என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பயன்பாடற்ற முறையில் குடிநீர் தொட்டிகள்
- புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு குடிநீர் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.
- இந்தக் குடிநீர் தொட்டிகள் தண்ணீரின்றி பயன்பாடற்ற முறையில் காட்சி பொருளாக இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர் கணேஷ் பாபு தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியாக இயங்கி வருகிறது. 5 மாடி கட்டிடத்தில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து உள் நோயாளியாக 2000-க்கும் மேற்பட்டோரும், வெளி நோயாளிகளாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு குடிநீர் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடிநீர் தொட்டிகள் தண்ணீரின்றி பயன்பாடற்ற முறையில் காட்சி பொருளாக இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர் கணேஷ் பாபு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ஐந்து மாடி கட்டிடத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றில் கூட தண்ணீர் வருவதில்லை. குடிநீருக்கு கட்டிடத்தின் அடித்தளத்திற்கு வந்து தண்ணீர் குடித்து செல்லும் அவலநிலைக்கு ஆளாகின்றனர். வயதானவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்கள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.






