என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் நாளை (19ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கொடைக்கானல் சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் நாளை (19ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், குண்டுப்பட்டி, கோம்பைக்காடு, வில்பட்டி, பெருமாள்மலை, பி.எல்.செட், ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கே.சி.பட்டி, பாச்சலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • எங்கள் உறவினர் அனைவரையும் நெய்க்காரப்பட்டி போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கொடுமைபடுத்துகின்றனர். பெண்கள் என்று கூட பாராமல் தகாத வார்த்தைகளால் பேசியும், மிரட்டிம் வருகின்றனர்.
    • இதனால் அக்கம் பக்கம் உள்ள அனைவரும் எங்களை அலட்சியமாக பார்த்து குடியிருக்க வீடு தர மறுக்கின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரபட்டியைச் சேர்ந்த வனவேங்கைகள் கட்சி உறுப்பினர் சுமதி தலைமையில் கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்கள் உறவினர் அனைவரையும் நெய்க்காரப்பட்டி போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கொடுமைபடுத்துகின்றனர். பெண்கள் என்று கூட பாராமல் தகாத வார்த்தைகளால் பேசியும், மிரட்டிம் வருகின்றனர். போலீசார் எங்கள் குறவர் இனத்துக்கு எதிராக நடந்து கொள்கின்றனர்.

    வீட்டுக்கு வரும் உறவினர்களையும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர். இதனால் அக்கம் பக்கம் உள்ள அனைவரும் எங்களை அலட்சியமாக பார்த்து குடியிருக்க வீடு தர மறுக்கின்றனர். எனவே எங்கள் வாழ்வாதாரம் இழந்து துன்பப்படுகிறோம். நெய்க்காரபட்டி போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • தேவேந்திர குல மக்கள் இயக்க நிறுவனரும் கட்சித் தலைவருமான குமுளி ராஜ்குமார் பாண்டியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் உத்திரபாண்டியன் தலைமையில் குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள திரவிய நகர் லில்லியன் மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு தேவேந்திர குல மக்கள் இயக்க நிறுவனரும் கட்சித் தலைவருமான குமுளி ராஜ்குமார் பாண்டியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் உத்திரபாண்டியன் தலைமையில் குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி ஆக்னேஷ் சேவியர், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் தண்டபாணி வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் நாகரத்தினம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வானவேடிக்கையும், தாரைதம்பட்டங்கள் முழங்க புனித உத்திரியமாதா அன்னையின் மின்னொளி தேர் பவனி நடைபெற்றது.

    நத்தம்:

    திண்டுக்கல் மறைமாவட்டம் நத்தம் தாலுகா செந்துறையில் கத்தோலிக்க கிறஸ்தவ பங்கு ஆலயம் உள்ளது.கிளைப்பங்கு நல்லபிச்சன்பட்டியில் உள்ள புனித உத்திரியமாதா ஆலய திருவிழா கடந்த 14 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

    2 ம்நாள் நிகழ்ச்சியில் புனித உத்திரியமாதா வேண்டுதல், பொங்கல் வைத்தனர். அன்று இரவு புனித உத்திரியமாதா வேண்டுதல் தேர்பவனியும் வலம் வந்தது. 3-ம்நாள் மாலை பொதுபொங்கல், இரவு விருதுநகர் பள்ளி தாளாளர் லாரன்ஸ் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து திருவிழா ஆடம்பர பாடல் கூட்டுத் திருப்பலியை நடத்தினார்கள்.அன்று இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வானவேடிக்கையும்,தாரைதம்பட்டங்கள் முழங்க புனித உத்திரியமாதா அன்னையின் மின்னொளி தேர் பவனி மற்றும் புனிதர்களின் 5 சப்பர தேர் பவனிகள் நடைபெற்றது.

    அனைவருக்கும் அன்பின் விருந்து நடைபெற்றது.தொடர்ந்து அன்று இரவு இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை புனிதர்களின் தேர்பவனியும், திப்பலியும்,கொடியிறக்கத்துடன் திருவிழா  நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செந்துறை பங்குத்தந்தையர்கள் இன்னாசிமுத்து, மைக்கேல், பிரிட்டோ மற்றும் நல்லபிச்சன்பட்டி, கிளைப்பங்கு கிறிஸ்துவ இறைமக்கள் செய்திருந்தனர்.

