிலை விரிவாக்க தொடர்பு அலுவலர் தங்கராஜன், மலைத் தோட்ட மூத்த விவசாயி விஜயசாரதி, காபி வாரிய உறுப்பினர் சேகர்நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து விருது பெற்ற இயற்கைவிவசாயி மகேஸ்நாராயணன் கூறிய தாவது, நமது தாண்டிக்குடி மலைப்பகுதியில் விளைந்த காபிக்கு விருது கிடைத்துள்ளது. இப்பகுதி அனைத்து விவசாயி களுக்கும் பெருமையான விஷயமாகும். இங்கு உலக தரம் வாய்ந்த சுவையான காபிகளை விளைவிக்க முடியும், அதற்கு இந்த விருது உத்வேகம் அளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.

    Next Story
    ×