என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "miraculous Brahma flower"

    • இத்தாவரத்தின் பூக்களுக்குள்,பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
    • இலையை வெட்டி வைத்தாலே வளரும் தன்மையை கொண்டுள்ள பிரம்ம கமலம் மலர்களை,சமீப காலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியில் ஒரு வீட்டு தோட்டத்தில் அதிசய பிரம்ம கமல மலர்கள் பூத்து குலுங்கியது.எபிபைலம் ஆக்ஸிபெட்டலம் எனும் தாவரவியல் பெயர் கொண்ட கள்ளி வகையை சேர்ந்த தாவரம்,பிரம்ம கமலம்' என அழைக்கப்படுகிறது.

    அமெரிக்காவை தாயகமாக கொண்ட இத்தாவரம்,இந்தியாவிலும் பரவலாக காணப்படுகிறது.ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும் கொண்டது. இத்தாவரத்தின் பூக்களுக்குள்,பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும்,மருத்துவ குணத்தையும் கொண்டதால்,'பிரம்ம கமலம்' பூக்கள் சிறப்பு இடத்தை பெற்றுள்ளது.இலையை வெட்டி வைத்தாலே வளரும் தன்மையை கொண்டுள்ள பிரம்ம கமலம் மலர்களை,சமீப காலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகின்றனர்.

    மேலும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியில் உள்ள செந்தில்குமார் என்பவரது வீட்டில் தற்போது பிரம்ம கமலம் மலர்கள் பூத்துள்ளது.இந்தப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மலருக்கு வழிபாடு செய்தனர்.

    ×