என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prota master death"

    • சடையம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று ெகாண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
    • பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்

    நத்தம்:

    நத்தம் அருகே சமுத்திராபட்டி அம்மாபட்டியை சேர்ந்தவர் ராமராஜன் (வயது32). இவர் சென்னையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பினார். சடையம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று ெகாண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பலத்த காயம் அடைந்த ராமராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராமராஜனுக்கு சினேகா என்ற மனைவியும், வர்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.

    ×