என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
    • ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. நீண்டவரிசையில் பக்தர்கள் இதனை வாங்கிச்சென்றனர்.

    இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அபிராமிஅம்மன், ஞானாம்பிகை அம்மனுக்கும், பத்மகிரீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூைஜகள் நடந்தன.

    செட்டிநாயக்கன்பட்டி சிவபுரம் அழகாம்பிகை உடனுறை சிவகுருநாத சாமி கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. ஆதினம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரியார் தலைமையில் ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து ெகாண்டனர்.

    ஆர்.எம்.காலனி வெக்காளியம்மனுக்கு இன்று ஆடிப்புரத்தை முன்னிட்டு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் நாகல்நகர் மாதாபுவனேஸ்வரி அம்மன்கோவில், சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் கோவில், நேருஜிநகர் பன்னாரியம்மன் கோவில், தெற்குத்தெரு பாதாளகாளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களிலும் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    • நத்தம் என்.பி.ஆர். கல்வி குழுமத்தில் என்.பி.ஆர். செவிலியர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக மூளை தின விழா நடைபெற்றது.
    • மூளை நலன் மற்றும் மூளையில் ஏற்படும் குறைபாடுகள், மூளையின் செயல் திறன்கள் மற்றும் அதை சரி செய்தல் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்வி குழுமத்தில் என்.பி.ஆர். செவிலியர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக மூளை தின விழா நடைபெற்றது. இந்நிக ழ்ச்சிக்கு என்.பி.ஆர். செவிலியர் கல்லூரி முதல்வர் அன்னலட்சுமி தலைமை தாங்கினார். முதலாம் ஆண்டு மாணவர் திவான் வரவேற்று பேசினார்.

    மதுரை அகானா மருத்துவமனை மூத்த ஆலோசகர் டாக்டர் ராமசுப்பிரமணியன், உளவியல் துறை டாக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு

    செவிலியர் மாணவ - மாணவிகளிடம் பேசிய தாவது:-

    சர்வதேச மூளை தினத்தில் குறிக்கோளாக உலகளாவிய விழிப்பு ணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமநிலையை மேம்படுத்துதல் என்ற குறிக்கோளை முன்னிறுத்தி மூளை நலன் மற்றும் மூளையில் ஏற்படும் குறைபாடுகள், மூளையின் செயல் திறன்கள் மற்றும் அதை சரி செய்தல் பற்றியும், மூளையின் வளர்ச்சியில் தூக்கத்தின் பங்கினை பற்றியும், அலைபேசியின் அடிமைத்தனம் மற்றும் அதிலிருந்து மீண்டு வரும் வழிகளைப் பற்றியும் விளக்கி பேசினர்.

    செவிலியர் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவன் அஜ்மல் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடு களை கல்லூரி நிர்வாகத்தி னர் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் சார்பில் 355 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழி, சேவல்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன.
    • தயாரிக்கப்பட்ட அசைவ உணவு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த ஆர்.கோம்பை கிராமத்தில் வந்தவழி பெரியகருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த வருடத்திற்கான திருவிழாவை முன்னிட்டு கோவிலில் நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் ஆடுகள், அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கினர்.

    பக்தர்கள் சார்பில் 355 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழி, சேவல்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இவற்றை கொண்டு ராட்சத அண்டாக்களில் அசைவ உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது. பெரியகருப்பசாமிக்கு படையல் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    அதனைதொடர்ந்து தயாரிக்கப்பட்ட அசைவ உணவு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. பிற்பகலில் தொடங்கிய இந்த விருந்து இரவு வரை நீடித்தது. இந்த விழாவில் ஆர்.கோம்பை மட்டுமின்றி சுற்றுப்புரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கருப்பசாமியை வழிபட்டு சென்றதுடன் விருந்திலும் பங்கேற்று உணவருந்தி சென்றனர்.

    • பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26, 27 ஆகிய 2 நாட்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
    • உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874 வருவாயாக கிடைத்தது.

    பழனி :

    உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்பு நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை செலுத்துகின்றனர். இதற்காக நிர்வாகம் சார்பில் கோவில் பகுதியில் பல உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26, 27 ஆகிய 2 நாட்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று உண்டியல் காணிக்கை பணி தொடங்கியது. இதில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

    முன்னதாக கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணி அளவிடும் பணி நடைபெற்றது.

    உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874 வருவாயாக கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர். இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 878 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 1025 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 13 கிலோ (13573) கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    • அருகில் இருந்த கட்சிக்காரர்கள் கவனித்து, அவரிடம் எடுத்துச் சொன்னதும், அய்யய்யோ வார்த்தை தவறிவிட்டது என்றார்.
    • ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திண்டுக்கல் நாகல் நகரில் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, "தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம்" என வாய்தவறி உளறினார்.

    இதனை அருகில் இருந்த கட்சிக்காரர்கள் கவனித்து, அவரிடம் எடுத்துச் சொன்னார்கள். இதையடுத்து சுதாரித்த திண்டுக்கல் சீனிவாசன் தவறை திருத்தி பேசினார்.

    "அய்யயோ, வார்த்தை தவறாக வந்துவிட்டது. ஸ்டாலினை தோற்கடித்து எடப்பாடியார் அவர்களை முதலமைச்சர் ஆக்கி காட்டுவோம் என நமது தாய்மார்கள் தெரிவித்திருக்கிறார்கள்" என்றார் திண்டுக்கல் சீனிவாசன். 

    • திருவிழா உள்ளிட்ட முக்கிய நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 20,000 முதல் 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர்.
    • கோவில்களில் முடி காணிக்கை செலுத்து வோரின் புகைப்படத்துடன் கூடிய இலவச டிக்கெட் வழங்கும் முறை நடைமுறை ப்படுத்த ப்பட்டுள்ளது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 7 இடங்களில் முடி காணிக்கை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது முக்கிய நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர்.

    திருவிழா உள்ளிட்ட முக்கிய நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 20,000 முதல் 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகி ன்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முடி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பக்தர்களுக்கு கியூ ஆர் கோடுடன் இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. அதனை காண்பித்து முடி காணிக்கை செலுத்தி வந்தனர். இந்நிலையில் முடி காணிக்கை செலுத்த டிக்கெட் வாங்கும்போது பக்தரின் புகைப்படம், முடி இறக்கும் ஊழியரின் பெயர், அவரது பதிவு எண், இடத்தின்பெயர் , நாள், நேரம் குறிப்பிட்டு கியூஆர் கோடுடன் டிக்கெட் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்த ப்பட்டு ள்ளது.

    முடி காணிக்கை செலுத்திய பிறகு மொட்டை தலையுடன் பக்தரை புகைப்படம் எடுத்து அதில் முடி இறக்கும்செய்த தொழிலாளியின் புகைப்பட த்துடன் மற்றொரு டிக்கெட் வழங்கப்படுகிறது. அப்போது அதிலுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து கோவில் பணியாளர்கள், பக்தர்களை வெளியே அனுப்புகின்றனர்.

    மொட்டை அடிக்கும் பக்தர்கள் மட்டுமின்றி பூ முடி காணிக்கை செலுத்தும் பெண்பக்தர்களின் புகைப்படமும் எடுக்கப்படு கிறது. இந்த புதிய நடை முறையால் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் அறநிலைய த்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முடி காணிக்கை செலுத்து வோரின் புகைப்படத்துடன் கூடிய இலவச டிக்கெட் வழங்கும் முறை நடைமுறை ப்படுத்த ப்பட்டுள்ளது.

    முடி காணிக்கை செலுத்தவும், முடி இறக்கும் செய்யும் ஊழியர்களுக்கும் கட்டணம் வழங்க தேவை யில்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதனை யும் மீறி பக்தர்களிடம் ஊழியர்கள் பணம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. தேவஸ்தானம் சார்பில் மொட்டையடிக்கும் பெண்களுக்கு மூன்று ரூ.100 தரிசன டிக்கெட்டுகளுக்கான பாஸ் வழங்கப்படுகிறது. சிலர் இவவச டிக்கெட்டு களை பெற்று க்கொண்டு வெளியூர் பக்தர்களை வெளியிடங்களில் வைத்து மொட்டையடித்து பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர்.

    இதுபோன்ற முறைகேடு களை தவிர்க்கும் வகையில் தினமும் எத்தனை பக்தர்கள் முடி காணிக்கை செலுத்து கிறார்கள் என்பதை கணக்கிடவும், முடி இறக்கம் செய்யும் பக்தர்களிடம் பணம் கேட்கும் ஊழிய ர்களை அடையாளம் காண வும், இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்றனர்.

