என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் இளம்பெண் அடித்துக்கொலை?
    X

    கோப்பு படம்.

    திண்டுக்கல்லில் இளம்பெண் அடித்துக்கொலை?

    • கடந்த 2 நாட்களாக இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இந்த நிலையில் சேகர் வெளியே வந்து தனது மகள் தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார்.
    • அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரது மகள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் சேகர். நெசவு தொழில் பார்த்து வந்த இவர் தற்போது வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வீட்டிலேயே நெசவு செய்து வருகிறார்.

    இவர்களது மகள் ஹரிப்பிரியா (வயது22). பட்டதாரியான இவருக்கு திருமணமாகவில்லை. பெரும்பாலும் வீட்டை விட்டு தாய், மகள் வெளியே வருவதில்லை. சேகர் மட்டும் தொழில் நிமித்தமாக சென்று வந்துள்ளார்.

    கடந்த 2 நாட்களாக இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இந்த நிலையில் சேகர் வெளியே வந்து தனது மகள் தவறி விழுந்து விட்டதாகவும், இதனால் 2 நாட்கள் பட்டினியாக உள்ளதால் உணவு தரும்படி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ஹரிப்பிரியா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

    இது குறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது ஹரிப்பிரியா உயிரிழந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்து கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஹரிப்பிரியா இறந்து 2 நாட்களுக்கு பின்னர் தகவல் தெரிவித்தது ஏன்? என்ற கோணத்தில் போலீசார் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×