என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
- திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் குழந்தை திருமணங்கள் இல்லா இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் குழந்தை திருமணங்கள் இல்லா இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்டோ லீனஸ் ராஜ் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராதா கிருஷ்ணன், சமூக ஆர்வலர் ரெகுநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் உறுதிமொழி ஏற்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைதி அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர்கள் மருதைக்கலாம், சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.






