என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • வேடசந்தூர் பஸ்நிலையத்தில் இறங்கி அவர் மற்றொரு பஸ்சில் ஏற முயன்ற போது பஸ்சிலேயே தனது பணப்பை மற்றும் செல்போனை மறந்து விட்டது தெரிய வந்தது.
    • நகர் தெற்கு போக்குவரத்து போலீஸ் ஏட்டு அந்த பஸ்சை மறித்து சோதனை செய்ததில் பணப்பை மற்றும் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்படவே அதனை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    திண்டுக்கல்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவர் ராஜா மனைவி நாகஜோதி (வயது 30). இவர் ஈரோட்டில் இருந்து தனது தாய் வீட்டுக்கு மதுரை நோக்கி அரசு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். வேடசந்தூர் பஸ்நிலையத்தில் இறங்கி அவர் மற்றொரு பஸ்சில் ஏற முயன்ற போது பஸ்சிலேயே தனது பணப்பை மற்றும் செல்போனை மறந்து விட்டது தெரிய வந்தது.

    ஆனால் அதற்குள் பஸ் புறப்பட்டு விடவே வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் நாகஜோதி புகார் அளித்தார். போலீசார் வாக்கி டாக்கி மூலம் இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அஞ்சலி ரவுண்டானா அருகே பஸ் வந்த போது நகர் தெற்கு போக்குவரத்து போலீஸ் ஏட்டு அந்த பஸ்சை மறித்து சோதனை செய்தார்.

    பஸ்சில் பணப்பை மற்றும் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்படவே அதனை நாகஜோதியிடம் போலீசார் ஒப்படைத்தனர். தவற விட்ட பணம் கிடைக்குமோ என்ற அச்சத்தில் கதறி அழுத நாகஜோதி போலீசாரின் துரித முயற்சியால் கிடைக்கப்பெற்றது குறித்து அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

    • புறம்போக்கு நிலங்களில் மட்டும் நடைபெற்ற இந்த பணி தற்போது விவசாய நிலங்களிலும் சோலார் பேனல்கள் அமைக்கப்ப டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
    • எனவே சோலார் பேனல்கள் முறையான அனுமதி பெற்று அமைக்கப்படுகிறதா? என சோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சோலார் மின் பேனல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    புறம்போக்கு நிலங்களில் மட்டும் நடைபெற்ற இந்த பணி தற்போது விவசாய நிலங்களிலும் சோலார் பேனல்கள் அமைக்கப்ப டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் அரசு அனுமதி பெற்று சோலார் பேனர்கள் அமைக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மலைக்குன்று மற்றும் சில இடங்களை ஆக்கிரமித்து பேனல்கள் அமைக்கும் பணி சத்தம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவிப்பதும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்துவதும் வாடிக்கையாகி விட்டது. எனவே சோலார் பேனல்கள் முறையான அனுமதி பெற்று அமைக்கப்படுகிறதா? என சோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவதுடன், தற்போது ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் வருகை இன்றும் அதிகரித்துள்ளது.
    • எனவே போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் கோவிலை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    வடமதுரை:

    திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே அமைந்துள்ளது வண்டிகருப்பணசாமி கோவில். இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

    மேலும் புதிய வாகனங்கள் வாங்கும் பொதுமக்கள் இங்கு பூஜை செய்தபின்னரே பயணத்தை தொடங்குகின்றனர். திண்டுக்கல்- திருச்சி 4 வழிச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என இங்கு சிறப்பு பூைஜ செய்து செல்கின்றனர்.

