என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கொடைக்கானல் : பதிவு செய்யப்படாமல் இயங்கும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
- இணைய தளம் மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் பதிவிறக்கம் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு சுற்றுலா த்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பதிவு செய்யப்படாமல் செய ல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கொடைக்கானல்:
தமிழ்நாடு அரசு சுற்றுலா த்துறை சுற்றுலாப் பயணி களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு படுக்கை யறை மற்றும் காலை உணவு வழங்கும் ஹோம் ஸ்டே நிறுவனங்கள்,சாகச சுற்றுலா ஆப்ரேட்ட ர்கள்,கேரவன் பார்க் ஆப்ரேட்டர்கள், ஆகியோ ர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த உலக சுற்றுலா தினம் அன்று வெளியிடப்பட்டு ள்ளது.
இணைய தளம் மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் பதிவிறக்கம் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான தகவல்கள் பெறுவதற்கு கொடைக்கா னல் சுற்றுலா அலுவலக த்திற்கு நேரில் வந்து சம்பந்தப்பட்ட அலுவல ர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும் தமிழ்நாடு அரசு சுற்றுலா த்துறை யின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பதிவு செய்யப்படாமல் செய ல்பட்டு வரும் தங்கும் விடுதி களான படுக்கை மற்றும் காலை உணவு வழங்கி நடத்தப்படும் ஹோம் ஸ்டே ,சாகச சுற்றுலா ஆப்ரேட்ட ர்கள்,
முகாம் ஆப்ரேட்டர்கள் ஆகியோரின் செயல்பாடு தடை செய்யப்பட்டு உரிய மேல் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.






