என் மலர்
நீங்கள் தேடியது "Kaide Millat's birthday"
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் மங்கலத்தில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.
- வள்ளலார் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
மங்கலம் :
காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி மங்கலம் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் மங்கலத்தில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடியேற்ற ப்பட்டது.இதைத்தொடர்ந்து மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் ஏற்பாட்டில் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள வள்ளலார் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராகிம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மங்கலம் நகர தலைவர் சாதிக் அலி, நகர செயலாளர் முகமதுரபி, மங்கலம் ஊராட்சி மன்ற 3வது வார்டு உறுப்பினர் ரபிதீன், பல்லடம் தொகுதி பொறுப்பாளர் இர்சாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






