என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police protection due to increase"

    • கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவதுடன், தற்போது ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் வருகை இன்றும் அதிகரித்துள்ளது.
    • எனவே போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் கோவிலை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    வடமதுரை:

    திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே அமைந்துள்ளது வண்டிகருப்பணசாமி கோவில். இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

    மேலும் புதிய வாகனங்கள் வாங்கும் பொதுமக்கள் இங்கு பூஜை செய்தபின்னரே பயணத்தை தொடங்குகின்றனர். திண்டுக்கல்- திருச்சி 4 வழிச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என இங்கு சிறப்பு பூைஜ செய்து செல்கின்றனர்.

    இதனால் கோவிலுக்கு வருவாய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த சில நாட்களாக பூஜை செய்வதில் இரு தரப்பினருக்கும் இைடயே பிரச்சினை ஏற்பட்டது. மேலும் பக்தர்கள் வருவதற்கு முன்பு ஒரு கும்பல் கோவில் வளாக பகுதியை ஆக்கிரமித்தனர். பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

    எனவே இதனை சீரமைக்க வேண்டும், கோவில் வளாக பகுதியில் கண்காணிப்பு காமிரா பொருத்தி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தற்போது ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தினசரி 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். எனவே போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் கோவிலை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ×