என் மலர்
நீங்கள் தேடியது "சர்வதேச மூளை தின விழா"
- நத்தம் என்.பி.ஆர். கல்வி குழுமத்தில் என்.பி.ஆர். செவிலியர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக மூளை தின விழா நடைபெற்றது.
- மூளை நலன் மற்றும் மூளையில் ஏற்படும் குறைபாடுகள், மூளையின் செயல் திறன்கள் மற்றும் அதை சரி செய்தல் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்வி குழுமத்தில் என்.பி.ஆர். செவிலியர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக மூளை தின விழா நடைபெற்றது. இந்நிக ழ்ச்சிக்கு என்.பி.ஆர். செவிலியர் கல்லூரி முதல்வர் அன்னலட்சுமி தலைமை தாங்கினார். முதலாம் ஆண்டு மாணவர் திவான் வரவேற்று பேசினார்.
மதுரை அகானா மருத்துவமனை மூத்த ஆலோசகர் டாக்டர் ராமசுப்பிரமணியன், உளவியல் துறை டாக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு
செவிலியர் மாணவ - மாணவிகளிடம் பேசிய தாவது:-
சர்வதேச மூளை தினத்தில் குறிக்கோளாக உலகளாவிய விழிப்பு ணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமநிலையை மேம்படுத்துதல் என்ற குறிக்கோளை முன்னிறுத்தி மூளை நலன் மற்றும் மூளையில் ஏற்படும் குறைபாடுகள், மூளையின் செயல் திறன்கள் மற்றும் அதை சரி செய்தல் பற்றியும், மூளையின் வளர்ச்சியில் தூக்கத்தின் பங்கினை பற்றியும், அலைபேசியின் அடிமைத்தனம் மற்றும் அதிலிருந்து மீண்டு வரும் வழிகளைப் பற்றியும் விளக்கி பேசினர்.
செவிலியர் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவன் அஜ்மல் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடு களை கல்லூரி நிர்வாகத்தி னர் செய்திருந்தனர்.






