என் மலர்
திண்டுக்கல்
- ஆடிமாதம் 5 சனிக்கிழமைகளிலும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
- ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், தீபராதனை நடந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மலை க்கோட்டை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதேபோல் ஆடிமாதம் 5 சனிக்கிழமைகளிலும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், தீபராதனை நடந்தது.
பக்தர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். ஆடி பெருக்கு எனப்படும் ஆடி 18ம் நாள் சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வரும் வைபவம் நடை பெறும். தொடர்ந்து ஆடி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை மற்றும் பரிகார பூஜைகள் நடைபெறும்.
- ஆடி மாதத்தில் கோவில்க ளில் காய்கறிகள் வாங்குவது குறைந்து விடுகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டி லும் காய்கறிகளின் விலை யும் பாதியாக குறைகிறது.
- ஆடி மாதம் தொடங்கியதை யொட்டி தக்காளி, சின்னவெங்காயத்தை தவிர மற்ற காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
திண்டுக்கல்:
ஆடி மாதம் தொடங்கி னாலே கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு கிடா வெட்டி கறி விருந்து படைக்கப்படும். பெரு ம்பாலான கோவில்களில் அசைவ உணவுகளை பக்த ர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் கோவில்க ளில் காய்கறிகள் வாங்குவது குறைந்து விடுகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டி லும் காய்கறிகளின் விலை யும் பாதியாக குறைகிறது.
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் மொத்தம் 291 கடைகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்ட பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளை வியாபாரிகள் இங்கு விற்பனை செய்கின்ற னர்.
இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்கியதை யொட்டி தக்காளி, சின்னவெங்காயத்தை தவிர மற்ற காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்ற காய்கறிகள் தற்போது, ரூ.20 முதல் ரூ.40 வரையே விற்பனை ஆகிறது.
அதன்படி ரூ.70 க்கு விற்ற ஒரு கிலோ கேரட் தற்போது ரூ.40க்கும், ரூ.50 க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.25க்கும் விற்கப்பட்டது. ரூ.100க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.50க்கும், ரூ.60க்கு விற்ற கொத்தமல்லி கட்டு ரூ.30க்கும் விலைபோனது. ரூ.50க்கும் விற்ற முள்ளங்கி ரூ.15க்கும், ரூ.50 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.20க்கும், ரூ.50க்கு விற்ற பீட்ரூட் ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.120க்கு விற்ற பீன்ஸ் ரூ.80க்கு விலைபோனது.
மொச்சையை பொறுத்த வரை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே சீசன் இருக்கும். ஆனால் தேனி மாவட்டத்தில் தற்போது மொச்சை சாகு படி செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்து திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கிலோ மொச்சை ரூ.50 க்கு தற்போது விற்பனை ஆகிறது.
தினமும் ஒரு டன் வரை மொச்சை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சீசன் காலத்தில் இதன் விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடி மாதம் தொடங்கியதை முன்னிட்டு மார்க்கெட்டுக்கு வாடிக்கையாளர்கள் வருகையும் குறைந்துவிட்டது. இதனால் மார்க்கெட்டில் வழக்கமான விற்பனை நடைபெறவில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்து ள்ளனர்.
- அம்மன் கோவில்களில் ஆடிமாதம் பூரம் நட்சத்திர நாளன்று ஆடிப்பூர வழிபாடு நடைபெறும்
- ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்:டு பிரசாதமாக பெண்களுக்கு அணிவிக்கப்பட்டது.
ஆத்தூர்:
அம்மன் கோவில்களில் ஆடிமாதம் பூரம் நட்சத்திர நாளன்று ஆடிப்பூர வழிபாடு நடைபெறும். அன்றைய நாட்களில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் வளையல்கள் பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும். அதன்படி ஆத்தூர் வண்டிகாளியம்மன் கோவில், சீவல்சரகு மாரியம்மன் கோவில், சின்னாளபட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில், பாலநாகம்மாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும் 9 வகை சாதங்களும் அம்மனுக்கு படையல் இடப்பட்டது. அதன்பின்பு சுமங்கலி, கர்ப்பிணி பெண்களுக்கு அந்த வளையல்கள் அணிவிக்கப்பட்டன. சாமிக்கு படையிலிடப்பட்ட சாதங்களும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த வளையல்களை கன்னிப்பெண்கள் அணிந்து கொண்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பதும், திருமணமான பெண்கள் அணிந்து கொண்டால் விரைவில் வளைகாப்பு நடக்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
- பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தும், பராமரிப்பு முறைகளை மாற்றியும் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் கடந்த 6 மாதங்களாக வேளாண்மை துறை அலுவலகத்துக்கு பல்வேறு புகார் அளிக்கப்பட்டது.
