search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் தக்காளியும், வெங்காயமும் போட்டி போட்டு விலையேற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி!
    X

    விலையேற்றத்தால் கொடைக்கானல் மார்க்கெட்டில் வியாபாரம் களையிழந்து காணப்படுகிறது.

    கொடைக்கானலில் தக்காளியும், வெங்காயமும் போட்டி போட்டு விலையேற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

    • கொடைக்கானலுக்கு வரும் காய்கறிகள் லாரிகள் வாடகை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விலை மேலும் உயர்ந்து வருகிறது.
    • தற்போது தக்காளி ரூ.150 வரை விற்பனையாவதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல்கள் நடத்துபவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    குறிப்பாக சின்ன வெங்காயமும், தக்காளியும் போட்டி போட்டு விலையேற்றம் கண்டுள்ளது. ரூ.150 வரை விலை உயர்ந்த நிலையில் இன்று ரூ.120, ரூ.100, ரூ.80 என தரம் பிரித்து விற்கப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், சின்ன வெங்காயம் ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும்.

    பதுக்கல் காரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெயில் காலங்களில் கொடைக்கானலுக்கு வரும் காய்கறிகள் லாரிகள் வாடகை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விலை மேலும் உயர்ந்து வருகிறது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். தற்போது தக்காளி ரூ.150 வரை விற்பனையாகிறது. இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ரூ.150க்கும், தக்காளி ரூ.130க்கும் விற்கப்படுகிறது.

    ஆனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்க வில்லை. இடைத்தரக ர்கள்தான் பயன் அடைகின்றனர். எனவே அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கூறினர்.

    Next Story
    ×