    • இணைய தளம் மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் பதிவிறக்கம் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அரசு சுற்றுலா த்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பதிவு செய்யப்படாமல் செய ல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    கொடைக்கானல்:

    தமிழ்நாடு அரசு சுற்றுலா த்துறை சுற்றுலாப் பயணி களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு படுக்கை யறை மற்றும் காலை உணவு வழங்கும் ஹோம் ஸ்டே நிறுவனங்கள்,சாகச சுற்றுலா ஆப்ரேட்ட ர்கள்,கேரவன் பார்க் ஆப்ரேட்டர்கள், ஆகியோ ர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த உலக சுற்றுலா தினம் அன்று வெளியிடப்பட்டு ள்ளது.

    இணைய தளம் மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் பதிவிறக்கம் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான தகவல்கள் பெறுவதற்கு கொடைக்கா னல் சுற்றுலா அலுவலக த்திற்கு நேரில் வந்து சம்பந்தப்பட்ட அலுவல ர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும் தமிழ்நாடு அரசு சுற்றுலா த்துறை யின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பதிவு செய்யப்படாமல் செய ல்பட்டு வரும் தங்கும் விடுதி களான படுக்கை மற்றும் காலை உணவு வழங்கி நடத்தப்படும் ஹோம் ஸ்டே ,சாகச சுற்றுலா ஆப்ரேட்ட ர்கள்,

    முகாம் ஆப்ரேட்டர்கள் ஆகியோரின் செயல்பாடு தடை செய்யப்பட்டு உரிய மேல் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • சாலையிலிருந்து பள்ளிக்கு செல்லும் நுழைவு பாதை 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளமாக உள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    • மற்றொரு நுழைவு பாதையில் 10-அடி ஆழமான சாக்கடை குளம்போல் தேங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது. தற்போது, அது நான்கு வழிசாலையாக மாறியுள்ளதால், வாகனங்கள் அதிவிரைவாக செல்கின்றன. இச்சாலையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கென தனிப்பாதை ஏதும் அமைக்கப்படவில்லை.

    பள்ளிக்கு முன்பாக அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேகத்தடையும் அமைக்கப்படவில்லை. மேலும், போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், பள்ளிக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால் தொடர்ந்து விபத்துகளில் சிக்கும் அபாய சூழல் இருந்து வருகிறது.

    சாலையிலிருந்து பள்ளிக்கு செல்லும் நுழைவு பாதை 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளமாக உள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆசிரியர்கள் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் சாலையோரங்களிலேயே நிறுத்தக்கூடிய நிலையும் ஏற்படுகிறது. மற்றொரு நுழைவு பாதையில் 10-அடி ஆழமான சாக்கடை குளம்போல் தேங்கியுள்ளது.

    இதனால், குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். செங்குத்தாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். 10-அடி ஆழமுள்ள சாக்கடை பள்ளத்தை சரி செய்ய வேண்டுமென, மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளிப்படிப்பை மட்டும் முடித்துவிட்டு போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வருவது தெரிய வந்தது.
    • நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் முத்தையாவை கைது செய்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதனுக்கு நத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் அதிகாரிகள் அதிரடியாக நத்தம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது நத்தம் ஆண்டியப்பபிள்ளை தெருவில் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் முத்தையாவிடம் விசாரித்தனர்.

    அப்போது பள்ளிப்படிப்பை மட்டும் முடித்துவிட்டு போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் முத்தையாவை கைது செய்தனர்.

    மேலும் அவர் நடத்தி வந்த கிளினிக்கையும் வருவாய் துறையினர் சீல் வைத்தனர். அங்கு நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், ஊசி, குளுக்கோஸ் உள்ளிட்டவைகளை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    சிறுகுடி, செந்துறை,கோட்டையூர்,பெரியூர்பட்டி, குட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் போலி டாக்டர்கள் வீடு வீடாக சென்று மருத்துவம் பார்த்து வருவதாகவும், கூடுதல் பணம் வாங்குவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற அவைக்கு தகவல் தெரிவித்தார்.
    • நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை.

    திண்டுக்கல்:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைக்கவும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை சார்பில் இதுகுறித்து அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கவும், விவாதங்களில் பங்கேற்குமாறும் அமைச்சர் பிரகலாத்ஜோஷி, தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து தான் அந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக ரவீந்திரநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் உள்ள ஒரே எம்.பி. தேனி பாராளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத். இவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில் பொய்யான தகவல்களை அளித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்தார்.

