என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் கொடைக்கானலின் எழிலை தங்கள் கேமராவில் புகைப்படமாக பதிவு செய்து மகிழ்ந்தனர்.
    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது இதமானசீதோசனத்தை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வருகை தந்தனர்.

    வனப்பகுதிகளில் உள்ள மோயர் சதுக்கம், குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்மரக்காடுகள், கோக்கர்ஸ் வாக் உள்பட பல்வேறு இடங்களில் மேக கூட்டங்களுக்கு இடையே இயற்கை எழிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் கொடைக்கானலின் எழிலை தங்கள் கேமராவில் புகைப்படமாக பதிவு செய்து மகிழ்ந்தனர்.

    வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, கரடிச்சோலை அருவி ஆகிய அருவிகள் முன்பு இளைஞர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவ்வப்போது பெய்த சாரல் மழை சுற்றுலா பயணிகளை உற்சாகமடைய செய்தது. நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரியும், குதிரை சவாரி மேலும் சிலர் நடைபயிற்சி செய்தும் மகிழ்ந்தனர். வாரவிடுமுறை, மொகரம் பண்டிகையையொட்டி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் பல்வேறு இடங்களில் கட்டண உயர்வு அதிகரிப்பின் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வாடகை கார் ஓட்டுனர்கள் கவலை தெரிவித்தனர். பேரிஜம் பகுதியில் கார், வேன்களுக்கு கட்டண உயர்வு அறிவிப்பப்பட்டுள்ளதால் சுற்றுலாபயணிகள் சிலர் அந்த பகுதியை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும்இனி வரும் காலங்களில் சுற்றுலாபயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் கொடைக்கானல் செண்பகனூர் பெட்ரோல் மையம் முதல் ஏரிச்சாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

    • வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், சிலர் சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.
    • ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் சிரமமடைந்ததால் பழுது சரிபார்க்கப்பட்டு இன்று வழக்கம்போல் ரோப்கார் சேவை இயங்கியது.

    பழனி:

    3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில்இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    குறிப்பாக மாத கார்த்திகை, விடுமுறை நாட்கள், முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், சிலர் சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.

    அதிகாலை முதலே அடிவாரம் பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி, மலைக்கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் குவிந்தனர். மேலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வ தற்கான ரோப்கார், மின் இழுவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். காற்றின்வேகம் காரணமாக நேற்று ரோப்காரில் பழுது ஏற்பட்டது. ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் சிரமமடைந்தனர். அதன் பின் பழுது சரிபார்க்கப்பட்டு இன்று வழக்கம்போல் ரோப்கார் சேவை இயங்கியது. இதேபோல் மலைக்கோவிலில் உள்ள பொது, கட்டண தரிசனங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகபெருமானை தரிசனம் செய்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரி வீதிகள் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் சாமி தரிசனம் செய்த பின்பும் பக்தர்கள் தங்கள் ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது

    • கல்லூரி மாணவிகளுக்கு தேனீ வளர்ப்பு, தேனீகளின் வகைகள், தேனீகளின் குணங்களை அறியும் வகையில் செயல்முறை பயிற்சி நடைபெற்றது.
    • மேலும் தேனீக்களால் பூக்களில் ஏற்படக்கூடிய மகரந்த சேர்க்கை, விளைச்சல் அதிகரிக்க தேனீக்களின் பங்கு என்ன என்பது குறித்து ஆய்வு செய்து தெரிந்து கொண்டனர்.

    பழனி:

    பழனி ஆண்டவர் பெண்கள் கலை பண்பாட்டுக் கல்லூரியில் உயிரியல், விலங்கியல், தாரவியல் பாடப் பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி மாணவிகளுக்கு தேனீ வளர்ப்பு, தேனீகளின் வகைகள், தேனீகளின் குணங்களை அறியும் வகையில் செயல்முறை பயிற்சி நடைபெற்றது.

