என் மலர்
திண்டுக்கல்
- கவர்னர் ரவி கொடைக்கானல் வானியல் ஆய்வு மையத்துக்கு சென்று பார்வையிட்டார்.
- கொடைக்கானலில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கொடைக்கானல்:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கொடைக்கானல் வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த அவர் பின்னர் கொடைக்கானலுக்கு கார் மூலம் மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தார்.
குறிஞ்சி ஆண்டவர் கோவில் செல்லும் வழியில் உள்ள கோகினூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் விசாகன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் கலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் திலிப் உள்ளிட்ட அதிகாரிகள் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின் கார் மூலம் அப்சர்வேட்டரி சாலை வழியாக அப்பர்லேக் வியூ, பாம்பார்புரம் ஆகிய இடங்களுக்கு சென்றார்.
சுற்றுலா வழித்தடத்தில் கவர்னரின் கார் சென்றதால் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். அதன்பின் கோக்கர்ஸ் வாக் வழியாக பயணித்த கவர்னர் மீண்டும் ஏரிச்சாலையை சுற்றி வாகனத்தில் இருந்து எங்கும் இறங்காமல் பார்வையிட்டனர். அதன்பின் கோகினூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றடைந்தார்.
கவர்னர் வருகையால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் வழித்தட மாற்றத்தால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். கவர்னர் வாகனம் சென்ற பிறகு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இன்று காலை கவர்னர் ரவி தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் ரோஜா பூங்காவுக்கு வருகை தந்தார். அங்கு பூத்துக்குலுங்கும் பல்வேறு வகையான ரோஜா மலர்களை கண்டு பரவசமடைந்தார். அதனைத்தொடர்ந்து கொடைக்கானல் வானியல் ஆய்வு மையத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி புதிய வேளாண் எந்திர பயன்பாடு குறித்தும் கேட்டறிந்து அதன் செயல்முறை விளக்கம் ஆற்ற உள்ளார்.
கவர்னர் வருகையை முன்னிட்டு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கொடைக்கானலில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று கொடைக்கானலில் தங்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை தனது சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கார் மூலம் மதுரைக்கு சென்று பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முன்னதாக கொடைக்கானலுக்கு வருகை தந்த கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து வத்தலக்குண்டுவில் கருப்பு பலூன்களை பறக்க விட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட குவிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் திராவிடர் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் மருத மூர்த்தி தலைமையில் அந்த அமைப்பினர் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். கொடைக்கானலிலும் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- சடையம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று ெகாண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
- பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்
நத்தம்:
நத்தம் அருகே சமுத்திராபட்டி அம்மாபட்டியை சேர்ந்தவர் ராமராஜன் (வயது32). இவர் சென்னையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பினார். சடையம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று ெகாண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயம் அடைந்த ராமராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராமராஜனுக்கு சினேகா என்ற மனைவியும், வர்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடிய பஸ் எதிரே வந்த பால் வேன் மீது மோதியது.
- அதிஷ்டவசமாக பஸ்சில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்
நத்தம்:
பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக செந்துறைக்கு தனியார் பஸ் சென்றது. இந்த பஸ்சை பழனியை சேர்ந்த டிரைவர் ஆறுமுகம் ஓட்டினார். செந்துறை அருகே மணக்காட்டூர் மேற்குபட்டி பகுதியில் வந்தபோது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடிய பஸ் எதிரே வந்த பால் வேன் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் மினி வேன் டிரைவர் ரஞ்சித்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதிஷ்டவசமாக பஸ்சில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- வேனில் பயணம் செய்தவர்கள் காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர்.
கொடைக்கானல்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். மதுரை-ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு கொடைக்கானல் வந்தனர். அங்கு சுற்றுலா இடங்களை கண்டு ரசித்த பின்னர் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி பழனி மலைச்சாலை வழியாக வேன் சென்று கொண்டிருந்தது. 5-வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வேனில் பயணம் செய்தவர்கள் காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர். இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி 21 பேரையும் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தஞ்சாவூரை சேர்ந்த மாரியம்மாள் (வயது45) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ராம்குமாரை மடக்கிய கும்பல் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
- சின்னாளபட்டி போலீசில் ராம்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ராம்குமார்(39). இவர் ஊராட்சி வார்டு உறுப்பினராக உள்ளார். மேலும் பா.ஜனதா ஓ.பி.சி அணி மாவட்ட செயலாளராக உள்ளார். அப்பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. ராம்குமார் தனது உறவினர் விக்னேசுடன் திருவிழாவிற்கு சென்றார். பின்னர் 2 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தப்பிஓட முயன்றனர். ஆனால் ராம்குமாரை மடக்கிய கும்பல் கட்டையால் சரமாரியாக தாக்கினர். மேலும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசில் ராம்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடந்தது தெரியவந்துள்ளது.
மேலும் அவரை தாக்கிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காயமடைந்த ராம்குமார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மலைக்கோவிலில் தரிசன வழிகள், வெளி ப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- வைகாசி விசாகத்தை யொட்டி பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா காலங்களில் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
இன்று வாரவிடுமுறை என்பதாலும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக மலைக்கோவிலில் தரிசன வழிகள், வெளி ப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின்இழுவை ரெயில்நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அங்கும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அலாதிய கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர்.
இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. வைகாசி விசாகத்தை யொட்டி இனிவரும் காலங்களில் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் நகர் பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு ள்ளது.
