search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் தி.மு.க. நிர்வாகி கொலை : அருப்புக்கோட்டை கோர்ட்டில் 8 பேர் சரண்
    X

    கொலை செய்யப்பட்ட சரவணன்.

    திண்டுக்கல் தி.மு.க. நிர்வாகி கொலை : அருப்புக்கோட்டை கோர்ட்டில் 8 பேர் சரண்

    • சரவணனை திடீரென பைக்கில் இருந்து கீழே தள்ளி சரமாரியாக அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் கொலையாளிகளை தேடி வந்தநிலையில் அருப்புக்கோட்டை கோர்ட்டில் 8 பேர் சரணடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தீப்பாச்சியம்மன் கோவில் கொல்லம்பட்டறை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது30). இவர் திண்டுக்கல் கிழக்கு தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவருக்கு திருமணமாகி பவதாரணி என்ற மனைவியும், வேதமித்திரன் (2) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வ.உ.சி. நகருக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். தினமும் மாலையில் தனது மகனுடன் அண்ணாநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிவிட்டு செல்வது வழக்கம்.

    அதன்படி நேற்று இரவு தனது மகனுடன் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் சரவணனை திடீரென பைக்கில் இருந்து கீழே தள்ளி சரமாரியாக அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் உயிரிழந்தார். இதை பார்த்த அவரது மகன் அச்சத்தில் உறைந்து கதறி அழுதார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. ேகாகுலகி ருஷ்ணன், நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்கள் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சிவப்புநிற காரில் வந்த கும்பல் சென்றதை உறுதி செய்த போலீசார் அதனை மாவட்ட எல்லையைவிட்டு செல்லாமல் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிக்மு கமது, முகமதுமீ ரான், கலில்அகமது, சதாம்உசேன், முகமது இர்பால், சக்திமகேஸ்வர், முகமது அப்துல்லா, சேக்அப்துல்லா ஆகிய 8 பேரும் அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்து சரண் அடைந்த அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவி ட்டார். இதனிடையே சரண் அடைந்த 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓரினசேர்க்கை தொடர்பான வீடியோவை தனது நண்பர் மூலம் சரவணன் முகநூலில் பதிவிட்டதாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    சரவணனை கொலை செய்ய பல நாட்களாக திட்டம் தீட்டி அவரது நடவடிக்கைகளை நோட்டமிட்டு தீர்த்து கட்டி உள்ளனர். காவலில் எடுத்து விசாரணை நடத்தியபிறகு முழு விவரங்கள் தெரிய வரும் என்றனர்.

    Next Story
    ×