    மேலும் தேனீக்களால் பூக்களில் ஏற்படக்கூடிய மகரந்த சேர்க்கை, விளைச்சல் அதிகரிக்க தேனீக்களின் பங்கு என்ன என்பது குறித்து கொடைக்கானல் சாலையில் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த தேன் பண்ணையில் மாணவிகள் தேனீக்களை பற்றி ஆய்வு செய்து தெரிந்து கொண்டனர்.

    தேனி ஆராய்ச்சி மற்றும் இயற்கை ஆர்வலர்களான இசாக் மற்றும் பாத்திமா ஆகியோர் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல்லில் நேற்று மாலை வழக்கத்தை விட பலத்த சூறைக்காற்று வீசியதால் நேருஜி நகரில் சுமார் 60 ஆண்டு பழமையான வேப்பமரம் கிளை முறிந்து மின் வயரில் விழுந்தது.
    • இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் ஆடி மாதம் ெதாடங்கியதில் இருந்து பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் பைக்கில் செல்பவர்கள் மட்டுமல்லாது பாதசாரிகளும் அவதி அடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் நேற்று மாலை வழக்கத்தை விட பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் நேருஜி நகரில் சுமார் 60 ஆண்டு பழமையான வேப்பமரம் கிளை முறிந்து மின் வயரில் விழுந்தது.

    இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மின் வாரியத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமை யிலான தீயணைப்புத்து றையினர் சுமார் 1 மணி நேரம் போராடி மரத்தை அப்புறப்படுத்தினர்.

    பின்னர் மின்வாரிய ஊழியர்கள் மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

    • எரியோடு இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையில் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
    • சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ.21200 மற்றும் 12 பைக்குகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை, குஜிலியம்பாறை, எரியோடு, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டு சூதாட்ட கும்பலை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் குஜிலியம்பாறை அருகே காளப்பட்டியில் உள்ள மன மகிழ்மன்றத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து எரியோடு இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையில் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பணம் வைத்து சூதாடிய 23 பேரை கைது செய்தனர்.

    மன மகிழ்மன்றத்தின் உரிமையாளர் டென்சிங் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ.21200 மற்றும் 12 பைக்குகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆய்வின் போது பேசிய அமைச்சர் இ.பெரியசாமி, தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளபடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வரும் தெரிவித்தார்.
    • தினசரி காலை 50 விண்ணப்பங்கள், மாலையில் 50 விண்ணப்பங்கள் என 100 விண்ணப்பங்களை பதிவேற்றும் வகையில் முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கும்மம்பட்டியில் நடைபெற்ற கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்ற முகாம்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பதிவேற்ற முறைகள், பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின் போது பேசிய அமைச்சர் இ.பெரியசாமி, தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளபடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வரும் செப்டம்பர்-15 ம் தேதி முதல் வழங்க இருக்கும் நிலையில், தினசரி காலை 50 விண்ணப்பங்கள், மாலையில் 50 விண்ணப்பங்கள் என 100 விண்ணப்பங்களை பதிவேற்றும் வகையில் முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த முகாம்கள் அடுத்த ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை நடைபெறும். எனவே பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு அனைவரும் அந்தந்த பகுதியிலேயே விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரி முருகேசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஆத்தூர் (மேற்கு) ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், வீரக்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல், ஒன்றிய கவுன்சிலர் செல்வி காங்கேயன், ஊராட்சி செயலர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • கடந்த 2 நாட்களாக இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இந்த நிலையில் சேகர் வெளியே வந்து தனது மகள் தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார்.
    • அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரது மகள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் சேகர். நெசவு தொழில் பார்த்து வந்த இவர் தற்போது வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வீட்டிலேயே நெசவு செய்து வருகிறார்.

    இவர்களது மகள் ஹரிப்பிரியா (வயது22). பட்டதாரியான இவருக்கு திருமணமாகவில்லை. பெரும்பாலும் வீட்டை விட்டு தாய், மகள் வெளியே வருவதில்லை. சேகர் மட்டும் தொழில் நிமித்தமாக சென்று வந்துள்ளார்.

