என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெறும்.
    • ரோஜா செடிகளுக்கு பூஞ்சை தடுப்பு மற்றும் இயற்கை உரங்கள் வைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெறும். இதற்காக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரையண்ட்பூங்காவில் 740 வகைகளில் வண்ண ரோஜா செடிகளுக்கு கவாத்து செய்யும் பணிகள் முதற்கட்டமாக கடந்தவாரம் நடைபெற்றது.

    தற்போது 2-ம் கட்டமாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. ரோஜா செடிகளுக்கு பூஞ்சை தடுப்பு மற்றும் இயற்கை உரங்கள் வைக்கும் பணியும் தொடங்கியுள்ளது. இந்த செடிகள் அடுத்து 45 முதல் 60 நாட்களில் அடுக்கடுக்காக 6 மலர் படுகைகளில் விதவிதமாக பூத்துகுலுங்கும். கோடை சீசனுக்கு தயார்படுத்தும் வகையில் தற்போது இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ரோஜா செடிகள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
    • நாய் கண்காட்சியினை பொதுமக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உட்பட பலர் கண்டு களித்தனர்.

    கொடைக்கானல்:

    மெட்ராஸ் கெனல் கிளப், சேலம் கெனல் கிளப் மற்றும் கொடைக்கானல் கெனல் அசோசியேசன் இணைந்து தேசிய அளவிலான 2 நாள் நாய்கள் கண்காட்சி கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 48 வகையான 286 நாய்கள் கலந்து கொண்டன. 2-வது நாளாக நேற்று நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில் கட்டளைக்கு கீழ்ப்படிதல், துப்பறியும் திறன், குணங்கள் அடிப்படையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தினை புனே நகரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கிரேட்டன் ரக நாயும் ஹைதராபாத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட டாபர்மேன் நாயும் பெற்றன.

    அதேபோல் 2-வது பரிசினை ஒடிசாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆஸ்திரேலியா செப்பர்ட் மற்றும் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் ஆகிய நாய்கள் பெற்றன. மேலும் பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    இதனை நடுவர்களாக வருகை தந்த செர்பியன் நாட்டைச் சேர்ந்த இஸ்ட்வான், பீட்டர்தெறிக் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜாய், டெரிக் கிளாரா, மலேசியாவைச் சேர்ந்த திரிவேதி உட்பட பலர் பரிசுக்கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை மெட்ராஸ் கெனல் கிளப்பின் தலைவர் சுதர்சன், செயலாளர் சித்தார்த், கொடைக்கானல் கெனல் கிளப் அசோசியேஷன் செயலாளர் ஜெய் கேஸ் ஜெயதிலகர் ஆகியோர் செய்திருந்தனர். நாய் கண்காட்சியினை கொடைக்கானல் நகரில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உட்பட பலர் கண்டு களித்தனர்.

    • பழனியில் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் குவிகின்றனர்.
    • மலைக்கோவிலில் கட்டண தரிசனத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நிழற்குடை இல்லை.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும். பழனியில் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் குவிகின்றனர்.

    நேற்று சஷ்டியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று மாத கார்த்திகை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, மலைக்கோவில், திருஆவினன்குடி, ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பகல்பொழுதில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பழனிக்கு வரும் பக்தர்கள் வெயிலில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மலைக்கோவிலில் கட்டண தரிசனத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நிழற்குடை இல்லை. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் நீண்டநேரம் வெயிலிலேயே காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. சோர்வடையும் பக்தர்கள் கட்டண தரிசனத்திற்கு டிக்கெட் எடுத்தபோதும் இலவச தரிசன வரிசையில் நிழல் இருந்ததால் அந்த வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    எனவே கோடைகாலம் தொடங்கியுள்ளநிலையில் மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடைக்கானலில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்டாட்சியர் , வட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெற்றது.
    • குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை மனுக்களாக கொடுத்தனர்.

    கொடைக்கானல்:

    சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்டாட்சியர் ராஜா, வட்டாட்சியர் முத்துராமன் தலைமையில் வி வசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெற்றது.

