என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    திண்டுக்கல்லில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • இந்நிலையில் சுனிதா நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல்:

    நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). இவர் கூர்க்காவாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சுனிதா (20) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் திண்டுக்கல் நாயக்கர் புதுத் தெரு, சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே வசித்து வந்தனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுனிதா நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நகர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து சுனிதாவின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×