    கடந்த 2 நாட்களாக இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இந்த நிலையில் சேகர் வெளியே வந்து தனது மகள் தவறி விழுந்து விட்டதாகவும், இதனால் 2 நாட்கள் பட்டினியாக உள்ளதால் உணவு தரும்படி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ஹரிப்பிரியா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

    இது குறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது ஹரிப்பிரியா உயிரிழந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்து கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஹரிப்பிரியா இறந்து 2 நாட்களுக்கு பின்னர் தகவல் தெரிவித்தது ஏன்? என்ற கோணத்தில் போலீசார் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தம் எடுத்துக்கொண்டு கோவிலை வந்தடைந்தனர்.
    • இன்று 30-ந்தேதி துரோபதியம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே பெரியூபட்டியில் உள்ள மதுரைவீரன், பட்டாணி, சன்னாசி, துரோபதி, வீரபுத்திரன் ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது. இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி இந்தாண்டு திருவிழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தம் எடுத்துக்கொண்டு கோவிலை வந்தடைந்தனர்.

    21-ந் தேதி காப்புகட்டி 8-நாட்கள் விரதம் இருந்தனர். அதனைத்தொடர்ந்து தினசரி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 28-ந்தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர். நேற்று கிடாவெட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து மதுரை வீரனுக்கு அசைவ படையல் போட்டு சிறப்பு பூஜை, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று 30-ந்தேதி துரோபதியம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் சிசுக்களை இங்கு வீசி சென்றவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே உள்ள குப்பைத் தொட்டியை நாய்கள் சுற்றி வந்தபடி இருந்தன. இன்று காலை இவ்வழியாக சென்ற பொதுமக்கள் நாய்களை விரட்டி குப்பைத் தொட்டியை பார்த்தபோது 2 பெண் சிசுக்கள் கிடந்தன.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விஷயம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் குப்பைத் தொட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடினர்.

    இது குறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பெண் சிசு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குப்பைத் தொட்டி அருகே கிடந்ததால் சிசுக்களை நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதில் ஒரு சிசுவின் தலையை காணவில்லை. போலீசார் சிசுக்களை இங்கு வீசி சென்றவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் உள்ளதா? அதில் சிசுவை வீசிச் சென்றவர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். 2 பெண் சிசுக்களை வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை தேடி வருகின்றனர்.

    முறையற்ற உறவில் பிறந்த குழந்தைகளா அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பேரிஜம் செல்லும் நுழைவாயில் கட்டணத்தை வனத்துறை உயர்த்தியுள்ளது
    • வாடகை வாகன கட்டணத்தை தாங்கள் மீண்டும் உயர்த்தும் நிலையில் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்லும் பயணத்தை ரத்து செய்து விடுவார்கள்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு வனத்துறை, தோட்டக்கலை துறை, நகராட்சி மற்றும் தனியார் இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அதிகமாக உள்ளன. இதில் கட்டணம் மற்றும் கட்டணமில்லாத சுற்றுலா தலங்களும் உள்ளன. குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் அதிகமாக சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்து செல்கி ன்றனர். வனத்துறையினர் அவ்வப்போது கட்டணங்களை உயர்த்துவது நடைமுறையாக உள்ளது.

    ஒரு சில நேரங்களில் எதிர்ப்புகள் எழும் நிலையில் சிறிதளவு கட்டணத்தை கண் துடைப்பிற்காக குறைப்பதும் வாடிக்கையாக உள்ளது. உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர்கள், வாடகை வாகன உரிமையாளர்கள் ஆகியோர்களை அழைத்து கட்டணங்களை உயர்த்தும் போது எப்போதாவது வனத்துறையினர் ஆலோசனை நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பேரிஜம் செல்லும் நுழைவாயில் கட்டணத்தை வனத்துறை உயர்த்தியுள்ளது.இதனால் பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் வெளியூரிலிருந்து வரும் வாடகைக்கு வாகன ஓட்டுநர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பெட்ரோல் டீசல் உயர்த்தியதால் தங்களது வாடகை கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், இதே போல் வனத்துறை சுற்றுலா தலங்களிலும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் தாங்களும் வாடகை கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் மீண்டும் பேரிஜம் செல்லும் நுழைவாயில் கட்டணத்தை உயர்த்தி உள்ளதால் வாடகை வாகன கட்டணத்தை தாங்கள் மீண்டும் உயர்த்தும் நிலையில் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்லும் பயணத்தை ரத்து செய்து விடுவார்கள்.