    இதில் தாண்டிக்குடியை சேர்ந்த கணேஷ்பாபு கலந்து கொண்டு பேசுகையில், இதுவரை விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் கொடுத்த மனுக்களுக்கும், தற்போது கொடுக்கப்படும் மனுக்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பூம்பாறை மற்றும் மன்னவனூர் பகுதியில் 108 ஆம்புலன்சுகளை ஆஸ்பத்திரியில் நிறுத்தி சேவை அளித்திட வேண்டும்.

    வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு இழப்பீடு தொகை கூடுதலாக வழங்கவேண்டும். கொடை க்கானலில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப டுவதில்லை. சாக்கடை, கழிப்பறை வசதி மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும். தாண்டிக்குடியில் இ-சேவை மையம், பி.எஸ்.என்.எல்.டவர் அமைக்க வேண்டும்.

    பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும். தாண்டிக்குடி மற்றும் பள்ளங்கி பகுதிகளுக்கு பல மாதங்களாக வராத தனியார் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்து அரசு பஸ் சேவை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தார்.

    கொடைக்கானலை சேர்ந்த கரோலின், காட்டுபன்றிகள் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. குரங்குகள் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. எனவே சோலார் மின்வேலிகள் அமைக்க வேண்டும் என்றார்.

    மன்னவனூரை சேர்ந்த தவமுருகன், அப்சர்வேட்டரி பகுதியில் இருந்து கிளாவரை வரை சாலைகள் சேதமடைந்து ள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    எனவே இதனை சீரமைக்க வேண்டும். சாலைகளில் அதிகளவு ஆக்கிரமிப்பு உள்ளது. அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக உள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. மூஞ்சிக்கல் முதல் அரசு மே்நிலைப்பள்ளி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பள்ளி வாகனங்கள், ஆம்புலன்சுகள் செல்ல தாமதம் ஏற்படுகிறது என குற்றம்சாட்டினர்.

    இந்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிறுமலை-தென்மலை ரோட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • பல்வேறு பொழுதுபோக்கு அம்ச ங்கள், உயர்கோபுரங்கள் என அனைத்தையும் அமைக்கும் பணியில் வனத்துைற தீவிரமாக உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலைக்கு வெளிநாடு களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானலில் உள்ள சீதோஷ்ணநிலை இங்கும் நிலவுவதால் பயணிகள் ரசித்து வருகின்றனர்.

    ஆனால் இங்கு இயற்கையை ரசிக்க இடங்கள் இருக்கும் அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவு. இதனால் கார், பைக்குகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் உடனடியாக கீேழ இறங்குகின்றனர். இதைஅறிந்த வனத்துறை தற்போது அங்கு கட்டண த்துடன் அனுமதிக்கப்படும் பல்லுயிர் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது.

    சிறுமலை-தென்மலை ரோட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு உணவருந்த மரத்திலான அறை, செயற்கை நீருற்று, பட்டாம்பூச்சி பூங்கா, பலவண்ணபூச்செடிகள், கே ன்டீன்கள், மூலிகை செடிகள், குழந்தைகள் விளையாட பொழுதுபோக்கு அம்ச ங்கள், உயர்கோபுரங்கள் என அனைத்தையும் அமைக்கும் பணியில் வனத்துைற தீவிரமாக உள்ளது.

    இதன் பணி 98 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர் பிரபு கூறுகையில், பல்லுயிர் பூங்கா பணிகள் விரைந்து நடந்து வருகிறது. சில மாதங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்ப டுவார்கள். பூங்கா 2 மாதங்களில் திறந்து செயல்பாட்டுக்கு வந்ததும் இவ்விடத்தில் விலங்குகள், பற வைகள் போன்ற வடிவங்களில் செடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பெரிய கூண்டுகள் அமைத்து இங்குள்ள பறவைகளை சுற்றுலா பயணிகள் கூண்டுக்குள் சென்று பார்வையிடும் வகையில் திட்டமதிப்பீடும் தயார் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

    • நாய் கண்காட்சியில் 48 வகைகளைச் சேர்ந்த 286 நாய்கள் பங்கேற்றன.
    • 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் சிறந்த நாய்களுக்கு சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ்கள், சிறப்பு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.

    கொடைக்கானல்:

    மெட்ராஸ் கெனல் கிளப்பின் 137 மற்றும் 138 ஆம் ஆண்டு, சேலம் கெனல் கிளப்பின் 25 மற்றும் 26 வது ஆண்டு, கொடைக்கானல் கெனல் அசோசியேஷனின் 7 மற்றும் 8-ம் ஆண்டு நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.

    இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா புதுடெல்லி, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஜாக்ரஸ்ஸல் டெரியர், பேஷன்சி, அமெரிக்கன்ஸ்டாப்பட் டெரியர், கெயின் கார்சோ, புல்டாக், பர்னிஷ் பவுண்டன், கார்டன் ஹெட்டர், பேஷன் ஃபிரீஷ் ஆஸ்திரேலியா செப்பர்டு, உட்பட தமிழக வகைகளான ஜெர்மன் ஷெப்பர்ட் கிரேட்டன், அஸ்கர், சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முதூர்கவுண்ட் உட்பட 48 வகைகளைச் சேர்ந்த 286 நாய்கள் பங்கேற்றன.

    அதில் எஜமானர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிதல், அதன் மோப்ப சக்தி, அவைகளின் உடல் அமைப்பு, அதன் வேகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றி பெற்ற நாய்களுக்கு சுழற் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இன்றும் கண்காட்சியில் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன.

    போட்டியின் முடிவில் சிறந்த நாய்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு மெட்ராஸ் கெனல்கிளப்பின் தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். செயலாளர் சித்தார்த் முன்னிலை வைத்தார். கொடைக்கானல் கெனல் கிளப்பை சேர்ந்த ஜெய்ஹிந்த் ஜெய்கேஸ் ஜெயதிலகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

    இந்த போட்டிகள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் மெட்ராஸ் கெனல் கிளப் 142 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது இதில் 86 உப கிளப்புகள் உள்ளன. இதன் மூலமாக 138 வது ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளின் நடுவர்களாக செர்பியா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா மற்றும் இந்தியாவைச்சேர்ந்த ஆறு பேர் நடுவர்களாக உள்ளனர். ஞாபக சக்தி, துப்பறியும் திறன், குணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    இந்த போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நாய்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. போட்டிகள் நடைபெற்று முடித்தவுடன் சிறந்த நாய்களுக்கு கோப்பைகள் வழங்கப்படுகின்றன. இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் சிறந்த நாய்களுக்கு சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் சிறப்பு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன என்றனர்.

    நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தனக்கு சொந்தமான டேசன்ட் ஹஸ்கி, டாபர்மேன், கிரேட்டன், ராஜபாளையம் உள்பட ஏழு உயர்ரக நாய்களுடன் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கடந்த 21ந் தேதி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
    • காப்பு கட்டும் மஞ்சள் துணி ரூ.20க்கு இந்து அறநிலையத்துறை சார்பில் விற்பனை செய்யப்பட்டது.

    நத்தம்:

    நத்தம் மாரியம்மன் கோவில், கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்களின் எழுத்தர் முனியாண்டி. தற்போது நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா நடக்கிறது.

    இதையொட்டி கடந்த 21ந் தேதி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். காப்பு கட்டும் மஞ்சள் துணி ரூ.20க்கு இந்து அறநிலையத்துறை சார்பில் விற்பனை செய்யப்பட்டது.

    இதனை ஜெராக்ஸ் எடுத்து போலியாக பக்தர்களுக்கு ரசீது வழங்கி ஊழலில் ஈடுபட்டதாக எழுத்தர் முனியாண்டி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து நத்தம் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சூரியனிடம் இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் சுரேஷ் விசாரணை நடத்தினார். இதில் முனியாண்டி போலி ரசீது பயன்படுத்தியது தெரிய வந்ததால் அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
    • 2½ பவுன் தங்கசெயினை பறித்து க்கொண்டு மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்து. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள ரெட்டியபட்டிைய சேர்ந்தவர் திவேஸ்மேரி(62). இவருக்கு திருமணமாக வில்லை. அதேபகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து இருந்ததால் கொள்ளையடிக்கும் நோக்கில் மூதாட்டியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மாவட்ட எஸ்.பி பாஸ்க ரன் உத்தரவின்பேரில் ரூரல் டி.எஸ்.பி உதயகுமார் ஆலோசனையில், தாலுகா இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகணேஷ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள்தான் மூதாட்டியை கொலை செய்தது என உறுதியானது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ரெண்டலப்பாறையை சேர்ந்த ஸ்டீபன்ராஜா(24) என்பவர் ஜே.சி.பி டிரைவ ராக வேலைபார்த்து வரு கிறார். இவருக்கு கடன்பி ரச்சினைகள் இருந்துள்ளது. இதனால் திவேஸ்மேரியிடம் பணம் கேட்டுள்ளார்.