    வடமதுரையில் சண்டையை விலக்கி விடாத வாலிபரை சரமாரியாக தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள தென்னம்பட்டி ஆண்டிபட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் முள்ளம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தென்னம்பட்டியை சேர்ந்த மோகன் (வயது24), மாரீஸ் (28) ஆகியோர் சண்டைபோட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டுகொள்ளாமல் மணிமாறன் சென்று விட்டார். இதனையடுத்து தங்களது வாகனத்தில் துரத்தி சென்ற இருவரும் மணிமாறனை மறித்து நாங்கள் சண்டை போட்டுக்கொண்டுள்ளோம்.

    விலக்கி விடமாட்டாயா என அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மணிமாறன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து ஆகியோர் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன் மற்றும் மாரீசை கைது செய்தனர்.

    • தேர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
    • பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

    பழனி:

    ஆண்டுேதாறும் ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப் படுகிறது. இதையொட்டி மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு பழனி அருகே உள்ள ஆயக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியும், திண்டுக்கல் அருகே உள்ள கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் விருதுக்கு தேர்வாகி உள்ளன. தேர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது,

    கல்வி செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் பராமரிப்பு, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருதல், கற்பித்தல் திறன், உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறும்.
    • விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறும். 2ம் கட்ட முகாம் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும்.

    ரேசன் கடைப் பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார். டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பாகத் தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக ரேசன் கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் ரேசன் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய, வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்துப் பெறத் தேவையில்லை.

    விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் ரேசன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.

    விண்ணப்பப் பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஓ.டி.பி. பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும்.

    குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் ரேசன் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

    திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவார்கள்.

    இவ்வாறு கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • கொடைக்கானலுக்கு வரும் காய்கறிகள் லாரிகள் வாடகை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விலை மேலும் உயர்ந்து வருகிறது.
    • தற்போது தக்காளி ரூ.150 வரை விற்பனையாவதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல்கள் நடத்துபவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    குறிப்பாக சின்ன வெங்காயமும், தக்காளியும் போட்டி போட்டு விலையேற்றம் கண்டுள்ளது. ரூ.150 வரை விலை உயர்ந்த நிலையில் இன்று ரூ.120, ரூ.100, ரூ.80 என தரம் பிரித்து விற்கப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், சின்ன வெங்காயம் ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும்.

    பதுக்கல் காரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெயில் காலங்களில் கொடைக்கானலுக்கு வரும் காய்கறிகள் லாரிகள் வாடகை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விலை மேலும் உயர்ந்து வருகிறது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். தற்போது தக்காளி ரூ.150 வரை விற்பனையாகிறது. இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ரூ.150க்கும், தக்காளி ரூ.130க்கும் விற்கப்படுகிறது.

    ஆனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்க வில்லை. இடைத்தரக ர்கள்தான் பயன் அடைகின்றனர். எனவே அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கூறினர்.

    • பொது, கட்டண, கட்டளை தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
    • கேரளாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வாரவிடுமுறை, முகூர்த்தம், கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் இன்று (திங்கட்கிழமை) ஆடி மாதப்பிறப்பு என்பதால் நேற்றே பக்தர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். பழனியில் அதிகாலை முதலே அடிவாரம், கோவில் வெளிப்பிரகாரம், சன்னதி ஆகிய பகுதிகளில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பொது, கட்டண, கட்டளை தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    அதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய நிலையங்களிலும் கவுன்ட்டரை கடந்தும் பக்தர்கள் வரிசை காணப்பட்டது. அலைமோதிய கூட்டத்தால் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
    • தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது.

    திண்டுக்கல்:

    காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். பெருந்தலைவருக்கு செய்கிற மரியாதையிலேயே, பெரிய மரியாதை இதுதான். தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் கொணடு வரப்பட்டதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தில் பா.ஜ.க. இதற்கு எதிராக செயல்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்காக ஒரு புதிய திட்டங்கள் கூட பாரதிய ஜனதா கொண்டு வரவில்லை.