    ஏற்கனவே ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற அவைக்கு தகவல் தெரிவித்தார். இருந்தபோதும் ரவீந்திரநாத் அ.தி.மு.க. உறுப்பினராகவே தொடர்ந்து செயல்பட்டார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர். ரவீந்திரநாத்துக்கு மேல்முறையீடு செய்யும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஒரு மாதம் நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார். அதற்கான முயற்சியில் ரவீந்திரநாத் இறங்கி உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    தற்போது அ.தி.மு.க. பிரதிநிதியாக ரவீந்திரநாத் அழைக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை புதிய பஸ் நிலையத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • மொத்தம் 3484 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் தொகை ரூ.8 கோடியே 70 லட்சத்து 26 ஆயிரத்து 399 மதிப்பிலான உதவிகள் வழங்கினார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை புதிய பஸ் நிலையத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளரும் மாவட்ட கவுன்சிலருமான விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், பழனிச்சாமி, நகரச் செயலாளர் ராஜ்மோகன், வக்கீல் முத்துக்குமாரசாமி, பேரூராட்சி சேர்மன் சேக் சிக்கந்தர் பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

    தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டம் 110 பேருக்கும், பள்ளிகல்வித்துறை விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 301 பேருக்கும், வேளாண்மை துறை விவசாய உபகரணங்கள் மற்றும் இடுபொருள்கள் 24 பேருக்கும், வருவாய் துறை சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி ஒருவருக்கும், உழவர் பாதுகாப்பு அட்டை 400 பேருக்கும், இறப்பு நிவாரணம் 37 பேருக்கும், கல்வி உதவித்தொகை 2 பேருக்கும், திருமண உதவித்தொகை 11 பேருக்கும், ஆதி திராவிடர் நலத்துறை தையல் மிஷின் 2 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் சிறுதொழில் தையல் இயந்திரம் 3 பேருக்கும், ஊரக வளர்ச்சித்துறை தூய்மை காவலர்களுக்கான உபகரணங்கள் 98 பேருக்கும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான டிராக்டர் மற்றும் தள்ளுவண்டிகள் 18 பேருக்கும், ஊராட்சிகளுக்கான கணினிகள் 3, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் பொருள் துறை சார்பில் குடும்ப அட்டை 220 பேருக்கும், சமூகநலத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு திட்ட வைப்பு தொகை பத்திரம் 16 பேருக்கும், மருத்துவத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் 10 பேருக்கும், தொழிலாளர் மாதாந்திர ஓய்வூதியம் 4 பேருக்கும், பொது சுகாதாரத் துறை சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் 342 பேருக்கும், மக்களை தேடி மருத்துவ திட்ட மருந்து பெட்டகம் 10 பேருக்கும் என மொத்தம் 3484 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் தொகை ரூ.8 கோடியே 70 லட்சத்து 26 ஆயிரத்து 399 மதிப்பிலான உதவிகள் வழங்கினார்.

    இந்த விழாவில் தி.மு.க. நிர்வாகிகள், குடகிபட்டி ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி, ஆசிரியர் துரை, மதியரசு அயூப்கான், பத்திர எழுத்தர் பாலு, கோசுகுறிச்சி கலிபுல்லா, துவாரபதி மணி, வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜக்காபட்டி ஊராட்சியில் சிறு குளம் உள்ளது.இந்த குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
    • சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை,கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மீன்களை பிடித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ராஜக்காபட்டி ஊராட்சியில் சிறு குளம் உள்ளது.இந்த குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் சிறுகுளம் நிரம்பியது.விவசாயத்திற்கு சிறுகுளம் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது.இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று ஊராட்சி மன்ற தலைவர் பராசக்தி முருகேசன்,ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிறு குளத்தின் அருகே உள்ள கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.அதன் பின்னர் சிறுகுளத்திற்கு ஊர்வலமாக வந்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த மீன்பிடி திருவிழாவில் சாணார்பட்டி,மணியக்காரன்பட்டி, கம்பிளியம்பட்டி,வடமதுரை,காணப்பாடி,ஆலம்பட்டி,செங்குறிச்சி,நத்தம் உள்பட பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை,கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மீன்களை பிடித்தனர்.

    இதில் கட்லா, ஜிலேபி, விரால், தேளிவிரா, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த மீன்பிடி திருவிழாவில் பிடித்த மீன்களை கிராம மக்கள் தங்கள் இல்லங்களில் சமைத்து சாப்பிட்டனர்.இதனால் இந்த பகுதி முழுவதும் மீன் குழம்பு வாசம் கமகமவென்று வீசியது.

    ×