- மர்ம பூச்சியை கட்டுப்படுத்த கோரி விவசாயிகள் நிலக்கோட்டை வேளா ண்மை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நிலக்கோட்டை.:
நிலக்கோட்டை அருகே முருகத்தூரான்பட்டி, சிலுக்குவார்பட்டி, கட்ட க்கூத்தன்பட்டி பள்ளபட்டி, கொடைரோடு, கொங்க பட்டி, ஆவாரம்பட்டி, கல்லடிபட்டி, குரும்பபட்டி, அக்கரகாரபட்டி, காமலாபுரம், அழகம்பட்டி, மைக்கேல் பாளையம் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரபரப்பளவில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மல்லிகை பூ செடியில் மர்ம பூச்சி தாக்கு தல் காரணமாக பூக்கள் அரும்பிலேயே கருகி உதிர்கிறது. இதனால் செடிகள் முற்றிலும் கருகி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தும், பராமரிப்பு முறைகளை மாற்றியும் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் கடந்த 6 மாதங்களாக வேளாண்மை துறை அலுவலகத்துக்கு பல்வேறு புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால், மல்லிகை பூச்செடியை தாக்கி அழிக்கும் மர்ம பூச்சியை கட்டுப்படுத்த கோரி விவசாயிகள் நிலக்கோட்டை வேளா ண்மை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அறிந்ததும் வேளாண்மைத்துறை துணை இயக்குனர் உமா அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வரும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் வேளாண் ஆராய்ச்சி ஆய்வு மேற்கொண்டு மர்ம பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
- அடுத்தடுத்து 3 வாகனங்களும் மோதிக் கொண்டதால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.
- விபத்தில் தனியார் பஸ் டிரைவர் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
ஒட்டன்சத்திரம்:
கோவையில் இருந்து தென்காசி நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆம்னி பஸ் வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சை தென்காசியை சேர்ந்த காளிதாஸ் (வயது36) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பாறைவலசு பிரிவு பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது மதுரையில் இருந்து கோவை நோக்கி புண்ணாக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லாரி மீது ஆம்னிபஸ் பயங்கரமாக மோதியது. அப்போது லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சும், பயங்கரமாக மோதியது. அடுத்தடுத்து 3 வாகனங்களும் மோதிக் கொண்டதால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் தனியார் பஸ் மற்றும் லாரியின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
விபத்தில் தனியார் பஸ் டிரைவர் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து அம்பிளிக்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய 14 பயணிகளை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். தனியார் பஸ் டிரைவர் தூக்க கலக்கத்தில் லாரி மீது மோதியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி மாற்று வாகனங்கள் மூலம் பயணிகளை அனுப்பி வைத்தனர்.
- வழிபாட்டில் பக்தர்கள் எலுமிச்சம் பழம், பூ, தேங்காய், பத்தி, சூடம் மற்றும் நெய் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது.
பெரும்பாறை:
பண்ணைக்காடு மயான காளியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. வழிபாட்டில் பக்தர்கள் எலுமிச்சம் பழம், பூ, தேங்காய், பத்தி, சூடம் மற்றும் நெய் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது.
அதேபோல் தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கோவில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- வகுப்பறையையொட்டியுள்ள காலி இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கொளுந்துவிட்டு எரிந்ததால் தீயின் அனல் காற்று வீசியதால் வகுப்பறையில் இருந்த மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
- ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து 1 மணி போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் 4 வழிச்சாலையோரத்தில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. பள்ளியின் வகுப்பறைகளின் பின்பகுதியில் உள்ள காலி இடத்தில் காய்ந்த செடி, கொடிகளாக இருந்தது.
இந்த நிலையில் வகுப்பறையையொட்டியுள்ள காலி இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கொளுந்துவிட்டு எரிந்தது.
அப்போது தீயின் அனல் காற்று வீசியதால் வகுப்பறையில் இருந்த மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து 1 மணி போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
- கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க. ,விடுதலை சிறுத்தை கட்சி, ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொடைக்கானல்:
மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க. ,விடுதலை சிறுத்தை கட்சி, ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத மத்திய, மணிப்பூர் மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் .
