search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.2.65 கோடி
    X

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.2.65 கோடி

    • பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26, 27 ஆகிய 2 நாட்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
    • உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874 வருவாயாக கிடைத்தது.

    பழனி :

    உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்பு நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை செலுத்துகின்றனர். இதற்காக நிர்வாகம் சார்பில் கோவில் பகுதியில் பல உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26, 27 ஆகிய 2 நாட்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று உண்டியல் காணிக்கை பணி தொடங்கியது. இதில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

    முன்னதாக கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணி அளவிடும் பணி நடைபெற்றது.

    உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874 வருவாயாக கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர். இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 878 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 1025 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 13 கிலோ (13573) கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    Next Story
    ×