என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலித்தொழிலாளி பலி"

    • 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
    • அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    கோவை,

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ராஜன் (24). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிணத்துக்கடவை சேர்ந்த ஆனந்தகுமார் (22) என்பவரை ஏற்றிக்கொண்டு சென்றார். மோட்டார் சைக்கிள் கிணத்துக்கடவு- முத்துக்கவுண்டனூர் ரோட்டில் சென்ற போது 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராஜன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
    • இதில் தூக்கிவீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நத்தம்:

    நத்தம் அருகே குட்டுப்பட்டி பெரியமலையூர் பள்ளத்துக்காடை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது35). இவர் வேலாயுதம்பட்டி பகுதியில் விவசாய தோப்பில் கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    வேலாயுதம்பட்டி ஜே.ஜே.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மெய்குரு(36) என்பவர் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கிவீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பரளிநோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • சிகிச்சைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டியை சேர்ந்தவர் முகமதுயாசின் (27). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பரளிநோக்கி சென்று கொண்டிருந்தார்.

    வலையபட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது மதுரையில் இருந்து வந்த மினிவேன் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் முகமதுயாசின் இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் - இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×