என் மலர்
நீங்கள் தேடியது "ஆடி முதல் வெள்ளி"
- ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
- ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. நீண்டவரிசையில் பக்தர்கள் இதனை வாங்கிச்சென்றனர்.
இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அபிராமிஅம்மன், ஞானாம்பிகை அம்மனுக்கும், பத்மகிரீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூைஜகள் நடந்தன.
செட்டிநாயக்கன்பட்டி சிவபுரம் அழகாம்பிகை உடனுறை சிவகுருநாத சாமி கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. ஆதினம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரியார் தலைமையில் ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து ெகாண்டனர்.
ஆர்.எம்.காலனி வெக்காளியம்மனுக்கு இன்று ஆடிப்புரத்தை முன்னிட்டு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் நாகல்நகர் மாதாபுவனேஸ்வரி அம்மன்கோவில், சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் கோவில், நேருஜிநகர் பன்னாரியம்மன் கோவில், தெற்குத்தெரு பாதாளகாளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களிலும் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.