    9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு புதிய சாலை கூட கொண்டு வரவில்லை. இங்கு நடைபெறுவது எல்லாம் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே இருக்கிறது. அதனோடு தொடங்கப்பட்ட மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் முடிவு பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    அதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா. நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்கு காரணம் இங்கே இருக்கிற பணத்தை சுவிஸ் பேங்க்கில் டெபாசிட் செய்யத்தான். இது அரசியல் ஆயிடுமா. இதனால் யாருக்கு என்ன பலன் அண்ணாமலை அளந்து பேச வேண்டும். செந்தில் பாலாஜி என்ன குற்றவாளியா? குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். உங்களது அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த போது குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார்.

    அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் நிபந்தனைகள் இருக்கும். நிபந்தனைகள் இல்லாமல் எந்த திட்டங்களும் செயல்படுத்த முடியாது. தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது. பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் மக்கள் எதிர்கின்றனர். மோடி 9 வருடத்தில் எதையுமே சாதிக்கவில்லை. எனவே சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள், ஜாதியை சொல்லி ஓட்டு கேட்க நினைக்கின்றனர். இந்தியாவில் பல ஜாதிகள், பல மதங்கள் உள்ளன. விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். காமராஜர் பிறந்த நாளன்று இரவு நேர பாடசாலையை தொடங்கியுள்ளார். இதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறிய கோவிலாக இருந்து தற்போது அதிக வருவாய் பெரும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இந்த கோவிலில் மணியடிக்கும் பணியை ஒரு சமூகத்தினர் செய்து வருகின்றனர்.
    • ஆடிமாதம் நாளை தொடங்கும் நிலையில் அதிக அளவு பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதால் அதிக அளவில் வருவாய் கிடைக்கும் என்பதால் மற்றொரு தரப்பினர் தற்போது மணியடிக்கும் பணியில் ஈடுபடுவதாக வந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே வண்டி கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு சாமி தரிசனத்திற்கு வருகின்றனர். மேலும் புதிய வாகனங்கள் வாங்கியதும் இங்கு சிறப்பு பூைஜ செய்தபின்னரே பயணத்தை தொடங்குகின்றனர்.

    மேலும் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து செல்கின்றன. இதனால் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சிறிய கோவிலாக இருந்து தற்போது அதிக வருவாய் பெரும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இந்த கோவிலில் மணியடிக்கும் பணியை ஒரு சமூகத்தினர் செய்து வருகின்றனர்.

    ஆடிமாதம் நாளை தொடங்கும் நிலையில் அதிக அளவு பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். அப்போது அதிக அளவில் வருவாய் கிடைக்கும் என்பதால் மற்றொரு தரப்பினர் தற்போது மணியடிக்கும் பணியில் ஈடுபடுவதாக வந்தனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

    இதுகுறித்து அறிந்ததும் திண்டுக்கல் மண்டல துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பூசாரிகள் இல்லாமல் இருந்தபோது பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்தனர். தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் ஏற்படும் பிரச்சினைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது பொதுமக்களை வேதனை அடையச் செய்துள்ளது.

    • மணியடிக்கும் பிரச்சினையில் இரு தரப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
    • போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வடமதுரை:

    திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே வண்டி கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு சாமி தரிசனத்திற்கு வருகின்றனர். மேலும் புதிய வாகனங்கள் வாங்கியதும் இங்கு சிறப்பு பூைஜ செய்தபின்னரே பயணத்தை தொடங்குகின்றனர்.

    மேலும் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து செல்கின்றன. இதனால் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சிறிய கோவிலாக இருந்து தற்போது அதிக வருவாய் பெரும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இந்த கோவிலில் மணியடிக்கும் பணியை ஒரு சமூகத்தினர் செய்து வருகின்றனர்.

    ஆடிமாதம் நாளை தொடங்கும் நிலையில் அதிக அளவு பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். அப்போது அதிக அளவில் வருவாய் கிடைக்கும் என்பதால் மற்றொரு தரப்பினர் தற்போது மணியடிக்கும் பணியில் ஈடுபடுவதாக வந்தனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

    இதுகுறித்து அறிந்ததும் திண்டுக்கல் மண்டல துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பூசாரிகள் இல்லாமல் இருந்தபோது பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்தனர். தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் ஏற்படும் பிரச்சினைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது பொதுமக்களை வேதனை அடையச் செய்துள்ளது.

    ×