    இதனால் கோவிலுக்கு வருவாய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த சில நாட்களாக பூஜை செய்வதில் இரு தரப்பினருக்கும் இைடயே பிரச்சினை ஏற்பட்டது. மேலும் பக்தர்கள் வருவதற்கு முன்பு ஒரு கும்பல் கோவில் வளாக பகுதியை ஆக்கிரமித்தனர். பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

    எனவே இதனை சீரமைக்க வேண்டும், கோவில் வளாக பகுதியில் கண்காணிப்பு காமிரா பொருத்தி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தற்போது ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தினசரி 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். எனவே போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் கோவிலை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • இந்நிலையில் சுனிதா நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல்:

    நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). இவர் கூர்க்காவாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சுனிதா (20) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் திண்டுக்கல் நாயக்கர் புதுத் தெரு, சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே வசித்து வந்தனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுனிதா நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நகர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து சுனிதாவின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

    • வார சந்தையை பார்வையிட்டு வாரச்சந்தைக்குள் எத்தனை விளக்குகள் பொருத்த வேண்டும் என ஆய்வு செய்து உடனடியாக பணியை தொடங்க உத்தரவிட்டனர்.
    • எல்.இ.டி.விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கியது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கவி தியாகராஜர் சாலையில் வாரச்சந்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இயங்கி வருகிறது.மாலை நேரங்களில் இரவு 8 மணி வரை வார சந்தை இயங்கும். இந்நிலையில் மாலை மங்கிய நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    வியாபாரிகள் அந்த வார்டு கவுன்சிலர் அப்பாஸ் மற்றும் நகர்மன்றத் தலைவரிடம் முறையிட்டனர்.இதன் காரணமாக நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் வார சந்தையை பார்வையிட்டு வாரச்சந்தைக்குள் எத்தனை விளக்குகள் பொருத்த வேண்டும் என ஆய்வு செய்து உடனடியாக பணியை தொடங்க உத்தரவிட்டனர்.

    அதன்படி எல்.இ.டி.விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கியது. இவ்வகையான விளக்குகள் மாலை நேரங்களில் வியாபாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நகர்மன்ற தலைவர் செல்லத்துரை தெரிவித்தார்.

    • வல்லுனர்களுடன் கலந்துரையாடி புதிய தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என பேசினார்.
    • நிகழ்ச்சியில் தொழில்நுட்ப கருத்தரங்கு கள் நடைபெற்றன. அசோலா சாகுபடி, மண்புழு வளர்ப்பு, சிறுதானியங்கள் சாகுபடி உள்ளிட்ட மாதிரி திடல்களை விவசாயிகள் பார்வையிட்டனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக 95வது நிறுவன நாள் மற்றும் தொழில்நுட்ப நாள் விழா நடைபெற்றது.

    பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் தலைமை தாங்கி வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும். வல்லுனர்களுடன் கலந்துரையாடி புதிய தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என பேசினார்.

    நிகழ்ச்சியில் தொழில்நுட்ப கருத்தரங்கு கள் நடைபெற்றன. அசோலா சாகுபடி, மண்புழு வளர்ப்பு, சிறுதானியங்கள் சாகுபடி உள்ளிட்ட மாதிரி திடல்களை விவசாயிகள் பார்வையிட்டனர்.

    மேலும் புதிய தொழில் நுட்பங்களை விளக்கும் வகையில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற தொழில் நுட்ப விழாவில் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் செந்தில்குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மனம் உடைந்த நிலையில் இருந்தவர் ஒத்தக்கண் பாலம் வழியாக வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (வயது 59).கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.இதனால் அவர் தனது மகன் இலியாசுடன் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த அப்துல் மாலிக் ஒத்தக்கண் பாலம் வழியாக வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி, எஸ்.பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் குழந்தை திருமணங்கள் இல்லா இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் குழந்தை திருமணங்கள் இல்லா இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்டோ லீனஸ் ராஜ் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராதா கிருஷ்ணன், சமூக ஆர்வலர் ரெகுநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் உறுதிமொழி ஏற்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைதி அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர்கள் மருதைக்கலாம், சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இந்த சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்புகள் மட்டுமே செல்லக்கூடிய சாலையில் லாரி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.
    • லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்ததால் தொழிலாளர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து இன்று காலை பாச்சலூர், கடைசிக்காடு வழியாக செம்பரான்குளத்திற்கு கிரசர் மண் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

    இந்த லாரி கடைசிக்காடு-செம்பரான்குளம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்புகள் மட்டுமே செல்ல முடியும். அதுபோன்ற குறுகலான சாலையில் லாரி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த சாலையை கடந்து தினந்தோறும் ஏராளமான தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்வது வழக்கம்.