    தங்களுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் வனத்துறையினர் அடிக்கடி கட்டணங்களை உயர்த்துவதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது கார்களுக்கு 300 ரூபாயாகவும், வேன்களுக்கு 600 ரூபாயாகவும் உயர்த்தி உள்ளதை மறு பரிசீலனை செய்து முன்பு போல கார்களுக்கு 200, வேன்களுக்கு 300 ரூபாய் என நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தங்களின் வேண்டுகோளாக உள்ளதாக வாடகை வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

    • பொதுமக்கள் இங்குள்ள குறுகிய அளவில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்துவதில் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
    • இடிந்து விழும் நிலையிலும் புதர் மண்டியும் உள்ள மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய 2 அலுவலகங்களையும் அகற்றினால் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் சிரமம் குறையும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அண்ணா சாலை நகரப் பகுதிகளில் மிகவும் பரபரப்பான சாலையாகும். இப்பகுதியில் தாலுகா அலுவலகம், குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையம், சார்நிலை கருவூலம், சார்பதிவாளர் அலுவலகம், இ-சேவை மையம், குடிமைப் பொருள் வட்ட வழங்கல் அலுவலகம் என அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இங்குள்ள குறுகிய அளவில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்துவதில் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    பழைய தாலுகா அலுவல கம், பழைய மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டது. ஆனால் இக்கட்டிடங்கள் இடிந்து விடும் நிலையில் இருந்தும் அகற்றாததால் கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த அலுவல கங்களுக்கு நுழையும் வழியில் முன்பு நீதிமன்றமாக இயங்கி வந்து தற்போது குடிமைப்பொருள் வட்ட வழங்கல் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

    அந்த அலுவலகத்தை பழைய தாலுகா அலுவலகத்துக்கு மாற்றவும், இடிந்து விழும் நிலையிலும் புதர் மண்டியும் உள்ள மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய 2 அலுவலகங்களையும் அகற்றினால் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் சிரமம் குறையும். மேலும் மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டு வரும் வணிக வளாகப் பகுதியில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால் அங்கு வரும் பொதுமக்களும் இப்பகுதி யில் தங்கள் வாகனங்களை நிறுத்தும் சூழல் உள்ளது.

    தற்போது இந்த அலுவலகங்களுக்கு செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக சிதிலம் அடைந்துள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சிரம மடைந்து வருகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. பல்வேறு அலுவலகங்கள் நிறைந்த இப்பகுதியில் முறையான சாலை வசதியையும் கார்கள் நிறுத்தும் வசதியையும் மாவட்ட நிர்வாகம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.
    • விபத்தில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்ப த்தை சேர்ந்தவர்கள் என்ப தும், இவர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது இந்த விபத்து நடந்தது எனவும் தெரியவந்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் இன்று காலை 4 மணியளவில் சாலையோரம் இருந்த மரத்தில் வேன் மோதி விபத்தில் சிக்கியது. இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அவர்கள் திண்டுக்கல் காந்திபுரம் நத்தப்பட்டியை சேர்ந்த நாகராஜ்(32), பாலாஜி(35), மணிவேல் மனைவி நிலா(30), அவர்களது மகன் பூபதி(13), பூஜா(13), பாலையா(44), அவரது மகள் ஹாசினி(9), பழனி ச்சாமி மனைவி பால ம்மாள்(44) என தெரிய வந்தது.

    விபத்தில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்ப த்தை சேர்ந்தவர்கள் என்ப தும், இவர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது இந்த விபத்து நடந்தது எனவும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×