search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food donation"

    • தேவேந்திர குல மக்கள் இயக்க நிறுவனரும் கட்சித் தலைவருமான குமுளி ராஜ்குமார் பாண்டியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் உத்திரபாண்டியன் தலைமையில் குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள திரவிய நகர் லில்லியன் மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு தேவேந்திர குல மக்கள் இயக்க நிறுவனரும் கட்சித் தலைவருமான குமுளி ராஜ்குமார் பாண்டியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் உத்திரபாண்டியன் தலைமையில் குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி ஆக்னேஷ் சேவியர், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் தண்டபாணி வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் நாகரத்தினம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் மங்கலத்தில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.
    • வள்ளலார் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    மங்கலம் :

    காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி மங்கலம் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் மங்கலத்தில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.

    இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடியேற்ற ப்பட்டது.இதைத்தொடர்ந்து மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் ஏற்பாட்டில் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள வள்ளலார் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராகிம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மங்கலம் நகர தலைவர் சாதிக் அலி, நகர செயலாளர் முகமதுரபி, மங்கலம் ஊராட்சி மன்ற 3வது வார்டு உறுப்பினர் ரபிதீன், பல்லடம் தொகுதி பொறுப்பாளர் இர்சாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டி அருகே அன்னதானம்- மருத்துவ முகாம் நடந்தது.
    • அன்னதானத்தை விவசாய விஞ்ஞானி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

    வாடிப்பட்டி

    ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வாடிப்பட்டி அருகே உள்ள சாணாம்பட்டியில் பதினென்சித்தர்பீடத்தில் சித்தர்களுக்கு சிறப்புபூஜையும், அன்ன தானம், மருத்துவமுகாமும் நடந்தது. பதினெ ன்சித்தர்களுக்கு தமிழ்முறைப்படி யாக சாலைபூஜைசெய்து சிறப்புஅபிஷேக, ஆராதனை, அர்ச்சனை நடந்தது.

    யாகசாலைபூஜையை சித்தர்பீட நிறுவனத்தலைவர் விஜயபாஸ்கர் செய்தார். அன்னதானத்தை விவசாய விஞ்ஞானி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். ஜெயராமன் முன்னிலை வகித்தார். இரும்பாடி ராஜேந்திரன் வரவேற்றார். டாக்டர் திருவையாறு ரகு கருத்துரை வழங்கினார். மருத்துவ முகாமில் சித்தா, அக்குபஞ்சர், வர்மா, இயற்கை மருத்துவமுறையில் மருத்துவர்கள் லிங்குசெல்வி, செல்லத்தாய், ஜோதிமுனீஸ் ஆகியோர் இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை, மருந்து, மாத்திரைகள் 300 பேருக்கு வழங்கினர். 

    ×