என் மலர்
திண்டுக்கல்
- காந்தி மார்க்கெட் அருகில் கோட்டைகுளம் ரோடு உள்ளது. இந்தப் பகுதிகளில் காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் பை ஆகியவை கொட்டப்படுகிறது.
- குப்பைகள் தேங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகில் கோட்டைகுளம் ரோடு உள்ளது. இந்தப் பகுதிகளில் காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் பை ஆகியவை கொட்டப்படுகிறது. ஆனால் குப்பைகள் அகற்றப்படாததால் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.மேலும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.அது மட்டுமின்றி காந்தி மார்க்கெட்டுக்கு வரக்கூடிய வியாபாரிகள் இந்த இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
இதேபோல் இந்த குப்பைகளில் பலதரப்பட்ட கழிவுகள் இருப்பதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.ரோட்டோரத்தில் திறந்த வெளியில் குவிந்து கிடக்கும் குப்பைகள் காற்றில் பறக்கின்றன.இதேபோல் இரைதேடி வரும் நாய்கள் குப்பைகளை கிளறுவதாலும் ரோட்டில் குப்பைகள் பரவி கிடக்கின்றன.
இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன் இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாலை நேரங்களில் கொசு தொல்லையால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.மேலும் காந்தி மார்க்கெட் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் உட்கார்ந்து வியாபாரம் செய்யா ததால்,அந்த இடத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மதுபாராக பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, இங்கு குப்பைகள் தேங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நகராட்சி சார்பில் நட்சத்திர ஏரியை மேம்படுத்தும் விதமாக ரூ.24 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
- நட்சத்திர ஏரி நடைபாதை, படகு குழாம் சீரமைப்பு , ஏரியை சுற்றி அமைக்க ப்படும் தடுப்பு வேலிகள் , ஏரியில் தண்ணீரை சுத்திகரிக்கும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை கொடைக்கானல் நகர் மன்ற தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது . இங்கு நகரின் மையப் பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது . நட்சத்திர ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி உள்ளிட்டவை செய்தும் சுற்றுலாவை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகராட்சி சார்பில் நட்சத்திர ஏரியை மேம்படுத்தும் விதமாக ரூ.24 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நட்சத்திர ஏரி நடைபாதை, படகு குழாம் சீரமைப்பு , ஏரியை சுற்றி அமைக்க ப்படும் தடுப்பு வேலிகள் , ஏரியில் தண்ணீரை சுத்திகரிக்கும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லதுரை , துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
- மீண்டும் புத்துயிர் அளித்து கும்மி ஆட்டத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- கும்மியாட்டத்தின் போது அம்மன், முருகன்-வள்ளி புகழ்பாடியும், புராண கதைகளை பாடியும் கும்மியாட்டம் நடைபெறுகிறது .
பழனி:
பழனி அடுத்துள்ள சின்னகலையம்புத்தூர் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் வசித்து வரும் பெண்கள், குழந்தைகளுக்கு கும்மி ஆட்டம் பயிற்சி அளித்து வந்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீ பவன் கலைக்குழுவின் சார்பில் கும்மி நடனம் அரேங்கேற்றம் நிகழ்ச்சி சின்னகலையம்புத்தூரில் நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாரம்பரிய கும்மி நடனத்தை உற்சாகமாக ஆடினர். இசைக்கு ஏற்றபடி கிராமிய பாடல் பாடியும், மேளஇசைக்கு ஏற்ப ஒரே மாதிரியான ஆடை அணிந்து கும்மி நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கிராமங்களில் பாரம்பரியமாக ஆடப்படும் கும்மி ஆட்டம் தற்போது மெல்ல மறைந்து வந்த நிலையில் மீண்டும் புத்துயிர் அளித்து கும்மி ஆட்டத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிராமம் தோறும் சென்று மக்களை ஒன்றிணைத்து கும்மி பாடல்கள், கும்மி ஆட்டத்தை கற்றுக் கொடுக்கும் இளைஞர்கள் அரங்கேற்றத்தை நடத்தி ஊக்கப்படுத்தி வருகின்றனர். கும்மியாட்டத்தின் போது அம்மன், முருகன்-வள்ளி புகழ்பாடியும், புராண கதைகளை பாடியும் கும்மியாட்டம் நடைபெறுகிறது . கும்மியாட்டத்தை பெண்கள், குழந்தைகள், ஆண்கள் ஆடுவதால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது. பலரும் ஆர்வமாக கலந்துகொண்டு கும்பி ஆட்டம் ஆடுவது நமது பாரம்பரிய கலை கால ஓட்டத்தில் மறைவதை தடுக்கும் என்கின்றனர் பயிற்சியாளர்கள். அழியும் நிலையில் இருந்த தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கும்மி நடனத்தை மீட்கும் இளைஞர்களின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
- வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்த நிலையில் குளுகுளு சீசன் தொடங்குதற்கான அறிகுறி தென்பட்டுள்ளது.
- நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. தற்போது மேகமூட்டத்துடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. மேலும் மலைப்பகுதியில் தரையிறங்கும் மேக கூட்டத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்த நிலையில் குளுகுளு சீசன் தொடங்குதற்கான அறிகுறி தென்பட்டுள்ளது.
