திண்டுக்கல் சனீஸ்வரன் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு

ஆடிமாதம் 5 சனிக்கிழமைகளிலும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், தீபராதனை நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வர பகவான்.
சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வர பகவான்.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மலை க்கோட்டை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதேபோல் ஆடிமாதம் 5 சனிக்கிழமைகளிலும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், தீபராதனை நடந்தது.

பக்தர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். ஆடி பெருக்கு எனப்படும் ஆடி 18ம் நாள் சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வரும் வைபவம் நடை பெறும். தொடர்ந்து ஆடி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை மற்றும் பரிகார பூஜைகள் நடைபெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com