என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்- மினி வேன் மோதி விபத்து"

    • டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடிய பஸ் எதிரே வந்த பால் வேன் மீது மோதியது.
    • அதிஷ்டவசமாக பஸ்சில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்

    நத்தம்:

    பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக செந்துறைக்கு தனியார் பஸ் சென்றது. இந்த பஸ்சை பழனியை சேர்ந்த டிரைவர் ஆறுமுகம் ஓட்டினார். செந்துறை அருகே மணக்காட்டூர் மேற்குபட்டி பகுதியில் வந்தபோது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடிய பஸ் எதிரே வந்த பால் வேன் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் மினி வேன் டிரைவர் ரஞ்சித்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதிஷ்டவசமாக பஸ்சில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×