search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு அதிகாரிகள் உடந்தை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
    X

    விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    கொடைக்கானலில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு அதிகாரிகள் உடந்தை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

    • கொடைக்கானலில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்டாட்சியர் , வட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெற்றது.
    • குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை மனுக்களாக கொடுத்தனர்.

    கொடைக்கானல்:

    சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்டாட்சியர் ராஜா, வட்டாட்சியர் முத்துராமன் தலைமையில் வி வசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெற்றது.

    இதில் தாண்டிக்குடியை சேர்ந்த கணேஷ்பாபு கலந்து கொண்டு பேசுகையில், இதுவரை விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் கொடுத்த மனுக்களுக்கும், தற்போது கொடுக்கப்படும் மனுக்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பூம்பாறை மற்றும் மன்னவனூர் பகுதியில் 108 ஆம்புலன்சுகளை ஆஸ்பத்திரியில் நிறுத்தி சேவை அளித்திட வேண்டும்.

    வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு இழப்பீடு தொகை கூடுதலாக வழங்கவேண்டும். கொடை க்கானலில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப டுவதில்லை. சாக்கடை, கழிப்பறை வசதி மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும். தாண்டிக்குடியில் இ-சேவை மையம், பி.எஸ்.என்.எல்.டவர் அமைக்க வேண்டும்.

    பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும். தாண்டிக்குடி மற்றும் பள்ளங்கி பகுதிகளுக்கு பல மாதங்களாக வராத தனியார் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்து அரசு பஸ் சேவை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தார்.

    கொடைக்கானலை சேர்ந்த கரோலின், காட்டுபன்றிகள் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. குரங்குகள் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. எனவே சோலார் மின்வேலிகள் அமைக்க வேண்டும் என்றார்.

    மன்னவனூரை சேர்ந்த தவமுருகன், அப்சர்வேட்டரி பகுதியில் இருந்து கிளாவரை வரை சாலைகள் சேதமடைந்து ள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    எனவே இதனை சீரமைக்க வேண்டும். சாலைகளில் அதிகளவு ஆக்கிரமிப்பு உள்ளது. அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக உள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. மூஞ்சிக்கல் முதல் அரசு மே்நிலைப்பள்ளி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பள்ளி வாகனங்கள், ஆம்புலன்சுகள் செல்ல தாமதம் ஏற்படுகிறது என குற்றம்சாட்டினர்.

    இந்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×