இதனால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட், தூண்பாறை, பசுமைப்பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.
கடந்த சில நாட்களாக மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், எழும்பள்ளம் ஏரியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
அக்டோபர் மாதத்தில் ஆப்சீசன் தொடங்கும். மேலும் தொடர் விடுமுறை இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வுக்கு சென்ற போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சுமார் 250 கிலோ ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது
- டிரைவர் மலைச்சாமியை கைது செய்தனர். மேலும் வாகனத்துடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பிலிஸ்விலா பகுதியில் உள்ள ரேசன் கடை அருகே குடியிருப்பு பகுதியில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கொடைக்கானல் குடிமை பொருள் வட்டாட்சியர் சரவண வாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் சுமார் 250 கிலோ ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பள்ளங்கி கோம்பையை சேர்ந்த டிரைவர் மலைச்சாமியை கைது செய்தனர். மேலும் வாகனத்துடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது பைக் மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.
- விபத்து குறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் ராஜேஸ்(28). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது திண்டுக்கல் திரும்பினார். இவரது நண்பர் செட்டிநாயக்கன்பட்டி கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பாலசந்தர்(41). இவர் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வந்தார். 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வேடசந்தூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டீசல் நிரப்பிக்கொண்டு அரசு பஸ் வெளியே வந்தது. அப்போது பைக்கில் வந்தவர்கள் அதனை கவனிக்காமல் சென்றதால் கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது பைக் மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.
ராஜேஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாலசந்தரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிறிதுநேரத்திலேயே பாலசந்தரும் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் மகுடீஸ்வரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் சோகம் நிலவியது.
திண்டுக்கல் அருகே கொசவபட்டி உத்திரிய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருளானந்த்(48). பால்வியாபாரி. இவர் கொசவபட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு குடிநீர் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.
- இந்தக் குடிநீர் தொட்டிகள் தண்ணீரின்றி பயன்பாடற்ற முறையில் காட்சி பொருளாக இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர் கணேஷ் பாபு தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியாக இயங்கி வருகிறது. 5 மாடி கட்டிடத்தில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து உள் நோயாளியாக 2000-க்கும் மேற்பட்டோரும், வெளி நோயாளிகளாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு குடிநீர் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடிநீர் தொட்டிகள் தண்ணீரின்றி பயன்பாடற்ற முறையில் காட்சி பொருளாக இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர் கணேஷ் பாபு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ஐந்து மாடி கட்டிடத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றில் கூட தண்ணீர் வருவதில்லை. குடிநீருக்கு கட்டிடத்தின் அடித்தளத்திற்கு வந்து தண்ணீர் குடித்து செல்லும் அவலநிலைக்கு ஆளாகின்றனர். வயதானவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்கள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
- இத்தாவரத்தின் பூக்களுக்குள்,பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
- இலையை வெட்டி வைத்தாலே வளரும் தன்மையை கொண்டுள்ள பிரம்ம கமலம் மலர்களை,சமீப காலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியில் ஒரு வீட்டு தோட்டத்தில் அதிசய பிரம்ம கமல மலர்கள் பூத்து குலுங்கியது.எபிபைலம் ஆக்ஸிபெட்டலம் எனும் தாவரவியல் பெயர் கொண்ட கள்ளி வகையை சேர்ந்த தாவரம்,பிரம்ம கமலம்' என அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவை தாயகமாக கொண்ட இத்தாவரம்,இந்தியாவிலும் பரவலாக காணப்படுகிறது.ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும் கொண்டது. இத்தாவரத்தின் பூக்களுக்குள்,பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும்,மருத்துவ குணத்தையும் கொண்டதால்,'பிரம்ம கமலம்' பூக்கள் சிறப்பு இடத்தை பெற்றுள்ளது.இலையை வெட்டி வைத்தாலே வளரும் தன்மையை கொண்டுள்ள பிரம்ம கமலம் மலர்களை,சமீப காலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகின்றனர்.
மேலும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியில் உள்ள செந்தில்குமார் என்பவரது வீட்டில் தற்போது பிரம்ம கமலம் மலர்கள் பூத்துள்ளது.இந்தப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மலருக்கு வழிபாடு செய்தனர்.
- ராமராஜபுரம் கிராமத்தில் கருணாநிதியின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு தி.மு.க சார்பாக கிடா முட்டு போட்டி நடைபெற்றது.
- போட்டியில் ஏராளமான கிராம இளைஞர்களின் கிடாக்கள் கொண்டுவரப்பட்டு போட்டி நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமராஜபுரம் கிராமத்தில் கருணாநிதியின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு தி.மு.க சார்பாக கிடா முட்டு போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை நிலக்கோட்டை தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மாயாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் ஏராளமான கிராம இளைஞர்களின் கிடாக்கள் கொண்டுவரப்பட்டு போட்டி நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
- கூட்டத்தில் கவுன்சிலர்களின் பல்வேறு கேள்விகளுக்கு,ஒன்றிய குழு தலைவர் மற்றும் அலுவலர்கள் பதில் தெரிவித்தனர்.
