என் மலர்
நீங்கள் தேடியது "எல்.இ.டி. பல்ப்புகள் பொருத்தும் பணி"
- வார சந்தையை பார்வையிட்டு வாரச்சந்தைக்குள் எத்தனை விளக்குகள் பொருத்த வேண்டும் என ஆய்வு செய்து உடனடியாக பணியை தொடங்க உத்தரவிட்டனர்.
- எல்.இ.டி.விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கியது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கவி தியாகராஜர் சாலையில் வாரச்சந்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இயங்கி வருகிறது.மாலை நேரங்களில் இரவு 8 மணி வரை வார சந்தை இயங்கும். இந்நிலையில் மாலை மங்கிய நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
வியாபாரிகள் அந்த வார்டு கவுன்சிலர் அப்பாஸ் மற்றும் நகர்மன்றத் தலைவரிடம் முறையிட்டனர்.இதன் காரணமாக நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் வார சந்தையை பார்வையிட்டு வாரச்சந்தைக்குள் எத்தனை விளக்குகள் பொருத்த வேண்டும் என ஆய்வு செய்து உடனடியாக பணியை தொடங்க உத்தரவிட்டனர்.
அதன்படி எல்.இ.டி.விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கியது. இவ்வகையான விளக்குகள் மாலை நேரங்களில் வியாபாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நகர்மன்ற தலைவர் செல்லத்துரை தெரிவித்தார்.






