என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரையண்ட் பூங்காவில் ரோஜா செடிகளுக்கு கவாத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ரோஜா செடிகளுக்கு 2-ம் கட்ட கவாத்து பணிகள்
- கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெறும்.
- ரோஜா செடிகளுக்கு பூஞ்சை தடுப்பு மற்றும் இயற்கை உரங்கள் வைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெறும். இதற்காக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரையண்ட்பூங்காவில் 740 வகைகளில் வண்ண ரோஜா செடிகளுக்கு கவாத்து செய்யும் பணிகள் முதற்கட்டமாக கடந்தவாரம் நடைபெற்றது.
தற்போது 2-ம் கட்டமாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. ரோஜா செடிகளுக்கு பூஞ்சை தடுப்பு மற்றும் இயற்கை உரங்கள் வைக்கும் பணியும் தொடங்கியுள்ளது. இந்த செடிகள் அடுத்து 45 முதல் 60 நாட்களில் அடுக்கடுக்காக 6 மலர் படுகைகளில் விதவிதமாக பூத்துகுலுங்கும். கோடை சீசனுக்கு தயார்படுத்தும் வகையில் தற்போது இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ரோஜா செடிகள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.






