கோவை அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி

2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
கோவை அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி
Published on

கோவை,

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ராஜன் (24). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிணத்துக்கடவை சேர்ந்த ஆனந்தகுமார் (22) என்பவரை ஏற்றிக்கொண்டு சென்றார். மோட்டார் சைக்கிள் கிணத்துக்கடவு- முத்துக்கவுண்டனூர் ரோட்டில் சென்ற போது 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராஜன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com