என் மலர்
திண்டுக்கல்
- வனப்பகுதியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை பேணி காப்பது, தீயிலிருந்து வனத்தை காப்பாற்றுவது, வேட்டைகளில் இருந்து வன உயிரினங்களை காப்பாற்றுவது போன்ற விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது.
- இது ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்ற இரண்டு வாரங்கள் நடைபெற உள்ளது.
பழனி:
கொடைக்கானல் வனக்கோட்டம், பழனி வனச்சரகத்தின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பழங்குடியினர் வசிக்கும் இடங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம வனக்குழு மக்களை தேர்வு செய்து அந்தந்த கிராமங்களில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் வனப்பகுதியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை பேணி காப்பது, தீயிலிருந்து வனத்தை காப்பாற்றுவது, வேட்டைகளில் இருந்து வன உயிரினங்களை காப்பாற்றுவது போன்ற விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. இதில் பழனி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் மற்றும் பிரேம்நாத், ஜெயசீலன், வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புக்காவலர்கள், வனக்காவலர்கள் கலந்து கொண்டனர். இது ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்ற இரண்டு வாரங்கள் நடைபெற உள்ளது.
மேலும் காற்று மாசினை தடுக்கும் விதமாக தேக்கந்தோட்டம் வன சோதனை சாவடியிலிருந்து வருகிற ஜூன் 20-ந் தேதி காலை 7 மணிக்கு மிதிவண்டி வைத்திருப்போர் பழனி வாழ் மக்கள் ஒன்றிணைந்து கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நெகிழிகளை அகற்ற ஒன்று சேருமாறு பழனி வனச்சரத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கோடை விடுமுறையால் பலர் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர்.
- சுற்றுலா பயணிகள் வந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாகி வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை விடுமுறையில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜாபூங்கா ஆகிய இடங்களில் பல வகைகளில் மலர் செடிகள் நடப்பட்டன. தற்போது பூங்காக்களில் ஏராளமான வண்ண மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வண்ணம் உள்ளது.
கோடை விடுமுறையால் பலர் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர். தரைப்பகுதியில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் மலைஸ்தலங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாகி வருகிறது.
மேலும் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருந்தபோதும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். வருகின்ற 26ந் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. அப்போது சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டு போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.
மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்தை உலகளவில் புகழ்பெற செய்ய வேண்டும்.
- பழங்குடியின பெண்கள் தங்கள் பாரம்பரிய நடனமாடி கவர்னரை வரவேற்றனர்.
கொடைக்கானல்:
3 நாள் பயணமாக கொடைக்கானல் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது மாணவிகளிடையே அவர் பேசியதாவது:-
மாணவிகள் உயர்ந்த லட்சியத்துடன் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள வேண்டும். விடாமுயற்சியும் அதற்கான நேர்மறை சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
காலத்தை எக்காரணம் கொண்டும் விரயம் செய்யக்கூடாது. ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது மாணவிகள் தங்களை நோபல் பரிசு பெற வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் உயர்த்தி படிக்க வேண்டும். ஏதோ படித்தோம் பட்டம் பெற்றோம் வேலை வாங்கினோம் என இருக்காமல் தனித்துவம் வாய்ந்தவர்களாக உலகில் திகழ வேண்டும்.
எனது முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்கள் எனது அம்மாவும், சுவாமி விவேகானந்தரும்தான். விவேகானந்தர் ஒருவருக்கு மட்டுமல்ல ஏராளமான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். அவரைப்போல நம்மை பின்பற்றி பலர் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் நமது தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உலகை அச்சுறுத்தி வரும் வெப்பமயமாதலை தடுக்க மாணவிகள் முயற்சி எடுக்க வேண்டும்.
பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்தை உலகளவில் புகழ்பெற செய்ய வேண்டும். பேராசிரியர்கள் தரமான நூல்களை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். பெண்கள் குடும்பத்தில் மட்டுமின்றி பணியிலும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். அதே வேளையில் தங்களது உடல் நலத்தை பேணுவதிலும் அக்கறை காட்ட வேண்டும் என்றார்.
முன்னதாக கவர்னர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், ஏரிச்சாலை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வித வண்ண மலர்களை பார்வையிட்ட அவர் இதனை பராமரித்து வரும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டினார்.
மூலையாறு பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியை பார்வையிட்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா? என கேட்டறிந்தார். அப்போது பழங்குடியின பெண்கள் தங்கள் பாரம்பரிய நடனமாடி கவர்னரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து தனது விருந்தினர் மாளிகைக்கு கவர்னர் திரும்பினார்.
தனது 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை 10 மணிக்கு கார் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். அவரை கலெக்டர் விசாகன், எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
கவர்னர் மதுரை புறப்பட்டு சென்றதை முன்னிட்டு மலைச்சாலையில் 10 மணி முதல் 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. வத்தலக்குண்டுவில் இருந்து காட்ரோடு வழியாக கொடைக்கானல் வரும் சுற்றுலா வாகனங்கள் பெருமாள் மலை சாலையில் பயணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். கவர்னர் வாகனம் சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்து பழைய முறையில் அனுமதிக்கப்பட்டது.
- திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு பன்னீர் ரோஸ், செண்டுமல்லி, சம்பங்கி, மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பூக்கள் விற்பனைக்கு வந்தது.
- 4 டன் சம்பங்கி பூக்கள் தேக்கமடைந்து ள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேரறிஞர் அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் சின்னாளபட்டி, செம்பட்டி, கன்னிவாடி, தாடிக்கொம்பு, வெள்ளோடு, சிலுவத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பூக்கள் வரத்தைப் பொறுத்து விலைகள் நாள்தோறும் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று பூ மார்க்கெட்டிற்கு பன்னீர் ரோஸ், செண்டுமல்லி, சம்பங்கி, மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பூக்கள் விற்பனைக்கு வந்தது. இதில் 5 டன் சம்பங்கி வந்தது. வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ தினங்கள் இல்லை, சென்ட் தொழிற்சாலைக்கு பூக்கள் கொள்முதல் செய்யாதது ஆகிய காரணத்தினால் கிலோ ரூ.5க்கு விலை போனது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
இன்று மட்டும் 4 டன் சம்பங்கி பூக்கள் தேக்கமடைந்து ள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். கடந்த வாரத்தில் கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட சம்பங்கி இன்று கிலோ ரூ.5க்கு கூட விலை போகவில்லை. அதேபோல் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்த பன்னீர் ரோஸ், விலைபோகாத காரணத்தால், செண்ட் தொழிற்சாலைக்கு அனுப்புவதற்காக சாலையில் உலர வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜக்காபட்டியை சேர்ந்த விவசாயி அய்யம்பெருமாள் கூறுகையில்,
ஒரு ஏக்கரில் சம்பங்கி பயிரிட்டேன். அதில் 70 கிலோ இன்று வரத்து வந்தது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் போதிய விலை இல்லை. செண்ட் நிறுவனமும் பூக்களை கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால் 70 கிலோ சம்பங்கி ரூ.200க்கு விலை போனது. ஏக்கருக்கு எடுப்பு கூலி மற்றும் பராமரிப்பு செலவு சேர்த்து ரூ.700 செலவு ஆன நிலையில், ரூ.200 விலை போனது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
- நேற்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இத்திட்டத்தின் கீழ் அரிசி வாங்கி வந்த 50க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகளை தகுதி நீக்கம் செய்து விட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
- ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று ரேசன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டி யில் பகுதிநேர ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தமிழக அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டை களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இத்திட்டத்தின் கீழ் அரிசி வாங்கி வந்த 50க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகளை தகுதி நீக்கம் செய்து விட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கார்டு வைத்திருந்தவர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று ரேசன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரேசன் கார்டுகளை எவ்வாறு தகுதி நீக்கம் செய்யலாம் என்றும் உரிய பதில் அளிக்கா விட்டால் யாருக்கும் ரேசன் பொருட்களை வழங்க விட மாட்டோம் என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- காந்திகிராம பல்கலைக்கழகத்தின் இளங்கலை முதுநிலை படிப்புகள் தவிர்த்த பிற வகுப்புகளுக்கான சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- இணையதளம் மூலம் ஜூன் 9ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னாளபட்டி:
காந்திகிராம பல்கலைக்கழகத்தின் இளங்கலை முதுநிலை படிப்புகள் தவிர்த்த பிற வகுப்புகளுக்கான சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த அறிவிப்பில் பல்கலைக்கழகத்தின் இளங்கலை முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான 2023-24 ம் ஆண்டிற்கான சேர்க்கை கியூட் பொதுநுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.
பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் பிற படிப்புகளான முதுநிலை டிப்ளமோ, பி.வி.ஓ.சி., டி.வி.ஓ.சி. சான்றிதழ் நிலை படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. சேர விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் ஜூன் 9ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கரூர், சேலம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள நடைபாதை சேதமடைந்து பொதுமக்க ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
- பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலையில் சிமெண்ட் கற்கள் உடைந்து பெயர்ந்து காணப்படுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பஸ்நிலை யத்திலிருந்து மதுரை, திருச்சி, திருப்பூர் ஆகிய முக்கிய பெரும் தொழில் மாநகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு மாவட்டங்களை இணை க்கும் முக்கிய பால மாக திண்டுக்கல் பஸ்நிலையம் திகழ்ந்து வருகிறது.
இங்கிருந்து தேனி, மதுரை, திருச்சி, காரைக்குடி ஆகிய பல்வேறு பகுதி களுக்கு நாள்தோறும் ஆயிர க்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். வேலைக்கு செல்வோர் விவசாயிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்வோர் என பலதர ப்பட்ட மக்கள் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கூடுகின்ற னர்.
மேலும் தற்போது சீசன் காலம் என்பதால் மலைகளின் இளவரசியான கொடை க்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வட மாவட்டங்க ளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் வந்து செல்கின்றனர். இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் கரூர், சேலம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள நடைபாதை சேதமடைந்து பொதுமக்க ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலையில் சிமெண்ட் கற்கள் உடைந்து பெயர்ந்து காண ப்படுகிறது. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் சேதமடைந்த கற்களால் அடிபட்டு ரத்தக்காயம் ஏற்படுகிறது.
இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
- இதில் தூக்கிவீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
நத்தம்:
நத்தம் அருகே குட்டுப்பட்டி பெரியமலையூர் பள்ளத்துக்காடை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது35). இவர் வேலாயுதம்பட்டி பகுதியில் விவசாய தோப்பில் கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
வேலாயுதம்பட்டி ஜே.ஜே.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மெய்குரு(36) என்பவர் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கிவீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கிராம நிர்வாக அலுவலர் மகன் விபத்தில் பரிதாபமாக பலியானார்.
- போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த, பழைய ஆயக்குடியைச் சேர்ந்தவர்கள் ராஜலிங்கம் -லீலாவதி தம்பதியினர். ராஜலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டார். லீலாவதி சிவகிரிபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு தமிழரசன் (25) குறளரசன் (23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் தமிழரசன் விவசாயம் செய்து வருகிறார். இளைய மகன் குறளரசன் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி., படித்து வருகிறார். இந்நிலையில் செம்பட்டி வழியாக பழனி அடுத்த பழைய ஆயக்குடிக்கு குறளரசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது செம்பட்டி பழனி சாலை, ராமநாதபுரம் அருகே சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருந்ததால், அனைத்து வாகனங்களும் ஒரு சாலையில் திருப்பி விடப்பட்டது. ஒரு வழி சாலையில் செல்லும்போது திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் குறளரசன் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் குறளரசன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே பலியானார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற செம்பட்டி சப்-இன்ஸ்பெ க்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார், குறள ரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருப்பூரிலிருந்து கார் ஓட்டி வந்த டிரைவர் சதீஷ்குமார் (44) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ்., அகாடமியில் படித்த மாணவன் செம்பட்டி அருகே கார் மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கள்ளக்காதல் பிரச்சினையில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னக்காளை மகன் காளிதாஸ்(28). இவர் பெங்களூரில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்படவே கடந்த சில மாதங்களாக சொந்தஊருக்கு வந்துவிட்டார். அப்போது அதேபகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஜோதிலட்சுமிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவர் பிரிந்து சென்றுவிட்டதால் காளிதாசுடன் ஒன்றாக வசித்து வந்தார். ஜோதிலட்சுமியின் தங்கை உஷாராணி என்பவருக்கும், அவரது கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள காட்டுமன்னார்கோவில்தெருவை சேர்ந்த கணேசன்(30) என்ற பெயிண்டருன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் மதுரையில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர். நேற்று கணேசன் மற்றும் உஷாராணி ஆகியோர் வேடசந்தூருக்கு வந்தனர்.
இரவில் கணேசன் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரும் அங்குள்ள டாஸ்மாக் பாரில் மதுகுடிக்க சென்றனர். அப்போது கணேசனிடம் உஷாராணியை விட்டுவிடும்படி காளிதாஸ் அறிவுரை கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கணேசன் இதுகுறித்து உஷாராணியிடம் செல்போனில் கூறியுள்ளார். அவர் சம்பவ இடத்திற்கு பைக்கில் வந்துள்ளார். அதற்குள் கணேசன் மற்றும் காளிதாஸ் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணேசன் தன் கையில் வைத்திருந்த மதுபாட்டிலை எடுத்து காளிதாசின் கழுத்தில் குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கணேசனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கம்பங்களில் தனியார் வர்த்தக நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் விளம்பர பலகைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மின் ஊழியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
- அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்னர் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் உள்ள மின் கம்பங்களில் அதிக அளவில் விளம்பர தட்டிகள் கட்டப்பட்டு ள்ளன. இதனால் அவசர தேவைக்கு ஊழியர்கள் மின் கம்பங்களில் ஏறும் போது சிரமம் ஏற்பட்டு வருகிறது. நகரில் உள்ள 18 வார்டு களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு விளக்கு மின் கம்பங்கள் உள்ளன.
இந்த கம்பங்களில் தனியார் வர்த்தக நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் விளம்பர பலகைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மின் ஊழியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த மின் கம்பத்தில் கட்டப்படும் விளம்பர பலகைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் விளரம்பர தட்டிகளை அகற்றாமலேயே உள்ளன.
எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்னர் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தங்கள் கிராமத்திற்கும் சாலை அமைக்க வேண்டும் என 4 வழிச்சாலை நிர்வாகத்தினரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- 20 நாட்களுக்குள் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளி டோல்கேட் பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது பொடுகம்பட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு செல்வதற்கு பல ஆண்டுகளாக சாலைவசதி கிடையாது. தற்போது மதுரை-நத்தம்-திண்டுக்கல்லுக்கு 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே தங்கள் கிராமத்திற்கும் சாலை அமைக்க வேண்டும் என 4 வழிச்சாலை நிர்வாகத்தினரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுரை-நத்தம் 4 வழிச்சாலை பரளி டோல்கேட் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 20 நாட்களுக்குள் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