கலவரத்தை தூண்டும் வகையில் பெண்களை இழிவு படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- சரவணனை திடீரென பைக்கில் இருந்து கீழே தள்ளி சரமாரியாக அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் கொலையாளிகளை தேடி வந்தநிலையில் அருப்புக்கோட்டை கோர்ட்டில் 8 பேர் சரணடைந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் தீப்பாச்சியம்மன் கோவில் கொல்லம்பட்டறை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது30). இவர் திண்டுக்கல் கிழக்கு தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவருக்கு திருமணமாகி பவதாரணி என்ற மனைவியும், வேதமித்திரன் (2) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வ.உ.சி. நகருக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். தினமும் மாலையில் தனது மகனுடன் அண்ணாநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிவிட்டு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று இரவு தனது மகனுடன் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் சரவணனை திடீரென பைக்கில் இருந்து கீழே தள்ளி சரமாரியாக அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் உயிரிழந்தார். இதை பார்த்த அவரது மகன் அச்சத்தில் உறைந்து கதறி அழுதார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. ேகாகுலகி ருஷ்ணன், நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்கள் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிவப்புநிற காரில் வந்த கும்பல் சென்றதை உறுதி செய்த போலீசார் அதனை மாவட்ட எல்லையைவிட்டு செல்லாமல் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிக்மு கமது, முகமதுமீ ரான், கலில்அகமது, சதாம்உசேன், முகமது இர்பால், சக்திமகேஸ்வர், முகமது அப்துல்லா, சேக்அப்துல்லா ஆகிய 8 பேரும் அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்து சரண் அடைந்த அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவி ட்டார். இதனிடையே சரண் அடைந்த 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓரினசேர்க்கை தொடர்பான வீடியோவை தனது நண்பர் மூலம் சரவணன் முகநூலில் பதிவிட்டதாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
சரவணனை கொலை செய்ய பல நாட்களாக திட்டம் தீட்டி அவரது நடவடிக்கைகளை நோட்டமிட்டு தீர்த்து கட்டி உள்ளனர். காவலில் எடுத்து விசாரணை நடத்தியபிறகு முழு விவரங்கள் தெரிய வரும் என்றனர்.
- குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டினார்.
- விசாரணை முடிவில் சேகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
கொடைக்கானல்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறை சேர்ந்தவர் சேகர் (வயது33). கூலித்தொழிலாளி. கடந்த 2014-ம் ஆண்டு பெரும்பாறையை சேர்ந்த ராதிகா என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மூணாறில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சேகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாறைக்கு வந்து தோட்ட வேலை பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சேகர் ராதிகாவை அரிவாளால் வெட்டினார்.
படுகாயம் அடைந்த ராதிகா திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவில் பதுங்கி இருந்த சேகரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கொடைக்கானல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது. நீதிபதி வழக்கை விசாரித்தார். விசாரணை முடிவில் சேகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
- திண்டுக்கல்லில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலக்தில் நடைபெற்றது.
- இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்துகொண்டு பேசினார்.
திண்டுக்கல்:
மதுரையில் அடுத்த மாதம் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலக்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தனர். தற்போது தகுதியுள்ள மகளிருக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்து அதற்காக விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.
இது பெரும்பாலான மகளிருக்கு கிடைக்காது. தி.மு.க.வின் ஏமாற்று வேலைதான் இந்த உரிமைத் தொகை திட்டம். தி.மு.க.வின் பொய் பிரசாரங்களை மகளிர் அணி நிர்வாகிகள் வீடு தோறும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும்.
அடுத்த மாதம் மதுரையில் நடைபெற உள்ள கட்சியின் எழுச்சி மாநாட்டுக்கு குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி, மேற்கு மாவட்ட செயலாளர் வளர்மதி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் சி.சீனிவாசன், இரா.விசுவநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
தேன்மொழி எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், பிரேம்குமார், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், வி.டி.ராஜன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- குற்றவாளிகள் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்பட வேண்டும் என கோசங்கள் எழுப்பினர்.
குள்ளனம்பட்டி:
மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திண்டுக்கல் மாவட்ட வக்கீல்கள் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு வக்கீல் ஆனந்த முனியராசன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் பெண்களுக்கு நடந்த அநீதியை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்,குற்றவாளிகள் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்பட வேண்டும்.இதுபோல வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் கென்னடி ஜெரால்டு, சகாயராஜ்,உதயகுமார், முகம்மது இக்பால், தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.






