என் மலர்
நீங்கள் தேடியது "Agricultural Science Centre"
- வல்லுனர்களுடன் கலந்துரையாடி புதிய தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என பேசினார்.
- நிகழ்ச்சியில் தொழில்நுட்ப கருத்தரங்கு கள் நடைபெற்றன. அசோலா சாகுபடி, மண்புழு வளர்ப்பு, சிறுதானியங்கள் சாகுபடி உள்ளிட்ட மாதிரி திடல்களை விவசாயிகள் பார்வையிட்டனர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக 95வது நிறுவன நாள் மற்றும் தொழில்நுட்ப நாள் விழா நடைபெற்றது.
பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் தலைமை தாங்கி வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும். வல்லுனர்களுடன் கலந்துரையாடி புதிய தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் தொழில்நுட்ப கருத்தரங்கு கள் நடைபெற்றன. அசோலா சாகுபடி, மண்புழு வளர்ப்பு, சிறுதானியங்கள் சாகுபடி உள்ளிட்ட மாதிரி திடல்களை விவசாயிகள் பார்வையிட்டனர்.
மேலும் புதிய தொழில் நுட்பங்களை விளக்கும் வகையில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற தொழில் நுட்ப விழாவில் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் செந்தில்குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.






