என் மலர்
நீங்கள் தேடியது "கவிழ்ந்த மண் லாரி"
- இந்த சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்புகள் மட்டுமே செல்லக்கூடிய சாலையில் லாரி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.
- லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்ததால் தொழிலாளர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து இன்று காலை பாச்சலூர், கடைசிக்காடு வழியாக செம்பரான்குளத்திற்கு கிரசர் மண் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
இந்த லாரி கடைசிக்காடு-செம்பரான்குளம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்புகள் மட்டுமே செல்ல முடியும். அதுபோன்ற குறுகலான சாலையில் லாரி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த சாலையை கடந்து தினந்தோறும் ஏராளமான தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்வது வழக்கம்.
காலையில் லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்ததால் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் பிற்பகல் வரையில் லாரி அகற்றப்படவில்லை.
எனவே எஸ்டேட்டுகளுக்கு கட்டிட பணிகளுக்காக லாரிகள் வரும் போது மிகுந்த கவனத்துடன் செல்ல அறிவுரை வழங்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






