என் மலர்
நீங்கள் தேடியது "Grayton dog overall champion"
- பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
- நாய் கண்காட்சியினை பொதுமக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உட்பட பலர் கண்டு களித்தனர்.
கொடைக்கானல்:
மெட்ராஸ் கெனல் கிளப், சேலம் கெனல் கிளப் மற்றும் கொடைக்கானல் கெனல் அசோசியேசன் இணைந்து தேசிய அளவிலான 2 நாள் நாய்கள் கண்காட்சி கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 48 வகையான 286 நாய்கள் கலந்து கொண்டன. 2-வது நாளாக நேற்று நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில் கட்டளைக்கு கீழ்ப்படிதல், துப்பறியும் திறன், குணங்கள் அடிப்படையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தினை புனே நகரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கிரேட்டன் ரக நாயும் ஹைதராபாத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட டாபர்மேன் நாயும் பெற்றன.
அதேபோல் 2-வது பரிசினை ஒடிசாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆஸ்திரேலியா செப்பர்ட் மற்றும் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் ஆகிய நாய்கள் பெற்றன. மேலும் பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதனை நடுவர்களாக வருகை தந்த செர்பியன் நாட்டைச் சேர்ந்த இஸ்ட்வான், பீட்டர்தெறிக் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜாய், டெரிக் கிளாரா, மலேசியாவைச் சேர்ந்த திரிவேதி உட்பட பலர் பரிசுக்கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை மெட்ராஸ் கெனல் கிளப்பின் தலைவர் சுதர்சன், செயலாளர் சித்தார்த், கொடைக்கானல் கெனல் கிளப் அசோசியேஷன் செயலாளர் ஜெய் கேஸ் ஜெயதிலகர் ஆகியோர் செய்திருந்தனர். நாய் கண்காட்சியினை கொடைக்கானல் நகரில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உட்பட பலர் கண்டு களித்தனர்.






