கொடைக்கானலில் 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வுக்கு சென்ற போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சுமார் 250 கிலோ ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்ததுடிரைவர் மலைச்சாமியை கைது செய்தனர். மேலும் வாகனத்துடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
ரேசன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்.
ரேசன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்.
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் பிலிஸ்விலா பகுதியில் உள்ள ரேசன் கடை அருகே குடியிருப்பு பகுதியில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கொடைக்கானல் குடிமை பொருள் வட்டாட்சியர் சரவண வாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் சுமார் 250 கிலோ ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பள்ளங்கி கோம்பையை சேர்ந்த டிரைவர் மலைச்சாமியை கைது செய்தனர். மேலும் வாகனத்துடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com