- லிங்கவாடி -மலையூருக்கு இடையே ரூ.7.5 கோடி மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் யூனியன் அலுவலக கூட்ட அரங்க வளாகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கினார்.ஆணையாளர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா, ஒன்றிய குழு துணை தலைவர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்ட அறிக்கையை இளநிலை உதவியாளர் கருப்பணபிள்ளை வாசி த்தார். கூட்டத்தில் கவுன்சிலர்களின் பல்வேறு கேள்விகளுக்கு,ஒன்றிய குழு தலைவர் மற்றும் அலுவ லர்கள் பதில் தெரிவித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் கூறியதாவது: லிங்கவாடி -மலையூருக்கு இடையே ரூ.7.5 கோடி மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
சின்ன மலையூர்,பெரிய மலையூர், கரந்தமலை வலசு ஆகிய மூன்று கிராமங்களுக்குள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் சாலை வசதியை முறைப்படி தொடங்குவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. இது தவிர மதுரை-துவரங்கு றிச்சி நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் நலன்கருதி தேவையான இடங்களிலும் குடிநீர் வசதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நத்தம் ஒன்றிய பகுதிகளில் இடிக்கப்பட்ட பள்ளிக்கூட கட்டிடங்க ளுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரக்கூடிய காலங்களில் வரும் அரசு நிதிகளை முறையாக பிரித்து வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வரவு செலவு உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. அலுவலக மேலாளர் சாந்தி தேவி நன்றி கூறினார். முன்னதாக கூட்டத்தில் கவுன்சிலர்கள், அரசு துறை அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கலாவதி என்பவர் தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது.
- பள்ளி படிப்பை மட்டுமே படித்துமுடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் கிளினிக் செயல்படுவதாக மாவட்ட சுகாதார நலப்பணிகள் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பூமிநாதன் தலைமையில் கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் ஆகியோர் அந்த கிளினிக்கில் ஆய்வு செய்தனர்.
அப்போது கலாவதி என்பவர் தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது. மருத்துவ குழுவினரிடம் அவர் தன்னை டாக்டர் என்றே அறிமுகம் செய்து கொண்டார். அதன்பின்பு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கலாவதி(45) என்பதும், பல வருடங்களாக கோபால்பட்டியில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.
இவர் பள்ளி படிப்பை மட்டுமே படித்துமுடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஊசி மருந்து போட்டதுடன் காயங்களுக்கு கட்டு போட்டும், மருந்துகள் கொடுத்தும் வந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி, சாணார்பட்டி, சிறுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற போலி டாக்டர்கள் நடமாட்டம் அவ்வப்போது கண்டறியப்பட்டு அவர்களை கைது செய்து வருகின்றனர். கிளினிக் நடத்த வேண்டும் என்றால் முறையான படிப்பு முடித்து அரசால் அங்கீகாரம் பெற வேண்டும். ஆனால் இதுபோன்ற எந்த நடைமுறையும் பின்பற்றாமல் கிளினிக் நடத்துவதும், கிராமங்களுக்கு சென்றே சிகிச்சை அளிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கலாவதியை கைது செய்ததுடன் கிளினிக்கையும் பூட்டி சீல் வைத்தனர். அவர் மருத்துவம் பார்த்ததன் மூலம் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்ருத் பாரத் ரெயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் பழனி ரெயில் நிலையம் மறுசீரமைப்பு செய்து தரம் உயர்த்தப்பட உள்ளது.
- மாற்றுத்திறனாளி களுக்கான வசதிகள், ரெயில் நிலையப்பகுதியில் சாலை வசதி, லிப்ட் அல்லது எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
பழனி:
'அம்ருத் பாரத் ரெயில் நிலையம்' திட்டத்தின் கீழ் பழனி ரெயில் நிலையம் மறுசீரமைப்பு செய்து தரம் உயர்த்தப்பட உள்ளது.
நாட்டின் பெரிய, சிறிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்களை மறுசீர மைப்பு செய்து மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 'அம்ருத் பாரத் ரெயில் நிலையம்' திட்டத்தில் மதுரை கோட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி உள்பட 15 ரெயில் நிலை யங்கள் தேர்வு செய்யப்பட்டு ள்ளன.
இந்த ரெயில் நிலையங்களை மறுகட்ட மைப்பு செய்து, பயணி களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த முகல் கட்டமாக ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. அதன்படி தற்போது பழனி ரெயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோர ப்பட்டு ள்ளது.
இத்திட்டத்தில் பயணிகள் காத்திருப்போர் அறைகள் மேம்படுத்த ப்படும். ரெயில் வருகை, புறப்பாடு உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்பு பலகை, ரெயில் நிலையப் பகுதியில் தோட்டம், அலங்கார முகப்பு, வாகன காப்பக வசதி, நடைமேடை வசதி, மாற்றுத்திறனாளி களுக்கான வசதிகள், ரெயில் நிலையப்பகுதியில் சாலை வசதி, லிப்ட் அல்லது எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.