    அதற்கு அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் அரசு ஐ.டி.ஐ அருகே கடை நடத்தி வரும் முத்துராஜா(43) என்பவரிடம் தனது பிரச்சி னைகளை ஸ்டீபன்ராஜா தெரிவித்தார். அதற்கு முத்துராஜா தன்னிடமும் பணம் இல்லை. திவேஸ்மேரி வீட்டில் பணம் மற்றும் நகை உள்ளது. அவர் வீட்டில் கொள்ளையடி த்தால் நமது 2 பேரின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று கூறினார்.

    அதன்படி ஸ்டீபன்ராஜா மற்றும் முத்துராஜா தனது 17 வயது மகனுடன் அவரது வீட்டிற்கு சென்றனர். பின்னர் சிறுவனை மேற்கூரையின் மீது ஏறவிட்டு ஓட்டைபிரித்து உள்ளே இறங்க செய்தனர்.

    உள்ளே சென்ற சிறுவன் கதவை திறந்து ஸ்டீபன்ராஜா மற்றும் முத்துராஜாவை உள்ளே வரவழைத்துள்ளார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து திவேஸ்மேரியிடம் பணம் மற்றும் நகை உள்ளதா என கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறவே அவர் அணிந்திருந்த 2½ பவுன் தங்கசெயினை பறித்து க்கொண்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிஓடினர்.

    அதன்பின்னர் போலீசார் தேடியதால் நகையை விற்க முடியாமல் அலைந்து வந்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து நகையையும் பறிமுதல் செய்தனர்.

    • டிரைவர் தூக்கம் வந்ததால் வாகனத்தை திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்திவிட்டு தூங்கினார்.
    • மர்மநபர்கள் சரக்கு வேன், கண்ணாடியை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சத்தை திருடிச்சென்றனர்.

    வடமதுரை:

    பாண்டிச்சேரி வாதனூர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன்(45). புளி வியாபாரி. இவர் அய்யலூர், வடமதுரை பகுதியில் புளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஊர் திரும்பி கொண்டிருந்த போது தூக்கம் வந்ததால் வாகனத்ைத திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்திவிட்டு தூங்கினார்.

    அசதியின் காரணமாக ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சரக்கு வேன், கண்ணாடியை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற னர். இன்று காலை கண்விழித்து பார்த்தபோது கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம்பக்கம் விசாரி த்தும் எந்த பயனும் இல்லை. இதுகுறித்து வடமதுரை போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவை கொண்டு பணம் திருடிச்சென்ற மர்ம நப ர்களை தேடி வருகின்றனர்.

    • பஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
    • கம்பீரமான காளைகளைப் பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டி தள்ளின. இதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே பஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்.அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க திண்டுக்கல், தேனி, மதுரை, பாலமேடு, நத்தம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 503 காளைகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டிருந்தன.

    இந்த காளைகளை திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் திருவள்ளுவன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் முருகானந்தம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து களம் இறங்க அனுமதிக்கப்பட்டன. இதேபோல் ஆன்லைனில் பதிவு செய்த மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர் அசோக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு கோட்டாட்சியர் பிரேம்குமார் கொடிய சைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

    முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன் பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளைப் பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டி தள்ளின.

    இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு, குத்து விளக்கு, கட்டில், பீரோ, அண்டா, பானை, குடம், குக்கர் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாட்டின் உரிமையாளர்களான கொசவபட்டியைச் சேர்ந்த ஐசக்ராஜா (வயது 38), அலங்காநல்லூரைச் சேர்ந்த அருணகிரி (16), கொட்டாம்பட்டியைச் சேர்ந்த தனராஜ் (39), பழனியைச் சேர்ந்த மணிவண்ணன் (32),

    சிங்கம்புணரியை சேர்ந்த முத்துராஜ் (21), பழனியைச் சேர்ந்த அஜித் (24), மேலூரைச் சேர்ந்த அழகுராஜ் (23), பார்வையாளரான தாராபுரத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (43), மஞ்ச நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வீர கருப்புசாமி (21) உட்பட 15 பேர் காயமடைந்தனர். இதில் மணிவண்ணன் கருப்புசாமி ஆகிய 2 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.28 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது.
    • பல்வேறு ஊர்களில் அடிகுழாயை மறைத்தும், மோட்டார் சைக்கிளுடன் சேர்த்தும் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    பழனி:

    பழனி நகராட்சி 7-வது வார்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பழைய தாராபுரம் சாலையில் இருந்து பெரியநாயகி அம்மன் கோவில் வரை கீழ வடம்போக்கி தெரு உள்ளது. இந்த பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அடிகுழாய் அமைக்கப்பட்டது. தற்போது வரை அந்த குழாயில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.28 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது. அடி குழாயில் பாதி பகுதியை மூழ்கடித்து சாலை அமைக்கப்பட்டது. இதனால் தற்போது குடம் வைத்து இந்த குழாயில் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. டப்பாவை வைத்து பிடித்து குடத்தில் ஊற்றி பிறகு தண்ணீர் எடுத்து செல்லும் நிலை உள்ளது.

    சாலை மேல் சாலை அமைக்க கூடாது என்று அரசு உத்தரவு உள்ளது. இதனை காற்றில் பறக்க விட்டு இப்பகுதியில் சாலை அமைத்துள்ளதால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

    எனவே இந்த பணியை மேற்கொண்ட அரசு காண்டிராக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஏற்கனவே பல்வேறு ஊர்களில் அடிகுழாயை மறைத்தும், மோட்டார் சைக்கிளுடன் சேர்த்தும் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அந்த காண்டிராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோல இப்பகுதியிலும் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு முறையான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண் இணைப்பில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க நாளை முதல் 2 நாட்கள் வீடு வீடாக ஆய்வு பணி நடைபெற உள்ளது.

    திண்டுக்கல்:

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருகிறது. வாக்காளர்கள் இடம் மாறி செல்லும்போது பழைய இடத்தில் உள்ள வாக்குரிமையை நீக்காமல் புதிதாக விண்ணப்பித்து பட்டியலில் சேர்ந்து விடுகின்றனர்.

    இதனால் இரட்டை வாக்குரிமை பெறும் சூழல் உள்ளது. இது போன்ற இரட்டைப்பதிவை நீக்குவதற்கு வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்து சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இருந்தபோதும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண் இணைப்பில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 38 லட்சத்து 66 ஆயிரத்து 626 வாக்காளர்கள் கொண்ட சென்னை மாவட்டத்தில் 31.83 சதவீத வாக்காளர்கள் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    மாநில அளவில் ஆதார் இணைப்பு குறித்த பட்டியலில் 38வது கடைசி இடத்தில் சென்னை உள்ளது. அரியலூர் மாவட்டம் 97.12 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கள்ளக்குறிச்சி, தர்மபுரி, நாமக்கல், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதில் 81.88 சதவீத பணி முடிந்து விருதுநகர் மாவட்டம் 6-வது இடத்திலும், 68.06 சதவீதத்துடன் திண்டுக்கல் 21வது இடத்திலும், 66.21 சதவீதத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் 25வது இடத்திலும், 65.85 சதவீதத்துடன் சிவகங்கை 26-வது இடத்திலும், 56.57 சதவீதத்துடன் தேனி மாவட்டம் 31வது இடத்திலும், 54.42 சதவீதத்துடன் மதுரை மாவட்டம் 2வது இடத்திலும் உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க நாளை முதல் 2 நாட்கள் வீடு வீடாக ஆய்வு பணி நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 17 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆதார் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்காளர் பட்டியலில் சேரும்போது ஆதார் விபரங்களை அளித்திருந்தாலும் அவை பட்டியலுடன் இணைக்கப்படவில்லை. முகவரி மற்றும் அடையாள சான்றுக்காக மட்டுமே ஆதார் பயன்படுத்தப்பட்டது.

    வாக்காளர்கள் விருப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் விபரங்களை அளித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும். இதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

    ×