என் மலர்
நீங்கள் தேடியது "Prevention of child marriage"
- சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று பெருமிதம்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் யூனியனில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியை சரவணன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியானது நமது மாவட்டத்தில் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி அந்தந்த பகுதிகளில் தினமும் நடந்து வருகிறது.
இப்பேரனியின் நோக்கமே குழந்தை திருமணத்தை தடுத்தல் குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்தல் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல் புதுமைப்பெண் திட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தல் பெண் கல்வியை ஊக்குவித்தல் பாலின வன்முறைக்கு எதிரான செயல்களை தடுத்தல் பெண்களுக்கு சமூகத்தில் சம வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த குழந்தைகளை நேரடியாக தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தல் ஆகியவைகள் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகளாகும் இவைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது தான் இப்பேரணியின் நோக்கம் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டங்களின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்ற பாதையில் செல்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் மேலும் நமது மாவட்டத்தின் அமைச்சர் எவ வேலு தனியார் நிறுவனங்களை அழைத்து வந்து வேலைவாய்ப்பு முகாமை ஏற்படுத்தினார் இம்முகாம்களில் ஆண்களை விட அதிக அளவு பெண்கள் தான் தேர்வானார்கள் எனவே பெண்கள் எதற்காகவும் வீட்டில் முடங்காமல் வெளியில் வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் அன்பரசிராஜசேகரன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் எழிலரசி உட்பட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் திட்ட அணியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்
- திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் குழந்தை திருமணங்கள் இல்லா இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் குழந்தை திருமணங்கள் இல்லா இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்டோ லீனஸ் ராஜ் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராதா கிருஷ்ணன், சமூக ஆர்வலர் ரெகுநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் உறுதிமொழி ஏற்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைதி அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர்கள் மருதைக்கலாம், சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.