- வாகன போக்குவரத்து குறைவாக காணப்படும் மேல்மலை கிராமங்களில் வனப்பகுதியில் தங்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொடைக்கானல்:
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் மீண்டும் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு மலை ஸ்தலங்க ளுக்கு படைெயடுத்து வருகின்றனர். கோடை விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் பயணித்து வருகின்றனர்.
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. வருகிற 26-ந் தேதி கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனால் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றில் நடப்பட்ட மலர் செடிகளில் பூக்கள் புத்துக் குலுங்கு கின்றன. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் நகர் பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு ள்ளது.
ஏரிச்சாலை பஸ் நிலையம், மூஞ்சிக்கல் உள்பட நகரின் முக்கிய இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே காணப்பட்டது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மேல்மலை கிராமங்களுக்கு படை யெடுக்கத் தொடங்கினர். இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் காணப்படும் புல்வெளிகளில் உற்சாகமாக நடைபயிற்சி சென்று மகிழ்ந்தனர்.
மேலும் மன்னவனூர் சூழல் சுற்றுலா பூங்காவில் குதிரை சவாரி அனை வரையும் கவர்ந்தது. ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து வருகின்றனர். வாகன போக்குவரத்து குறைவாக காணப்படும் மேல்மலை கிராமங்களில் வனப்பகுதியில் தங்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பியுள்ளன. சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- 6 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.
- தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நத்தம்:
நத்தம் அருகே சிறுகுடி பகுதியில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இங்கு சமையலுக்காக விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதில் 6 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து நத்தம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் பாம்பை வனத்துறையினர் விட்டனர்.
- வெடித்து சிதறும் வண்டிலிருந்தே கத்தி கொண்டே மறுபடி வண்டு பிறக்கும், அதுவும் சத்தமிட்டுக்கொண்டே வெடித்து உயிரிழக்கும்.
- வண்டு ஜூன் மாதம் 15 வரை மலைப்பகுதியில் கத்தி கொண்டே இருக்கும்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர் பன்றிமலை, பெரியூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் பயணம் செய்யும் போது மலைச்சாரல் போல் பரவலாக விழுகின்றது.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டால் வண்டுகள் எச்சில் என தெரிவிக்கி ன்றனர். சித்திரை மாதத்தில் விடாமல் கத்துவதால் சித்திரை வண்டு என்று அழைக்கப்படு கிறது. இந்த வண்டுகள் சத்தமிட்டு கொண்டே வெடித்து சிதறும். பின்னர் வெடித்து சிதறும் வண்டிலிருந்தே கத்தி கொண்டே மறுபடி வண்டு பிறக்கும், அதுவும் சத்தமிட்டுக்கொண்டே வெடித்து உயிரிழக்கும்.
இது சிதறும் போது வெளியேறும் திரவம் மழைத்துளி போல் இருக்கும். இந்த வண்டு ஜூன் மாதம் 15 வரை மலைப்பகுதியில் கத்தி கொண்டே இருக்கும். இது ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது.
- ஆளுநர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், சுற்றுலா இடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.
கொடைக்கானல்:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று கொடைக்கானல் வருகிறார். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து கொடைக்கானலுக்கு கார்மூலம் செல்கிறார். வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானலுக்கு மாலை 4.30 மணிக்கு வருகிறார். எனவே மதியம் 2 மணிமுதல் மாலை 4.30 வரை வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
இதேபோல் 16-ந்தேதி காலை 9 மணிமுதல் மதியம் 12 மணி வரை இந்த சாலையில் வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று இரவு கொடைக்கானல் கோகினூர் மாளிகையில் தங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை 11 மணிக்கு அன்னைதெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மாலை 3 மணிக்கு பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிடுகிறார். பின்னர் 16-ந்தேதி கொடைக்கானலில் இருந்து கார்மூலம் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். ஆளுநர் வருகையையொட்டி தென்மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் தலைமையில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி அபினவ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன்(திண்டுக்கல்), பிரவீன்உமேஷ்டோங்கரே(தேனி), 2 ஏ.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பிக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுநர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், சுற்றுலா இடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. மேலும் மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள நிலப்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 40). இவர் செங்கல் சூளைக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு பணியாட்களை ஏற்றி க்கொண்டு சிலுவத்தூர் சாலை கம்பிளியம்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த செல்லப்பாண்டி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் ஆளுநர் தங்கும் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு மற்றும் மோப்பநாய் சோதனை நடைபெறுகிறது.
- 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
திண்டுக்கல்:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (14ம் தேதி) கொடைக்கானல் வருகை தருகிறார். நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் வருகை தருகிறார்.
கொடைக்கானல் கோகினூர் மாளிகையில் தங்கும் அவர் நாளை மறுதினம் (15ம் தேதி) அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அன்று கொடைக்கானலில் ஓய்வெடுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி 16ம் தேதி காலை கார்மூலம் மதுரை சென்று பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
இதனை முன்னிட்டு இன்று முதல் கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் ஆளுநர் தங்கும் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு மற்றும் மோப்பநாய் சோதனை நடைபெறுகிறது. டி.ஐ.ஜி. அபினவ்குமார் தலைமையில் எஸ்.பி.க்கள் பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன் உமேஸ் டோங்கரே (தேனி), 2 ஏ.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பி.க்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைச்சாலையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு இன்று மதியம் 2 மணிமுதல் மாலை வரையிலும், வருகிற 16ம் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரையிலும் வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலை வழியாக மேலே செல்வதற்கும், மேலிருந்து கீழே இறங்குவதற்கும் அனுமதி இல்லை. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.