    காலையில் லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்ததால் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் பிற்பகல் வரையில் லாரி அகற்றப்படவில்லை.

    எனவே எஸ்டேட்டுகளுக்கு கட்டிட பணிகளுக்காக லாரிகள் வரும் போது மிகுந்த கவனத்துடன் செல்ல அறிவுரை வழங்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழனி அடிவாரம் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • கோவில் இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    பழனி:

    பழனி அடிவாரம் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் கும்பாபிஷேக பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் கோவில் முன்புறம் மற்றும் சன்னதிவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    • மலைக்கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்து பின்னர் மூலவருக்கு நடந்த உச்சிகால பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார்.
    • முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணிசாமி கோவில் செவ்வாய்க்கு உரிய அதிபதியாக விளங்கி வருகிறார். இங்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி இன்று நடந்த பூஜையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா கலந்து கொண்டார். இதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் பழனிக்கு வந்த அவர் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு வந்தார்.

    அவருடன் பழனி எம்.எல்.ஏ செந்தில்குமாரின் மனைவி மெர்சி செந்தில்குமார் வந்தார். மலைக்கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்து பின்னர் மூலவருக்கு நடந்த உச்சிகால பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பூஜையில் துர்கா ஸ்டாலின் பங்கேற்று மனமுருக வழிபட்டார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. துர்கா ஸ்டாலின் பழனி கோவிலுக்கு வந்ததை அறிந்ததும் பக்தர்கள் அவருடன் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்தனர். மேலும் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

    • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக் குழு கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.
    • குழந்தைகள் பிச்சையெடுத்தல் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபடுதலை தடுக்கும் வகையில் பேருந்து நிலையங்கள், முக்கிய இடங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக் குழு கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி தெரிவித்ததா வது:-

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் கடந்த ஏப்ரல் 2023 முதல் ஜுன் 2023 வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிக் குழந்தைகளுக்கு, குழந்தை திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் போதை பொருள் (கூலிப்) பயன்படுத்துவதை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு மற்றும் கடைகளில் சிறப்பாய்வு மேற்கொள்ள வேண்டும்.

    மாவட்டத்திலுள்ள 306 ஊராட்சிகளிலும், 14 வட்டாரங்களிலும், 23 பேரூராட்சிகளிலும், 3 நகராட்சிகளிலும் குழ ந்தைகள் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தினை 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைப்படும் பொழுது குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். குழந்தைகள் பிச்சையெடுத்தல் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபடுதலை தடுக்கும் வகையில் பேருந்து நிலையங்கள், முக்கிய இடங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளிடையே, குழந்தைகளுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதைப் பொருட்களுக்கு அடிமையாதலை தடுத்தல், தன் சுத்தம் பேணுதல் குறித்தும், சைல்டுலைன் 1098 குறித்தும், விழிப்புணர்பு ஏற்படுத்த வேண்டும்.

    வளரிளம் பருவ மாணவ, மாணவியர்களின் தனிப்பட்ட திறமை, சமூக பங்களிப்பு மற்றும் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்கும் ஒன்றியத்திற்கு 3 குழந்தைகள் என "இளம் மொட்டுக்கள்" அடையாளம் கண்டு, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கள் மற்றும் குழந்தைகள் வசிப்பிட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களில் ஈடுபடுத்தலாம். பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆதர வாளர்களை பயன்படுத்த லாம் என்று அவர் தெரிவித்தார்.

    ×