search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gandhi Gram University"

    • காந்திகிராம பல்கலைக்கழகத்தின் இளங்கலை முதுநிலை படிப்புகள் தவிர்த்த பிற வகுப்புகளுக்கான சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • இணையதளம் மூலம் ஜூன் 9ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சின்னாளபட்டி:

    காந்திகிராம பல்கலைக்கழகத்தின் இளங்கலை முதுநிலை படிப்புகள் தவிர்த்த பிற வகுப்புகளுக்கான சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அந்த அறிவிப்பில் பல்கலைக்கழகத்தின் இளங்கலை முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான 2023-24 ம் ஆண்டிற்கான சேர்க்கை கியூட் பொதுநுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.

    பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் பிற படிப்புகளான முதுநிலை டிப்ளமோ, பி.வி.ஓ.சி., டி.வி.ஓ.சி. சான்றிதழ் நிலை படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. சேர விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் ஜூன் 9ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க காந்தி கிராம பல்கலை கழகத்துக்கு மத்திய அரசு ரூ. 9.50 கோடி ஒதுக்கி உள்ளது.
    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் மூலம் இயங்கும் மதன் மோகன் மாளவிகா மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் பள்ளிக் கல்வியில் உயர்கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இந்திய அளவில் உயர்கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம், கருத்தரங்கம், பயிற்சி பட்டறை உள்ளிட்ட வடிவங்களில் ஒரு பயிற்சி 40 ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். ஆண்டிற்கு 3 பயிற்சியில் 120 ஆசிரியர்கள் பயிற்சி பெறுவார்கள். இவ்வாறு 2 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பயிற்சிக்காக ஆண்டுக்கு ரூ. 2 கோடி வீதம் 4 கோடி ரூபாயும், பயிற்சிக்கான வகுப்பறை, கருத்தரங்க கூடம் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு ரூ. 5 கோடியே 50 லட்சம் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுதுறை ஒதுக்கி உள்ளது. இந்த பயிற்சியின் தலைவராக பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் ஷாகிதா பேகம், ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் ஸ்ரீதேவி செயல்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×