என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை அரிவாளால் வெட்டிய  தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
    X

    கோப்பு படம்

    மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

    • குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டினார்.
    • விசாரணை முடிவில் சேகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    கொடைக்கானல்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறை சேர்ந்தவர் சேகர் (வயது33). கூலித்தொழிலாளி. கடந்த 2014-ம் ஆண்டு பெரும்பாறையை சேர்ந்த ராதிகா என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மூணாறில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சேகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாறைக்கு வந்து தோட்ட வேலை பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சேகர் ராதிகாவை அரிவாளால் வெட்டினார்.

    படுகாயம் அடைந்த ராதிகா திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவில் பதுங்கி இருந்த சேகரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு கொடைக்கானல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது. நீதிபதி வழக்கை விசாரித்தார். விசாரணை முடிவில் சேகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×